சிவகாசியில் பணி புரியும் தோழர் R .கருப்பசாமி ,TT , காரிசேரி அவர்களின் தந்தையார் இன்று காலமானார் .அன்னார் மறைவால் துயருறும் அவர்தம் குடும்பத்தார்க்கு BSNLEU மாவட்ட சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது
Saturday, March 30, 2019
Thursday, March 28, 2019
தோழர் முருகையா பட திறப்பு நிகழ்ச்சி
நெஞ்சம் நெகிழ்ந்த நினைவஞ்சலி
விருதுநகர் மாவட்ட BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களின் சார்பாக தோழர் முருகையா பட திறப்பு நிகழ்ச்சி இன்று 28/03/2019 இன்று விருதுநகர் முதன்மை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் மாலை 3 மணிக்கு மாவட்ட தலைவர் R.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் A.கண்ணன் அஞ்சலி உரை நிகழ்த்தி அவருடன் பணி செய்த நினைவுகளை பகிர்ந்தார் .அவர் அஞ்சலி உரை நிகழ்த்தியவுடன் அனைவரும் மறைந்த வர்க்க போராளி தோழர் முருகையா அவர்களுக்கு கனத்த இதயத்துடன் மௌன அஞ்சலி செலுத்தினர் .அதன் பின் தோழர் முருகையா அவர்களின் திரு உருவ படத்தை மாநில அமைப்பு செயலர் தோழர் A .சமுத்திரக்கனி திறந்து வைத்து உரை நிகழ்த்தினார் .மறைந்த தலைவர்க்கு அஞ்சலி செலுத்தி தோழர்கள் ரவீந்திரன் , இளமாறன் ,வெள்ளை பிள்ளையார் ,முத்துச்சாமி ,தோழர் காதர் மொய்தீன் ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக அதன் மாவட்ட தலைவர் தோழர் T .ராதாகிருஷ்ணன் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ,SDE,விருதுநகர் SNEA சங்கம் சார்பாக தோழர் காளியப்பன் ,AGM,விருதுநகர் ,தோழர் முருகையா அவர்களின் புதல்வன் திரு ,பாரதிராஜா ஆகியோர் பேசினர் .மாவட்ட பொருளாளர் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியறிதலை கூற நிகழ்வு முடிவுற்றது .
Wednesday, March 27, 2019
வர்க்க போராளி தோழர் M .முருகையா பட திறப்பு நிகழ்ச்சி
இடம் :- GM அலுவலகம் ,விருதுநகர் நேரம் மாலை : 3 மணி
தலைமை :- தோழர் R .ஜெயக்குமார் , மாவட்ட தலைவர் ,BSNLEU
முன்னிலை :- தோழர் .S .ரவீந்திரன் ,மாவட்ட செயலர் ,BSNLEU
அஞ்சலி உரை :- 1. தோழர் A . கண்ணன் ,மாவட்ட உதவி செயலர் ,BSNLEU
2.தோழர் .C .சந்திரசேகரன்,,மாவட்ட உதவி செயலர்
3.தோழர் வேலுச்சாமி ,மாநில அமைப்பு செயலர் ,TNTCWU
4.தோழர் .M .S .இளமாறன் ,GM ஆபீஸ் கிளை செயலர்
5.தோழர் S .செந்தில்குமார் ,மாவட்ட செயலர் ,SNEA
6.தோழர் ,பிச்சைக்கனி ,மாவட்ட செயலர் ,AIBSNLEA
7.தோழர் .வெங்கடேஷ் ,JTO,ராஜபாளையம்
8.தோழர் H .காதர் மொய்தீன் ,கிளை செயலர் சாத்தூர்
தோழர் முருகையா திரு உருவ படத்தை திறப்பவர் :- தோழர் சமுத்திரக்கனி ,மாநில அமைப்பு செயலர் ,BSNLEU ,தமிழ் மாநிலம்
நன்றியுரை :- தோழர் பாஸ்கரன் ,மாவட்ட பொருளாளர்
Tuesday, March 26, 2019
வர்க்க போராளி தோழர் M .முருகையா பட திறப்பு நிகழ்ச்சி
வர்க்க போராளி தோழர் M .முருகையா பட திறப்பு நிகழ்ச்சி
BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களின் இணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் விருதுநகரில் 28/03/2019 அன்று வியாழக்கிழமை நடைபெற உள்ளது .அதன் ஒரு பகுதியாக நமது அருமை தோழர் மறைந்த முருகையா அவர்களின் திரு உருவ பட திறப்பு நிகழ்ச்சி மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது .மாவட்டத்தில் அனைத்து தோழர்களும் திரளாக பங்கேற்று மறைந்த தோழனுக்கு அஞ்சலி செலுத்துவோம் .
சங்க அமைப்பு தினம் மற்றும் தோழர் முருகேசன் ,ஓட்டுநர் ,STSR , விருதுநகர் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா
சங்க அமைப்பு தினம் மற்றும் தோழர் முருகேசன் ,ஓட்டுநர் ,STSR , விருதுநகர் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா வரும் 28/03/2019 வியாழக்கிழமை அன்று GM அலுவலக வளாகத்தில் மாலை 5 மணிக்கு கிளை தலைவர் தோழியர் தனலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது .அனைத்து தோழர்களும் தோழியர்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் .
வரவேற்புரை :- தோழர் .இளமாறன் கிளை செயலர்
சிறப்புரை :- தோழர் R .ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர்
தோழர் S.ரவீந்திரன் ,மாவட்ட செயலர்
பணி ஒய்வு பாராட்டு பெறும் தோழர் முருகேசன் அவர்களுக்கு சந்தன மாலை அணிவிப்பவர் :- தோழர் .A.மாரிமுத்து கிளை செயலர்
பொன்னாடை போர்த்தி கவரவிப்பவர் :- தோழர் சந்திரசேகரன் ,மாவட்ட உதவி செயலர்
மாவட்ட சங்கம் சார்பாக நினைவு பரிசை வழங்குபவர் தோழர் . தோழர் சிங்காரவேலு ,மாவட்ட உதவி தலைவர்
கிளை சங்கம் சார்பாக நினைவு பரிசை வழங்குபவர்கள் தோழர்கள் இளமாறன் ,கிருஷ்ணகுமார் மற்றும் மாரியப்பா
நன்றி நவிலல் தோழர் பாஸ்கரன் மாவட்ட பொருளாளர்
Thursday, March 21, 2019
அஞ்சலி
நமது மாவட்டத்தின் அருமை தோழர் M .முருகையா அவர்கள் நமது மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் அத்துணை மாவட்டங்களிலும் தனது தொழிற்சங்க பணியால் ஒரு சிறப்பு மிக்க தலைவனாக வலம் வந்தவர் .ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் தனி சிறப்பு மிக்க தோழர் .பரிவு அடிப்படையில் பணி நியமனம் பெற்று தந்து பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றியவர் . தமிழ் மாநில சங்கத்தின் உதவி செயலராக ,TNTCWU சங்கத்தின் மாநில தலைவராக ,CCWF அனைத்திந்திய சங்கத்தின் ஒரு பொறுப்பாளராகவும் திகழ்ந்த தோழர் முருகையா அவர்கள் இன்று மாலை 6 மணிக்கு உடல் நல குறைவால் காலமானார் .அன்னார் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட BSNLEU மற்றும் TNTCWU சங்கங்கள் தனது செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது . அவரது இறுதி நிகழ்ச்சி 22/03/2019 அன்று மதியம் 2 மணிக்கு சாத்தூர் நகரில் பஸ் நிலையம் அருகில் உள்ள தென்வடல் புது தெருவில்உள்ள அவரது இல்லத்தில் இருந்து நடைபெற உள்ளது .
Monday, March 18, 2019
இரங்கல்
சிவகாசியில் பணி புரியும் தோழியர் S .பாண்டிச்செல்வி அவர்களின் தாயார் நேற்று (17/03/2019) இரவு காலமானார் .அவர் மறைவால் துயருறும் அவர்தம் குடும்பத்தார்க்கு மாவட்ட சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது ,
Friday, March 8, 2019
உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு
CMD BSNLஐ AUAB தலைவர்கள் 07.03.2019 அன்று சந்திப்பு- தொடர் உண்ணாவிரதம் ஒத்தி வைப்பு
07.03.2019 அன்று நடைபெற்ற AUAB கூட்ட முடிவுகளின் அடிப்படையில் அன்று மாலையே AUAB தலைவர்கள் BSNL CMD அவர்களை சந்தித்தனர். நிர்வாகத்தின் தரப்பில் மனிதவள இயக்குனரும் உடன் இருந்தார். பிப்ரவரி மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும், 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றதற்காக AUAB தலைவர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் BSNL CMD அவர்களிடம் AUAB தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டிருந்த GPF/EPF, வங்கி தவணைகள் மற்றும் இதர தொகைகள் அனைத்தையும் பிப்ரவரி மாதம் வரையில் BSNL நிறுவனம் முழுமையாக செலுத்தி விட்டதாக CMD BSNL தெரிவித்தார். இதற்கு மேல் ஊழியர்களின் ஊதியத்திற்கு தரவேண்டிய 700 கோடி ரூபாய்களுக்கான நிதி நிர்வாகத்திடம் இல்லையென அவர் தெரிவித்தார். வங்கிகளிடம் இருந்து கடனை பெறுவதற்கு DoT அனுமதிக்காததால், தனது தினசரி வருவாய் வசூலையே BSNL நம்பி இருக்க வேண்டி உள்ளது. தற்போது தினம் ஒன்றுக்கு ரூ.70 கோடி ரூபாய்கள் மட்டுமே வசூலாவதால், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பத்து நாட்கள் பிடிக்கும். எனினும், விரைவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு நிர்வாகம் முயற்சி செய்யும்.பழி வாங்குதல் நடவடிக்கைகள் தொடர்பாக கூறுகையில், DoTயின் கறாரான உத்தரவின் படிதான் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, BSNL CMD மற்றும் மனிதவள இயக்குனர் ஆகிய இருவரும் தெரிவித்தனர். ஆனால் நிர்வாகம் இதுவரை யாரையும் தண்டிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். BSNL CDA விதிகளில் FR 17A இல்லையென்பதால், தலைவர்களுக்கு FR 17A அடிப்படையில் விளக்கம் கோரும் கடிதம் கொடுத்துள்ளது சரியல்ல என AUAB தலைவர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த மனிதவள இயக்குனர், இது தொடர்பாக பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.பிப்ரவரி மாத ஊதியத்தை விரைவில் பட்டுவாடா செய்யவும், பணி முறிவு பிரச்சனையை பரிசீலிப்பதாகவும் CMD BSNL கொடுத்துள்ள உறுதிமொழியின் அடிப்படையில், கார்ப்பரேட் அலுவலகத்தில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்தை AUAB ஒத்தி வைத்துள்ளது.
உலகமகளிர் தின சிறப்பு கூட்டம்
முதன்மை பொதுமேலாளர் அலுவலக கிளை மற்றும் ஒப்பந்த ஊழியர் விருதுநகர் கிளை சங்கம் சார்பாக உலகமகளிர் தின சிறப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .நடைபெற்ற கூட்டத்திற்கு GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் விருதுநகர் OD கிளை செயலர் தோழர் மாரிமுத்து தலைமை தாங்கினர் .மாவட்ட செயலர் ரவீந்திரன் தனது உரையில் ஆதிகால பொதுவுடமை சமுதாயத்தில் பெண்கள் வகித்த முன்னணி பங்கு ,மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற பெண்களின் போராட்டம் ,தற்போது BSNL ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றை விரிவாக பேசி நம்முன் இருக்கின்ற ஜனநாயக கடமையை உரிய முறையில் பொதுத்துறைகளை காக்க கூடிய இயக்கங்களுக்கு ஆதரிக்க செய்வது தான் இந்த மகளிர் தின சபதமாக கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார் .தோழர்கள் மாரிமுத்து மற்றும் இளமாறன் அவர்கள் வாழ்த்தி பேசினார்கள் .
CMD அவர்களுடன் பேச்சுவார்த்தை
AUAB தலைவர்கள் நமது CMD அவர்களுடன் நேற்று மாலை பிப்ரவரி மாத சம்பளம் அணைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பட்டுவாடா செய்யாமல் இருப்பது விசயமாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது விஷயமாகவும் பேச்சுவார்த்தை நடத்தினர் .அப்போது நமது CMD அவர்கள் பிப்ரவரி மாதம் வரை அனைவர்க்கும் GPF ,EPF ,பேங்க் லோன் ,LIC மற்றும் இதர பிடித்தங்கள் முறையாக செலுத்தப்பட்டு விட்டது என்றும் அதனால் சம்பளம் போடுவதற்கு நிதி இல்லை என்றும் ,தற்போது சம்பளம் வழங்க ரூபாய் 700 கோடி ஆகும் என்றும் ,தற்போது ஒரு நாளைக்கு 70 கோடி வீதம் வருமானம் வருவதாகவும் ,அந்த வருமானத்தில் வைத்து தான் சம்பளம் வழங்க வேண்டியது உள்ளதால் 700 கோடி வந்தவுடன் சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என உறுதி அளித்தார் .மேலும் நமது BSNL நிறுவனம் வங்கிகளில் இருந்து கடன் வாங்குவதற்கு DOT ஒப்புதல் தரவில்லை என கூறினார் .அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி DOT உத்தரவிட்டும் இதுவரை எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறினார் .இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் AUAB சார்பாக துவங்க இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது .
Sunday, March 3, 2019
நன்றி
தோழர் சமுத்திரம் அவர்கள் இல்ல திருமண விழாவை ஒட்டி ,அந்த தோழர் 02/03/2019 நடைபெற்ற மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு மதிய உணவு செலவை ஏற்று கொண்டார் , தோழர் சமுத்திரம் அவர்களுக்கு மாவட்ட சங்கம் தனது நன்றியை தெரிவித்து கொள்கிறது .
Saturday, March 2, 2019
5வது மாவட்ட செயற்குழு
விருதுநகர் BSNLEU சங்கத்தின் 5வது மாவட்ட செயற்குழு ஸ்ரீவில்லிபுத்தூரில் மிக சிறப்பாக நடைபெற்றது .செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் R ,ஜெயக்குமார் தலைமை வகித்தார் .மாவட்ட உதவி செயலர் தோழர் வெள்ளைப்பிள்ளையார் தியாகிகளுக்கு அஞ்சலி தீர்மானத்தை வாசிக்க அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் .அதன் பின் தலைவர் விவாதக்குறிப்புக்கு ஒப்புதல் கேட்க ,விவாத குறிப்பு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது .முறையாக மாவட்ட செயற்குழுவை மாநில அமைப்பு செயலர் தோழர் A .சமுத்திரக்கனி துவக்கி வைத்தார் ,அதன் பின் விவாத குறிப்பை விளக்கி மாவட்ட செயலர் பேசினார் ,நடந்து முடிந்த ஜனவரி 8,9 போராட்டம் மற்றும் 18 முதல் 20 வரை நடைபெற்ற மூன்று நாட்கள் வேலை நிறுத்தங்களில் நமது கிளைகளில் ஏற்பட்ட பலம் மற்றும் பலவீனங்களை எடுத்துரைத்தார் .வர இருக்கும் காலங்களில் சரி செய்யப்பட வேண்டிய விசயங்களை அவர் சுட்டி காட்டினார் .ஒட்டு மொத்தமாக பார்த்தால் 3 நாள் வேலை நிறுத்தத்தில் அதிக ஊழியர்கள் பங்கேற்க வைப்பதில் முனைப்பு காட்டிய அத்துணை தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் நன்றியை தெரிவித்தது .மாநில சங்க நிதியாக அனைத்து உறுப்பினர்களிடம் தலா 200 வீதம் நன்கொடை பெற்று அனுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு மாவட்ட செயற்குழு கேட்டு கொண்டது ,மாறுதல் கொள்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை மாவட்ட செயற்குழுவில் விரிவாக விவாதம் செய்யப்பட்டது ,மாவட்டத்தில் உள்ள அனைத்து மாறுதல்களையும் ஒட்டு மொத்தமாக அமல்படுத்தி பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைக்க மாவட்ட செயற்குழு முடிவு எடுத்தது .நமது தோழமை சங்கத்துடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் இந்த அம்சங்களை கணக்கில் எடுத்து பேச மாவட்ட செயற்குழு ஒப்புதல் கொடுத்தது .தோழமை சங்கத்துடன் பேசி அடுத்த கட்டமாக கிளை செயலர் கூட்டத்தில் இறுதி முடிவை நமது சங்கம் எடுக்கும் ,முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் ஒரு நல சங்கம் அறிவிப்பு பலகையில் தொடர்ந்து தரக்குறைவாக எழுதப்படுவது வாடிக்கையாகிவிட்டது .மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை பேசியும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் அனுஷ்டிக்கிறது .இந்த மௌனத்தை கலைக்க ஒரு நீண்ட நெடிய போராட்ட திட்டத்தை மாவட்ட செயற்குழு ஏகமனதாக எடுத்துள்ளது .
1.முதன்மை பொது மேலாளர் மற்றும் தலைமை பொது மேலாளர் அவர்களுக்கு அனைத்து ஊழியர்களும் அஞ்சல் அட்டை அனுப்புவது .(POST CARD CAMPAIGN).
2.முதன்மை பொது மேலாளரை சந்திப்பது .
3.ஒரு நடவடிக்கையும் இல்லை என்றால் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிய மாவட்ட நிர்வாகத்தின் கையாலாகாத போக்கை கண்டித்து காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்துவது .
4. மாநில சங்கம் மூலமாக தலைமை பொது மேலாளரை சந்திப்பது .
மார்ச்சில் பணி ஓய்வு பெற இருந்தாலும் நான் போராட்டத்தில் பின்வாங்கமாட்டேன் என்று சொல்லி 3 நாட்கள் போராட்டத்தில் முத்திரை பதித்த தோழன் மாயக்கிருஷ்ணன் ,TT அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெரவித்தார் மாநில சங்க நிர்வாகி தோழர் சமுத்திரக்கனி
மாவட்ட சங்கம் சார்பாக நினைவு பரிசு வழங்கிய தோழர் தங்கதுரை மற்றும் கிளை செயலர் வெங்கடசாமி
ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் புதிய மாவட்ட செயலராக தேர்ந்து எடுக்கப்பட்ட தோழர் B.ராஜா ,சாத்தூர்
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...