தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக நடைபெற்றுள்ள தேர்தலில், 7வது முறையாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரலாற்று சாதனையை மீண்டும் ஒரு முறையை BSNL ஊழியர் சங்கம் படைத்துள்ளது. BSNL ஊழியர் சங்கத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும், சதிகளையும் துரோகங்களையும் தாண்டி இந்த மகத்தான வெற்றியை நமது சங்கம் பெற்றுள்ளது. BSNL நிறுவனத்தையும், அதன் ஊழியர்களையும், அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் ஒரே சங்கம் BSNL ஊழியர் சங்கம் தான் என பெரும்பாலான ஊழியர்கள் நம்பிக்கை வைத்துள்ளதை இந்த வெற்றி பறை சாற்றுகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக, BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய, மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளும், முன்னணி ஊழியர்களும், TNTCWU மற்றும் AIBDPA தலைவர்களும் கடுமையாக செய்திட்ட தேர்தல் பணிகளின் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது. அத்தனை தோழர்களையும் தமிழ் மாநில சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
அனைத்திற்கும் மேலாக நமது சங்கத்தின் தலைமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாக்களித்து வரும் அனைத்து தோழர்களுக்கும் தமிழ் மாநிலச் சங்கம் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராடுதல்களையும், நன்றிகளையும் உரித்தக்கிக் கொள்கிறது.