விருதுநகர் BSNLEU சங்கத்தின் 5வது மாவட்ட செயற்குழு ஸ்ரீவில்லிபுத்தூரில் மிக சிறப்பாக நடைபெற்றது .செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் R ,ஜெயக்குமார் தலைமை வகித்தார் .மாவட்ட உதவி செயலர் தோழர் வெள்ளைப்பிள்ளையார் தியாகிகளுக்கு அஞ்சலி தீர்மானத்தை வாசிக்க அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் .அதன் பின் தலைவர் விவாதக்குறிப்புக்கு ஒப்புதல் கேட்க ,விவாத குறிப்பு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது .முறையாக மாவட்ட செயற்குழுவை மாநில அமைப்பு செயலர் தோழர் A .சமுத்திரக்கனி துவக்கி வைத்தார் ,அதன் பின் விவாத குறிப்பை விளக்கி மாவட்ட செயலர் பேசினார் ,நடந்து முடிந்த ஜனவரி 8,9 போராட்டம் மற்றும் 18 முதல் 20 வரை நடைபெற்ற மூன்று நாட்கள் வேலை நிறுத்தங்களில் நமது கிளைகளில் ஏற்பட்ட பலம் மற்றும் பலவீனங்களை எடுத்துரைத்தார் .வர இருக்கும் காலங்களில் சரி செய்யப்பட வேண்டிய விசயங்களை அவர் சுட்டி காட்டினார் .ஒட்டு மொத்தமாக பார்த்தால் 3 நாள் வேலை நிறுத்தத்தில் அதிக ஊழியர்கள் பங்கேற்க வைப்பதில் முனைப்பு காட்டிய அத்துணை தோழர்களுக்கும் மாவட்ட சங்கம் நன்றியை தெரிவித்தது .மாநில சங்க நிதியாக அனைத்து உறுப்பினர்களிடம் தலா 200 வீதம் நன்கொடை பெற்று அனுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு மாவட்ட செயற்குழு கேட்டு கொண்டது ,மாறுதல் கொள்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை மாவட்ட செயற்குழுவில் விரிவாக விவாதம் செய்யப்பட்டது ,மாவட்டத்தில் உள்ள அனைத்து மாறுதல்களையும் ஒட்டு மொத்தமாக அமல்படுத்தி பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைக்க மாவட்ட செயற்குழு முடிவு எடுத்தது .நமது தோழமை சங்கத்துடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் இந்த அம்சங்களை கணக்கில் எடுத்து பேச மாவட்ட செயற்குழு ஒப்புதல் கொடுத்தது .தோழமை சங்கத்துடன் பேசி அடுத்த கட்டமாக கிளை செயலர் கூட்டத்தில் இறுதி முடிவை நமது சங்கம் எடுக்கும் ,முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் ஒரு நல சங்கம் அறிவிப்பு பலகையில் தொடர்ந்து தரக்குறைவாக எழுதப்படுவது வாடிக்கையாகிவிட்டது .மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை பேசியும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் அனுஷ்டிக்கிறது .இந்த மௌனத்தை கலைக்க ஒரு நீண்ட நெடிய போராட்ட திட்டத்தை மாவட்ட செயற்குழு ஏகமனதாக எடுத்துள்ளது .
1.முதன்மை பொது மேலாளர் மற்றும் தலைமை பொது மேலாளர் அவர்களுக்கு அனைத்து ஊழியர்களும் அஞ்சல் அட்டை அனுப்புவது .(POST CARD CAMPAIGN).
2.முதன்மை பொது மேலாளரை சந்திப்பது .
3.ஒரு நடவடிக்கையும் இல்லை என்றால் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிய மாவட்ட நிர்வாகத்தின் கையாலாகாத போக்கை கண்டித்து காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்துவது .
4. மாநில சங்கம் மூலமாக தலைமை பொது மேலாளரை சந்திப்பது .
மார்ச்சில் பணி ஓய்வு பெற இருந்தாலும் நான் போராட்டத்தில் பின்வாங்கமாட்டேன் என்று சொல்லி 3 நாட்கள் போராட்டத்தில் முத்திரை பதித்த தோழன் மாயக்கிருஷ்ணன் ,TT அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெரவித்தார் மாநில சங்க நிர்வாகி தோழர் சமுத்திரக்கனி
மாவட்ட சங்கம் சார்பாக நினைவு பரிசு வழங்கிய தோழர் தங்கதுரை மற்றும் கிளை செயலர் வெங்கடசாமி
ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் புதிய மாவட்ட செயலராக தேர்ந்து எடுக்கப்பட்ட தோழர் B.ராஜா ,சாத்தூர்
No comments:
Post a Comment