Saturday, June 29, 2013

நிவாரண நிதி

          நமது BSNL நிறுவனம் உத்தரகான்ட் வெள்ள நிவாரணமாக பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு 18 கோடி ரூபாய் கொடுக்க முடிவு  செய்துள்ளது. இதற்காக BSNL ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை கொடுக்க உள்ளனர்.

விரிவான செய்திக்கு : CLICK HERE

மாநில செயற்குழு கூட்டம்

          பிஎஸ்என்எல் ஊழியர் சங்கதின்  தமிழ்நாடு  மாநில  செயற்குழு கூட்டம் தோழர் K .மாரிமுத்து, மாநில தலைவர் தலைமையில் 29.06.2013 அன்று  நடைபெற்றது. மாநில செயற்குழுவை  தோழர் P.அபிமன்யு, பொது செயலர்  அவர்கள் தொடக்கி வைத்தார். மாநில செயலர் தோழர் S.செல்லப்பா அவர்கள் நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார்.

          தோழர் K.கோவிந்தராஜன், மாநில செயலர், சென்னை தொலைபேசி  அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்பொதுச்செயலர் P.அபிமன்யு  அவர்கள் பேசுகையில்  6வது  சரிபார்ப்பு தேர்தலில் நமது  வெற்றியின்  சிறப்பம்சங்களையும், 78.2%IDA இணைப்பு வெற்றியில் BSNLEU  சங்கத்தின் முக்கிய   பங்கையும் விவரித்தார் 6ஆவது சரிபார்ப்பு தேர்தலுக்குப்பின் புதிய சூழல் உருவாகி உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

          பிஎஸ்என்எல் திறன் மேம்படுத்த நாடுதழுவிய பிரசாரம் நடத்த JOINT  FORUM  முடிவு செய்து வரும் 03.08.2013 அன்று புதுதில்லியில்  தேசிய கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக கூறினார். 03-07-2013 முதல் நெய்வேலி  ஊழியர்கள் பங்கு   விற்பனைக்கு எதிராக செய்யவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு  ஆதரவாக 04-07-2013 அன்று அனைத்து  கிளைகளிலும் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது.

செய்திக்கு : CLICK HERE

கிளைக் கூட்டமும் பணி ஓய்வு பாராட்டும்

          அருப்புக்கோட்டை கிளையின் பொதுக்குழு 28-06-2013 வெள்ளிக் கிழமை மாலை கூடியது. பொதுக்குழுவிற்கு கிளைத்தலைவர் தோழர் U.B.உதயகுமார் தலைமையேற்றார். தோழர் தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார். தோழர் ஜெயக்குமார் பொதுக்குழுவைத் தொடங்கி வைத்து , இன்றைய அஜென்டாவை விளக்கிப் பேசினார்.

          இம்மாதம் ஓய்வுபெறும் நமது கிளைத் தோழர்கள் மங்கையன் மற்றும் குமராண்டி இருவரையும் வாழ்த்தியும், ஒப்பந்த ஊழியர்களின் அருப்புக்கோட்டை கிளைச் செயலராக பொறுப்பேற்ற தோழர் செந்தில்குமார் மற்றும் விருதுநகர் மாவட்டச் செயலராகப் பொறுப்பேற்ற தோழர் முனியசாமி இருவரையும் வாழ்த்தியும், அருப்புக்கோட்டை கிளை மாநாடு நடத்துவது தொடர்பாகவும் மாவட்ட துணைத்தலைவர் தோழர் சந்திரசேகரன், தோழர் சோலை, தோழர் சுப்புராம், தோழர் ஜெயகண்ணன், தோழர் அய்யனார் ஆகியோர் பேசினார்கள்.

          இன்றைய சூழலில் நாம் அடைந்த வெற்றகளையும் அதன் பின் இருக்கும் ஒற்றுமை பற்றியும் பொய்யான பரப்புரைகள் பற்றியும் இப்படியான சூழலில் வேலைக்கலாச்சாரம் மேம்பட நமது மத்திய சங்க முயற்சிகள் நமது கடமை மற்றும் ஜூலை 16ல் நடக்கவிருக்கும் கருத்தரங்கம் பற்றியும் உத்தர்காண்ட் சேதம் மற்றும் அது தொடர்பான நமது நிலை பற்றியும் மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் மதிகண்ணன் எடுத்துரைத்தார்.

          ஓய்வு பெறும் தோழர்களுக்கு கிளைத் தலைவர் உதயகுமார் நினைவுப் பரிசை வழங்கினார். பாராட்டப்பெற்ற தோழர்கள் மங்கையன், குமராண்டி, செந்தில்குமார், முனியசாமி ஆயியோர் ஏற்புரை வழங்கினர். ஜூலை 13 (இரண்டாம் சனிக்கிழமை) மாலை 3 மணி தொடங்கி கிளை மாநாடு நடத்துவதென்றும், மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரனுடன் கலந்து பேசி மாநிலச் சங்க நிர்வாகிகளில் ஒருவரை கிளை மாநாட்டிற்கு அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கிளையின் பொருளாளர் தோழர் சோலை அவர்களின் நன்றியுடன் பொதுக்குழு நிறைவுற்றது.

Friday, June 28, 2013

புதிய உறுப்பினர் சேர்ப்பு படிவம்

புதிய உறுப்பினர் சேர்ப்பு படிவம்
டவுன்லோட் செய்ய : CLICK HERE

தோழர் .M .பெருமாள்சாமி ,CTS பணி ஒய்வு பாராட்டு விழா

          விருதுநகர் மாவட்ட தொலைத்  தொடர்பு அலுவலக கிளைச்சங்கம் சார்பாக தோழர் M.பெருமாள்சாமி, CTS அவர்களுக்கு 28-06-2013 அன்று மாவட்டச்சங்க அலுவலகத்தில்  பணி ஒய்வு பாராட்டு விழா - கிளைத்தலைவர் தோழர் A.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. தோழர் M.S.இளமாறன், கிளைச்செயலர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தோழர் M.பெருமாள்சாமி அவர்களின் சங்கப் பணிகளையும், ஊழியர்களின்பால் அவரிடம் இருந்த உதவி செய்யும் குணநலன்களையும், விருதுநகர் மாவட்டத்தில் K.G.போஸ் அணியை வளர்ப்பதில் தோழர் M.அய்யாசாமி, தோழர் K.சின்னமுனியாண்டி, தோழர் V.K.பரமசிவம், தோழர் T.ராதாகிருஷ்ணன், தோழர் நாகராஜன், தோழர் முருகேசன் அவர்களுடன்  இணைந்து தோழர் M.பெருமாள்சாமி ஆற்றிய பணிகளை அனைவரும் நினைவு கூர்ந்தனர்.

          தோழரை வாழ்த்தி மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன், மூத்த கணக்கு அதிகாரி திரு. T.ராதாகிருஷ்ணன், தோழர் K.R.கிருஷ்ணகுமார், மாவட்ட உதவி செயலர். தோழர் M.முத்துசாமி, ஓய்வூதியர் சங்க தலைவர் S.முருகேசன், மாவட்ட பொருளர் தோழர் S.வெங்கடப்பன், SDOP கிளைச் செயலர் தோழர் C.சந்திரசேகரன், தோழியர் G.தனலெட்சுமி  ஆகியோர் பேசினர். தோழர் G.சந்திரசேகரன் அவர்கள் தோழர் பெருமாள்சாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தோழர் V.சுப்பிரமணியம் அவர்கள் சந்தன மாலை போட்டு கௌரவித்தார். மாவட்ட செயலர் தோழர் S.ரவீந்திரன் நினைவுப் பரிசை வழங்கினார். தோழர் T.சித்ரவேல் அவர்கள் நன்றியுரை கூறினார்.

Thursday, June 27, 2013

எளியவர்களின் நிவாரண நிதி

       

           
          உத்தர்காண்ட் நிவாரண நிதிக்காக டெல்லியில் குப்பை பொறுக்கும் தெருவோரக் குழந்தைகளின் குழு ஒன்று ரூபாய் 20,000 சேகரித்து பிரதம மந்திரியின் நிவாரண நிதியில் சேர்த்துள்ளார்கள். அவர்கள் நடத்தி வரும் ‘பாதே கதம்’ என்ற அமைப்பின் சார்பாக இதைச் செய்துள்ளார்கள்.
          உத்தர்காண்ட்  வெள்ளம் நிலச்சரிவில் சிக்கிய வீடற்ற குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இந்த நன்கொடை அளிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மனிதம் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது.


IDA உயர்வு

01-07-2013 முதல் IDA உயர்வு 4 % ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி படிக்க :-CLICK HERE

மாத சந்தா

          லூதியானா அனைத்திந்திய மாநாட்டின் முடிவின்படி நமது BSNLEU சங்கத்தின் மாத சந்தா தொகை ரூபாய் 30 ஆக உயர்த்தபட்டுள்ளது. இதில் ரூபாய் 10 மத்திய  சங்கத்திற்கும், ரூபாய் 8 மாநில சங்கத்திற்கும்,ரூபாய் 7 மாவட்ட சங்கதிற்கும், ரூபாய் 5 கிளை சங்கத்திற்கும் கோட்டா ஆக நிர்ணயிக்கபட்டுள்ளது . இது விசயமாக BSNL நிர்வாகம் இன்று உத்தரவு வெளியிட்டு விட்டது.
உத்தரவை படிக்க : -CLICK HERE

Wednesday, June 26, 2013

ஏர்டெல் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம்

          ரோமிங் விதிகளை மீறிய பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 650 கோடி அபராதத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துவிட்டது.
செய்தி படிக்க :-CLICK HERE

Sunday, June 23, 2013

ஒப்பந்த ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட 5 வது மாநாடு          ஒப்பந்த ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட 5 வது மாநாடு இன்று விருதுநகர் இல் BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் தோழர் செல்வராஜ், மாவட்ட தலைவர் தலைமையில் சீரும் சிறப்புமாய் நடைபெற்றது.
          ஒப்பந்த ஊழியர் சங்க கொடியை நமது மாவட்ட உதவி செயலர் M .பெருமாள்சாமி ஏற்றி வைக்க,தோழர் சிவஞானம்  கோஷம்  இட BSNLEU மகாநாட்டை தோழர் வேலுசாமி மாவட்ட செயலர் வரவேற்புரையுடன் துவக்கி வைத்தார்.
          BSNLEU  சங்க மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் துவக்க உரை ஆற்றினார். MAN POWER டெண்டர்  பகுதியில் வேலை செய்பவர்களுக்கு semi-skilled அடிப்படையில் ஊதியம் வழங்கப்படவேண்டும் எனவும், அப்போதுதான்  தேவையான எண்ணிக்கையில் MAN POWER பகுதியில் வேலைக்கு ஊழியர்கள் வருவார்கள் என குறிப்பிட்டார்.
          BSNLEU மாவட்ட செயலர் ரவிந்திரன் பேசுகையில்  நமது மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர் பிரச்னையில் நமது சங்கம் எடுத்துள்ள முயற்சிகளை விரிவாக பேசினார்.


          சிறப்புரையாக மாநில செயலர் தோழர் M.முருகையா அவர்கள் நமது சங்க முயற்சியால் தற்போது மாநில நிர்வாகம் பிரதி மாதம் 10 தேதிக்குள் ஒப்பந்த ஊழிய்ரகளுக்கு ஊதியம் வழக்கப்பட வேண்டும் என உத்தரவு இட்டதை சுட்டி காட்டினார்.
          ஒரு கருத்தோவியமான  ஆண்டு அறிக்கையை தோழர் மதிகண்ணன் வாசிக்க, அருப்புகோட்டை கிளை செயலர் தோழர் R.ஜெயக்குமார் அவர்கள் விக்கிரமாதித்தன் சிம்மாசன கதை சொல்லி நமது சங்கம் செய்துள்ள சாதனைகளை கூறினார்.
          மாநாட்டில் வரும் 30-06-2013 அன்று பணி ஒய்வு பெறும்  மூத்த தோழர் M .பெருமாள்சாமி அவர்கள் சால்வை போற்றி கௌரவிக்கபட்டார். 
          மாநாட்டில் தோழர்  செல்வராஜ், டி.எம். தோழர் முனியசாமி, தோழர் மாரிமுத்து  ஆகியோர் முறையே  தலைவர், செயலர், பொருளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய மாவட்ட  செயலர் தோழர் முனியசாமிக்கு BSNLEU மாவட்ட சங்கத்தின் புரட்சிகர  நல்வாழ்த்துக்கள் .

செய்தி

உத்தரகாண்ட் வெள்ளச்சேதம் : பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் உதவி செய்தி படிக்க :-Click Here

Saturday, June 22, 2013

என்.எல்.சி.யின் 5% பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!


          தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி என்.எல்.சி.யின் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. மத்திய அரசு பொதுத்துறை பங்குகளை விற்று நிதி திரட்ட முடிவு செய்தது. இதனடிப்படையில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 93.55% பங்குகள் உள்ளன. இதில் 10% பங்குகளை விற்றே ஆக வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகார கமிட்டி கூட்டத்தில் என்.எல்.சி.யின் 5% பங்குகளை விற்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 
          என்.எல்.சி. பங்கு விற்பனை மூலம் ரூ. 466 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி 7.8 கோடி பங்குகள் விற்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் அரசுக்கு ரூ. 466 கோடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வேகமாக செயல்படுத்தப்படும் என பிரதமரும், நிதி அமைச்சரும் அறிவித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்.எல்.சி.யின் 10% பங்குகளை விற்க முயற்சித்த போது, மக்களின் எதிர்ப்பைக் கண்டு அந்த முயற்சியில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியது. இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசுக்கு ஆதரவான கட்சிகள் கூட தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
          என்.எல்.சி.யின் பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ள செய்தி வெளியானதும் கடந்த மாதமே மார்க்சிஸ்ட் தனது எதிர்ப்பை தெரிவித்தது. பங்கு விற்பனையை கைவிடுமாறு தமிழக முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பொதுத்துறையை அழித்து தனியார்மயத்துக்கு வலுவூட்டும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
          ஆண்டுக்கு ரூ. 1,400 கோடி இலாபம் ஈட்டும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து, வெறும் ரூ. 466 கோடி திரட்டி மத்திய அரசு என்ன செய்யப்போகிறது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் உண்மையான நோக்கம் என்.எல்.சி. நிறுவனத்தைப் படிப்படியாக தனியாருக்குத் தாரைவார்க்க வேண்டும் என்பதுதான்.
          மின்சாரத் தேவைக்காக தமிழக மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் பொழுது, மிகக் குறைந்த விலையில் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் அளிக்கும் என்.எல்.சி. தனியார்மயமானால் தமிழக அரசு அதிக விலை கொடுத்து அங்கு உற்பத்தி ஆகும் மின்சாரத்தை வாங்க வேண்டி வரும். இதனால் ஏற்படும் சுமை முழுவதும் மக்கள் மீதுதான் ஏற்றப்படும்.
          நாட்டின் வளங்களைக் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 2 ஜி அலைக்கற்றை ஊழலில் ரூ. 1.76 இலட்சம் கோடி, நிலக்கரி ஊழலில் ரூ. 1.86 இலட்சம் கோடி இன்னும் பல்வேறு ஊழல்களின் மூலம் நாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது என்.எல்.சி. போன்று நாட்டுக்குப் பயன்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்து, தனியாருக்குத் தாரை வார்க்க துடித்துக் கொண்டிருக்கிறது.
          என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் மத்திய காங்கிரஸ் அரசின் முடிவு தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் மேலும் ஒரு துரோகமாகும். என்.எல்.சி. தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ள மத்திய அரசு, உடனடியாக 5 சதவிகித பங்குகள் விற்பனை முடிவைக் கைவிட வேண்டும் என்று ம தி மு க தலைவர் திரு.வை.கோ வலியுறுத்தியுள்ளார்.இந்த நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால், அந்த மாவட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. தனியாரிடம் விற்பனை செய்தால் மக்கள் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது என்றெல்லாம் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.
          மத்திய அரசு தனது 5 சதவிகித பங்குகளை விற்பதன் மூலமாக 466 கோடி ரூபாய் தான் மத்திய அரசுக்கு கிடைக்கக் கூடுமென்று தெரிகிறது. மத்திய அரசுக்கு இது ஒரு பெரும் தொகையல்ல. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தது 10 சதவிகிதம் பொதுமக்களிடம் இருக்க வேண்டும் என்ற இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) நிபந்தனை விதித்திருப்பதின் அடிப்படையிலேதான் இந்த முடிவு எடுக்கப்படுவதாக மத்திய அரசு கூறக்கூடும். ஆனால் இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு விலக்களிக்க பங்கு ஒப்பந்த விதிகள் சட்டத்திலே திருத்தம் கொண்டு வரலாம், அல்லது என்.எல்.சி நிறுவனத்தையே பங்குகள் விற்பனை செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலிலே இருந்து நீக்கி விடலாம் என்று தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு ஏற்கனவே எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பதையும் மத்திய அரசு கருத்திலே கொண்டும், ஏற்கனவே இதுபோல நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு பின்னர் தமிழகத்தின் வேண்டுகோளையேற்று அந்த முடிவினை தள்ளி வைத்ததை மனதிலே கொண்டும், தற்போது மத்திய அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவினை ரத்து செய்ய வேண்டுமென்று திமுகவின் சார்பில் திரு மு.கருணாநிதி  மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.இதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் என்.எல்.சி. பங்குகளை விற்க கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். நன்றி :- ONE INDIA 

Friday, June 21, 2013

பிரேசிலில் மக்கள் போராட்டம்


          விலைவாசி மற்றும் வரி உயர்வை எதிர்த்து பிரேசிலில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் உலக கால்பந்து போட்டிகள் நடத்தப்பட இருப்பதில் பல லட்சம் கோடி ஊழல் செய்யப்படுவதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. இதனால் அங்கு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். பிரேசிலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பமாகிய பொதுமக்களின் போராட்டம் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.போராட்டத்தில்  பல லட்சக்கணக்கானோர் குதித்துள்ளதுடன் பிரேசிலின் சுமார் 100 நகரங்களில் இவை நடப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
          அதிகரித்து வரும் போக்குவரத்துச் செலவு, வரி வசூலிக்கும் அரசு பொதுச் சேவைகளை ஒழுங்காக நிதி வழங்காமல் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக்கோப்பை கால்ப்பந்தாட்ட போட்டிகளையொட்டி பெரும் தொகை பணம் செலவிடப்படுவதாகவும் அதில் மிகப்பெரிய ஊழல் மோசடிகள் நடைபெற்று வருவதாகவும் கூறி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றத.போராட்டங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
          போராட்டங்களைக் கட்டுப்படுத்த போலீசார் கடுமையாக முயன்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.பல இடங்களில் கடைகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் பொதுச் சொத்துக்களும் பெரிய அளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. சில காலங்களாக அரபு நாடுகளில் இது போன்ற மிக பெரிய போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றைத் தொடர்ந்து பிரேசிலில் மக்கள் போராட்டம் எழுச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

செய்தி,

பிஎஸ்என்எல் நான்கு சர்வதேச ரோமிங் ஒப்பந்தங்களில்  கையெழுத்து இட்டுள்ளது .செய்தி படிக்க :-CLICK HERE

ஒப்பந்த ஊழியர் சம்பளம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரதி மாதம் 10 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க பட வேண்டும் என மாநில நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்ரகாண்ட் நிவாரண நிதி

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கடும்  வெள்ள பெருக்கால்  எராளமான உயிர்க்கும் ,உடமைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது . நமது மத்திய சங்கம் உத்ரகாண்ட் நிவாரண நிதியாக ஒவ்வோர் உறுப்பினரிடமும் ரூபாய் 200/ ஐ சம்பளத்தில் இருந்து  பிடித்து கொள்ள நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது . 

Thursday, June 20, 2013

OFF NET அழைப்பு

நமது BSNLEU சங்க வேண்டுகோளின் படி SE -DOT  தொலைபேசிகளில் OFF NET அழைப்புக்களை தடை  செய்யபட்டதை நிவர்த்தி செய்து மாநில பொது மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .

CMD அவர்களுடன் சந்திப்பு .

நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு  மற்றும் தோழர் .. ஸ்வபன் சக்ரவர்த்தி, உதவி பொது செயலர்  இன்று (20-06-2013)நமது CMD  ஸ்ரீ ஆர்.கே. உபாத்யாய் அவர்களை சந்தித்து  பின்வரும் பிரச்சனைகளை விவாதித்தனர்.விவாதித்த பிரச்சனைகளை படிக்க :-CLICK HERE

Wednesday, June 19, 2013

5வது விருதுநகர் மாவட்ட மாநாடு

CLICK HERE
தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த  
                      ஊழியர்   சங்கம் 
          5வது விருதுநகர் மாவட்ட மாநாடு 
            நாள் :-23-06-2013  ஞாயிற்று கிழமை 
           இடம் :- மாவட்ட சங்க அலுவலகம் 
     தலைமை :- M .செல்வராஜ் ,மாவட்ட தலைவர் 
வரவேற்புரை :-M .வேலுசாமி ,மாவட்ட செயலர் 
அஞ்சலி :- R .முனியசாமி , அமைப்பு செயலர் 
துவக்க உரை:-A .சமுத்திரகனி ,மாவட்ட தலைவர்       
                                       BSNLEU 
வாழ்த்துரை :-R .முத்துவேல் ,CITU 
                              M .அய்யாசாமி ,ஓய்வூதியர் சங்கம் 
சிறப்புரை :- தோழர் .M .முருகையா  
                             மாநில செயலர் 

அஞ்சலிசைக்கிள் பெடரேஷன் ஆப் இந்தியாவின் சார்பில் ஜூனியர் தேசிய குழுவின் சைக்கிள் போட்டி பயிற்சியாளராக பணியாற்றி வந்த ருமா சட்டோபாத்யாய் (50 ) நொய்டாவில் நேற்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.நேற்று காலை 6 மணி அளவில் நொய்டா அதிவிரைவு சாலையில் மாணவ-மாணவியர்கள் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை ருமா மற்றும் இரண்டு பயிற்சியாளர்கள் மூன்று மோட்டார் சைக்கிள்களில் சென்று, கண்காணித்தனர்.அப்போது எதிரே வந்த கார் ஒன்று ருமா மீது பலமாக மோதியது. இதனால் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதையறிந்ததும் காரை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். பலத்த காயமடைந்த ருமாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.ருமா சர்வதேச சைக்கிள் போட்டிகளில் மூன்று முறை இந்தியாவின் சார்பில் பங்கு பெற்றுள்ளார். ஏசியன் கேம்ஸ், ஏசியன் சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளில் ஏழு முறை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் சைக்கிள் பந்தய குழுவினரின் பயிற்சியாளராக அவர் பங்குகொண்டார்.ருமா கொல்கத்தா தொலைபேசி மாவட்டத்தில்   ஒரு மூத்த கணக்காளர் ஆக பணியாற்றுகிறார் .ரூமா அவர்கள் கொல்கத்தா தொலைபேசி மாவட்ட கிளையில்   பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் துணை தலைவர் ஆக உள்ளார் .ருமாவின் மறைவு அவர் சார்ந்த சைக்கிள் பந்தய குழுவினருக்கு மட்டுமில்லாமல், விளையாட்டு உலகத்திற்கும் ,நமது    பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்திற்கும் பெரிய இழப்பாகும். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தன செங்கொடி தாழ்த்தி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது .

Tuesday, June 18, 2013

ஜூலை 1ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் குறைகிறது

          டிராய் அமைப்பின் புதிய கட்டண விகித நிர்ணயத்தைத் தொடர்ந்து வருகிற ஜூலை 1ம் தேதி முதல் செல்போன் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.களுக்கான ரோமிங் கட்டணம் குறைகிறது. ரோமிங்கில் இருக்கும்போது வெளியில் செல்லும் அழைப்புகளுக்கு இனிமேல் நிமிடத்திற்கு ரூ.1.40க்குப் பதில் ஒரு ரூபாய் வசூலிக்கப்படும். அதேசமயம், வெளியில் செல்லும் எஸ்டிடிஅழைப்புகளுக்கு தேசிய ரோமிங்கில் நிமிடத்திற்கு ரூ.2.40க்குப் பதில் ரூ.1.50 ஆக குறைக்கப்படும்.

          தேசியஅளவிலான ரோமிங்கின்போது இன்கமிங் அழைப்புகளுக்கான ரோமிங் கட்டணம் நிமிடத்திற்கு ரூ. 1.75க்குப் பதில் 75 பைசாவாக குறைக்கப்படும். அதேபோல வெளியில் செல்லும் உள்ளூர் எஸ்.எம்.எஸ்களுக்கான கட்டணம் ரூ.1 ஆக குறைக்கப்படும். வெளியில் செல்லும் எஸ்டிடி எஸ்.எம்.எஸ்களுக்கான கட்டணம்ரூ.1.50 ஆக குறைக்கப்படும். 

MOU signed with Oriental Bank of Commerce

          ஓரியண்டல் பேங்க் ஆப்   காமெர்ஸ் வங்கியுடன் BSNL ஊழியர்களுக்கான பல்வேறு கடன்கள் கொடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்து ஆகியுள்ளது.
ஒப்பந்தம் படிக்க :-CLICK HERE

ஒப்பந்தத் தொழிலாளர்கள் கிளை மாநாடு

          தமிழ்நாடு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் அருப்புக்கோட்டை கிளைமாநாடு 2013 ஜூன் 19, ஞாயிறு அன்று நடைபெற்றது. அருப்புக்கோட்டை கிளையின் 30 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள்வரை கலந்து கொண்டனர்.

          மாநாட்டிற்கு கிளையின் தலைவர் தோழர் ராமராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் வேல்ச்சாமி அவர்கள் தொடக்க உரையாற்றி மாநாட்டை முறையாகத் தொடக்கி வைத்தார். கிளையின் துணைச் செயலர் தோழர் முனியசாமி அவர்கள் கிளை மாநாட்டிற்கான செயல்பாட்டறிக்கையை முன்வைத்தார். அறிக்கை மீதான விவாதத்தின் 8 தோழர்கள் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர். அறிக்கை விவாதத்தின் அடிப்படையிலான திருத்தங்களுடன் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து கிளையின் பொருளாளர் தோழர் செந்தில்குமார் அவர்கள் வரவு செலவு கணக்கை சமர்ப்பிக்க, வரவு செலவு கணக்கும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

          மாநாட்டையும் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிர்வாகிகளையும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொறுப்பாளர் தோழர் ராஜ், அருப்புக்கோட்டை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் தலைவர் தோழர் உதயகுமார், அமைப்புச் செயலர் தோழர் அஸ்ரஃப் தீன் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் மதிகண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் முத்துச்சாமி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலர் தோழர் ஜெயக்குமார் நிறைவுரையாற்றினார்.

          தொடர்ந்து நடைபெற்ற அமைப்பு நிலை விவாதத்தில் பெருவாரியான தோழர்கள் கலந்து கொண்டனர். அமைப்பு நிலை விவாதத்தைத் தொடர்ந்து புதிய தலைவர், செயலர், பொருளாளராக தோழர் உமையன் பாக்கியராஜ், செந்தில்குமார் மற்றும் ராஜிவ்நகர் ராமச்சந்திரன் ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய செயலர் தோழர் செந்தில்குமாரின் நன்றியுரையுடன் கிளைமாநாடு நிறைவுற்றது.
       
“பூனை கருப்பா வெள்ளையா என்பதல்ல அது எலி பிடிக்கிறதா? என்பதே முக்கியம்” - தோழர் மாவோ

பயிற்சி

          BSNL நிறுவனம் தொலை தொடர்பு சார்ந்த பயிற்சியை கோடை கால பயிற்சி வகுப்பாக  இன்ஜினியரிங் மாணவர்களுக்கு   அளிக்க ORACLE  நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
தகவலுக்கு : CLICK HERE

மறு சீரமைப்பு

          கூடுதல் ஸ்பெக்ட்ரம் வழங்குவதற்கான ONE  TIME  FEE  கட்டணத்தில் இருந்து BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளிக்க அரசாங்கம் முடிவு செய்ய உள்ளதாக பத்திரிகையில்   தகவல்கள் வெளியாகி உள்ளது.
தகவலைத் தெரிந்து கொள்ள : CLICK HERE

அன்னிய நேரடி முதலீடு

          ஆனந்த்  ஷர்மா, வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர், தொலை தொடர்பில்   100% அன்னிய நேரடி முதலீடு அதிகரிகரிபதற்கான   திட்டம் விரைவில் அமைச்சரவை மூலம் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார். தொலைத்தொடர்பு துறையில் அன்னிய நேரடி முதலீடு, ஏற்கனவே 74% அதிகரித்துள்ளது.

          ஒரு புறத்தில், அரசாங்கம்  சீனாவில் இருந்து தொலை தொடர்பு உபகரணங்கள் இறக்குமதியாவது  தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை உருவாக்கும் என்று. கூறிக்கொண்டு மறுபுறத்தில் , இந்திய தொலை தொடர்பு துறையை அபகரிக்க  பல  அந்நிய  நிறுவனங்களை  உள்ளே வருவதற்கு  வழிவகுக்க  தொலைத்தொடர்பு துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்பது  மேற்கத்திய நாடுகளால் நமது நாடு  அச்சுறுத்தலுக்கு ஆளாகாதா? ஆகும் என்பதில் என்ன சந்தேகம்.    

ஒப்பந்த தொழிலாளர் சங்க நாகர்கோவில் மாநில மாநாடு

          தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க நாகர்கோவில் மாநில மாநாட்டு வரவேற்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழு விவரங்களைத் தெரிந்து கொள்ள :-CLICK HERE

Monday, June 17, 2013

மத்திய சங்க கடிதங்கள்

          78.2%  IDA இணைப்பு அடிப்படையில் அனைத்து அலவன்ஸ்களும் கொடுக்கப்பட வேண்டும் என நமது மத்திய சங்கம் டைரக்டர் (HR ) அவர்களுக்கு  கடிதம் எழுதியுள்ளது.
கடித நகல் படிக்க :- Click here

          78.%  IDA இணைப்பு அமல்படுத்தப்படும்போது நிலுவை தொகையை நிறுவனம் நிதி நிலையில் முன்னேற்றம் அடையும் போது   பட்டுவாடா செய்ய வலியுறுத்தி டாட் செயலருக்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
கடித நகல் படிக்க :-CLICK HERE

          ஓய்வூதியம்  மற்றும் குடும்ப ஓய்வூதியம்  78.2%  IDA இணைப்பு அடிபடையில் உயர்த்திட  வலியுறுத்தி டாட் செயலருக்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
கடித நகல் படிக்க :-Click Here

Sunday, June 16, 2013

தகவலைத் திருடும் ஏகாதிபத்திய திருடர்கள்


          சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து தங்களது பயனாளர்களின் குறித்த விவரங்களை அமெரிக்கா கேட்டதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை பிரிசம் என்ற ரகசிய கண்காணிப்புத் திட்டத்தின் மூலம் உலக அளவில் இணையதளங்களைப் பயன்படுத்துபவர்களின் தனிமனித ரகசியங்களை கண்காணித்து வருவதாக சிஐஏ முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோவ்டன் என்பவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

          மேலும், மைக்ரோசாப்ட், பேஸ்புக், கூகுள், யாகூ போன்ற பிரபல நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் கடந்த ஆண்டின் இரண்டாவது 6 மாத காலத்தில் மட்டும் அமெரிக்காவின் பல்வேறு அரசுத்துறைகள் தனது 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் பயனாளர்களின் தகவல்களை அளிக்குமாறு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் தடவை கேட்டதாக சமூக வலைதளமான பேஸ்புக் தெரிவித்துள்ளது.

          மேலும், அரசுடனான உடன்பாட்டின் அடிப்படையில் இத்தகவல்களை தேசிய பாதுகாப்பு முகமைக்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளது.இதேபோன்று, இந்த காலகட்டத்தில் அமெரிக்கா தங்களிடம் 32 ஆயிரம் பயனாளர்கள் குறித்த தகவல்களை 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் தடவை கேட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களது உலக பயனாளர்களோடு ஒப்பிடுகையில் இது மிகவும் சொற்பமானதே என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி :தீக்கதிர் 

Friday, June 14, 2013

சர்வதேச புரட்சியாளன் சே குவராவின் பிறந்த நாள்

உலக மக்களினால் மறக்கப்பட முடியாத சேகுவேரா


          ''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” -சே


..          "உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன், ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது போராட்டம் தேவையாய்  இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்"        ...எர்னஸ்ட் சேகுவேரா

JOINT FORUM

          பிஎஸ்என்எல் நிலைப்புத்தன்மை மற்றும் நிதி நிலையை மேம்படுத்த ஊழியர்களை  உள்ளடக்கி  நாடு தழுவிய சக்தி வாய்ந்த இயக்கம், துவக்க FORUM 13-06-2013 அன்று நடந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

          தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் கருத்தரங்குகளை நடத்தவும்  முடிவு செய்துள்ளது. FORUM ஒரு மையக்குழுவை அமைத்துள்ளது. அதன் உறுப்பினர்களாக தோழர் V.A.N. நம்பூதிரி, BSNLEU, தோழர் P.அபிமன்யு, BSNLEU, தோழர் சந்தேஸ்வர்சிங், NFTE, திரு செபஸ்டியன், SNEA, திரு பிரகலாத்ராய், AIBSNLEA, திரு K.ஜெயப்ரகாஷ், FNTO, N.D. ராம், சேவா பிஎஸ்என்எல் ஆகியோர் இருக்கின்றார்கள்.

          அனாமலி விசயமாக தேசிய கவுன்சிலில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க நமது அகில இந்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

கடித நகலுக்கு : CLICK HERE


Thursday, June 13, 2013

விரிவடைந்த மாவட்ட செயற்குழு

நிகழ்ச்சி நிரல்
விரிவடைந்த மாவட்ட செயற்குழு
தென் மாவட்டங்களின் கிளை செயலர்கள் மாவட்ட சங்க நிர்வாகிகள் பயிலரங்கம்
மற்றும்
சேவைக் கருத்தரங்கம் 
நாள் :- 16-07-2013
இடம் :-V V S திருமண மண்டபம், விருதுநகர் 
தலைமை :- தோழர் K .மாரிமுத்து ,
மாநிலத் தலைவர், BSNLEU ,தமிழ் மாநிலம் 

நேரம் :- காலை 1000 மணி 
வகுப்பை தொடக்கி   வைப்பவர் :- தோழர் S.செல்லப்பா, மாநிலச் செயலர், BSNLEU, தமிழ் மாநிலம்

வகுப்பு எடுப்போர் :

தோழர் .P .அபிமன்யு ,பொது செயலர் ,BSNLEU 

சேவை கருத்தரங்கம் 
பொருள் :- மேம்படுத்தப்பட வேண்டிய பணிக்கலாசாரம் 
  மதியம் :- 2 மணி 
தொடங்கி வைப்பவர் :- தோழர் C .வெங்கடேஷ்TTA 
பங்கேற்போர் :- திரு. B.V.பாலசுப்ரமணியாITS பொது மேலாளர், BSNL 
      திரு. ராதாகிருஷ்ணன், DGM 
         திரு தனுஷ்கோடி, AGM (ADMN ) 
      திரு S. ஆள்வார்சாமி, CAO (FIN )
 மாலை : 300 மணி 
  தோழர் M .பெருமாள்சாமி பணி  ஒய்வு பாராட்டு 
தலைமை :-A .சமுத்திரகனி 
வரவேற்புரை :-S .ரவீந்திரன்,மாவட்ட செயலர் ,BSNLEU 
வாழ்த்துரை :-  
  • தோழர்P.அபிமன்யு, பொது செயலர் 
  •              தோழர் S. செல்லப்பா, மாநில செயலர் 
  •              தோழர் M. முருகையா, மாநில உதவி  செயலர் 
  •                    தோழர் C. பழனிசாமி, மாநில உதவி   செயலர் 
  •              தோழர் தேனி வசந்தன், CITU 
  •                 திரு T. ராதாகிருஷ்ணன், AIBSNLEA 
  •                 திரு S. செல்வராஜ், SNEA (I ) 
  •                 தோழர் சக்கணன், மாவட்ட செயலர் ,NFTE                   
                           ஏற்புரை :- தோழர் M. பெருமாள்சாமி 
நன்றியுரை :- S .வெங்கடப்பன்மாவட்ட பொருளர்
இவண்
அனைவரும் வாரீர்

BSNL /MTNL மறு சீரமைப்பு

          12-06-2013 அன்று BSNL / MTNL  மறு சீரமைப்பு விசயமாக நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் DOT அமைப்பு 12,846 கோடி ரூபாயை BWA ஸ்பெக்ட்ரம் சரண்டர் செய்ததற்கு BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு வழக்க வேண்டும் என உறுதிபடத் தெரிவித்துள்ளது. அதேபோல் MTNL பகுதியில்  Rs.7,500 கோடி ரூபாய்  ஓய்வூதியப் பொறுப்புபகுதியை, அரசு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும்  DOT அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் தெளிவற்ற போக்கு தென்பட்டதால்  எந்த முடிவும் நேற்று எடுக்கப்படவில்லை. GoM அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, June 12, 2013

மறு சீரமைப்பு

அமைச்சர்கள் குழுவிடம் DOT முன்  வைத்த BSNL மற்றும் MTNL  நிறுவனங்களின் தற்போதைய  நிதி நிலை பற்றிய ஆயத்த அறிக்கை படிக்க :-CLICK HERE 

மாறுதல் உத்தரவு

2011 ஆம் ஆண்டு "லாங்  ஸ்டான்டிங்" மாறுதலில் சென்றவர்கள் மீண்டும்  தங்கள் பணி புரிந்த இடத்திற்கு வருவதில் இந்த ஆண்டு பிரச்னை எழுந்தது .இன்று நமது BSNLEU சங்கமும் .NFTE  சங்கமும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்து பிரச்சனையை தீர்த்து விட்டது .இணக்கமான முடிவை எட்ட உதவிகரமாய் இருந்த NFTE சங்கத்திற்கும் ,GM ,DGM (ADMN ) மற்றும் AGM (ADMN ) அவர்களுக்கும் நமது நன்றி .

78.2%ன் அடிப்படையில் பிறபடிகளுக்காக...

          வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி மற்றும் திறன் மேம்பாட்டுப் படி (HRA, Medical and Skill up-gradation allowance) ஆகியவற்றை மாற்றியமைக்கப்பட உள்ள 78.2 IDA இணைப்பின் அடிப்படையில் வழங்க வேண்டும் என CMD, BSNLக்கு பொதுச்செயலர் கடிதம் எழுதி உள்ளார். 

<கடித நகலுக்கு>

          எல்லாம் எங்களால்தான் எனும் பொய்ப் பிரச்சாரகர்கள் மத்தியில் விரக்தியடையாமல், நமக்கான பணியைச் தானே முன்வந்து செவ்வனே செய்யும் மத்திய சங்கத்திற்கு நம் உளமார்ந்த நன்றி.

Tuesday, June 11, 2013

stepping up

          1-1-2007 முதல் ஊதிய நிர்ணயம் செய்தபோது சேவையில் மூத்த ஊழியர்கள் சேவையில் இளையவர்களைவிட ஊதியம் குறைவாக பெற்றதை நிவர்த்தி  செய்ய சீனியர் AO திரு. T.ராதாகிருஷ்ணன் அவர்களிடம் stepping up  செய்ய கோரினோம். நமது கோரிக்கையை ஏற்று   இன்று அதற்கான நடவடிக்கையை நிர்வாகம் எடுத்துள்ளது.இதனால் மாவட்டத்தில்  25 ஊழியர்கள் பலன் அடைய உள்ளனர். சீனியர் AO திரு. T.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு BSNLEU சங்கத்தின் நன்றி.

தந்தி சேவை நிறுத்தம்

          தந்தி சேவையை 15-07-2013 முதல் நிறுத்துவதற்கு BSNL நிர்வாகம் இன்று (11.06.2013) உத்தரவு வெளியிட்டுள்ளது.
உத்தரவு நகல் : Click Here

78.2 % IDA இணைப்பிற்கான BSNL உத்தரவு

78.2 % IDA இணைப்பிற்கான BSNL  உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரவு நகல் :- Click HERE

Monday, June 10, 2013

மறு சீரமைப்பு

          BSNL / MTNL மறு சீரமைப்பு விசயமாக அமைச்சர்கள் குழு கூட்டம் 11-06-2013க்குப்  பதிலாக 12-06-2013 அன்று மாலை 3.30 மணி அளவில் நடைபெற உள்ளது. 

78.2 IDA இணைப்பில் BSNLEU சங்கத்தின் மகத்தான பங்களிப்பு

          பஞ்சப்படியை சம்பளத்துடன் இணைத்து 01-01-2007 முதல் ஊதிய நிர்ணயம் செய்திட உத்தரவு வெளியாகி விட்டது. (DoT உத்தர்வு எண் 61-01/2012-SU dt. 10-06-2013) 12-06-13முதல் போராட்டம் என்ற அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் சங்க போராட்ட அறிவிப்புக்குப் பின்னர் 12-06-2012ல் ஏற்பட்ட ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது மாபெரும் சாதனை. இது அனைத்து ஊழியர்கள் , அதிகாரிகள் சங்கங்களுக்கு கிடைத்த வெற்றி.

          இதற்கு காரணமான ஊழியர்கள்- அதிகாரிகள் கூட்டமைப்பிற்கும் அதனைத் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கின்ற அதன் அமைப்பாளர் தோழர் பி.அபிமன்யூ (பொதுச்செயலர் BSNLEU) அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

          தற்போது 78.2% பஞ்சப்படி இணைப்பு பிரச்சனையை நாங்கள் தான் தீர்வு செய்தோம் என்று வெற்றிக்கு சொந்தம் கொண்டாடும் வேலையில் NFTE நண்பர்கள் இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்து கொள்ளட்டும். ஆனால், அவ்வாறு செய்யும் போது, BSNL ஊழியர் சங்கம் பெற்றுத் தந்த ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தைக் குறை கூற அவர்கள் முற்படுகிறார்கள். அதனை நாம் அனுமதிக்க முடியாது. “ஊதிய மாற்றத்தின்போது, BSNL ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட தவறுகளும் அநீதிகளும் இப்போது சரி செய்யப்பட்டுள்ளன” என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.

          அதிகாரிகளுக்கு 68.8% பஞ்சப்படி மட்டுமே இணைக்கப்பட்டதால், ஊழியர்களுக்கும் 68.8% பஞ்சப்படி மட்டுமே இணைக்கப்படும் என்றுதான் ஊதிய மாற்றத்தின்போது நிர்வாகம் முன்வைத்தது என்பதை அனைவரும் அறிவர். 68.8% பஞ்சப்படியை ஏற்றுக்கொண்டு ஊதிய மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு நிர்வாகம் BSNL ஊழியர் சங்கத்தை நிர்பந்தம் செய்தது. ஆனால், BSNL ஊழியர் சங்கம் அதை உறுதியோடு மறுத்து விட்டதோடு, 78.2% பஞ்சப்படியை இணைக்குமாறு போராடிய BSNL ஊழியர் சங்கம், 78.2% பஞ்சப்படி இணைப்பை வலியுறுத்தி, இரண்டு நாள் வேலை நிறுத்தத்தையும் நடத்தியது. இறுதியாக, அதிகாரிகளுக்கு வழங்கப்படும்போது ஊழியர்களுக்கும் 78.2% பஞ்சப்படி இணைப்பு வழங்கப் படும் என்பதை உறுதி செய்து, BSNL ஊழியர் சங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது.

          அவ்வாறு நாம் ஒப்பந்தத்தில் உறுதி செய்து கொண்டதால்தான், இப்போது மீண்டும் 78.2% பஞ்சப்படி இணைப்புப் பிரச்னையை நாம் மீண்டும் எழுப்பவும், – DoT யையும் BSNL நிர்வாகத்தையும் தீர்வு காண வலியுறுத்தவும் நம்மால் முடிந்தது. BSNL ஊழியர் சங்கம் 68.8% பஞ்சப்படி இணைப்பை ஊதியமாற்றத்தின்போது ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால், 78.2% பஞ்சப்படி இணைப்பைப் பெறுவதற்கான அனைத்து வழிகளும் அடைபட்டுப்போயிருக்கும்.இந்த உண்மை அனைவருக்கும் தெரியும்.

          ஆனால், BSNL ஊழியர் சங்கம் ஏற்படுத்திய ஒப்பந்தத்தைக் குறைகூற முற்படும் சில நண்பர்கள், இப்போதாவது தங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பார்க்கட்டும்.ஊதிய மாற்றத்துக்காகவும், 78.2% பஞ்சப்படி இணைப்புக்காகவும் அவர்களுடைய பங்கு என்ன? BSNL ஊழியர் சங்கம் 78.2% பஞ்சப்படி இணைப்புடன் கூடிய ஊதிய மாற்றத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த போது, இந்த நண்பர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஊதிய மாற்றத்தின் (68.8%) அடிப்படையில் ஊழியர்களுக்கும் ஊதிய மாற்றம் வழங்கும் உத்தரவை வெளியிடுமாறு அவர்கள் நிர்வாகத்தை வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். “அதிகாரிகளுக்கு வழங்கப் பட்டது போலவே ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்” என்பதே அவர்களின் முழக்கமாக இருந்தது.

          ஊதிய மாற்றத்தின் போது, அதிகாரிகளுக்கு என்ன வழங்கப் பட்டது? 68.8% பஞ்சப்படி இணைப்பு மட்டுமே! BSNL ஊழியர் சங்கம் 68.8% பஞ்சப்படி இணைப்பை ஏற்றுக்கொள்ளாமல், 78.2% இணைப்பிற்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, அந்த NFTE நண்பர்கள், ஊதிய மாற்றம் ஏற்படாமல் தடுக்கும் வீட்டோ அதிகாரத்தை BSNL ஊழியர் சங்கத்துக்கு கொடுக்க வேண்டாம் என்று நிர்வாகத்தைக் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? 78.2% பஞ்சப் படி இணைப்புக்கான அனைத்துக் கதவுகளும் மூடப் பட்டிருக்கும்.

          இந்த உண்மைகளையெல்லாம் மறந்து விட்டு, இந்த NFTE நண்பர்கள், இப்போது ஊழியர்களைத் திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.ஆனால் ஊழியர்கள் தெளிவாக இருக்கின்றனர். அதனால்தான் அவர்கள் கடந்த சங்க அங்கீகார தேர்தலின் போது செய்யப்பட்ட இந்தப் பொய்ப் பிரச்சாரங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, BSNL ஊழியர் சங்கத்துக்குத் தங்கள் பேராதரவை அள்ளித்தந்தனர்.

          புறந்தள்ளப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களை இனியேனும் நிறுத்திக் கொள்ள வேண்டும் அந்த NFTE நண்பர்கள்.

DoT Order on 78.2% IDA merger

Friday, June 7, 2013

பணி ஓய்வு பாராட்டு

சிவகாசி மூத்த தோழர் .மணிவண்ணன் அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா சிவகாசி OCB மற்றும் SDOP கிளைகள் சார்பாக 07-06-2013 அன்று மாலை நடைபெற்றது .கிளை தலைவர் தோழர் அழகுராஜ் தலைமை தாங்க கிளைகள் சார்பாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் அவர்கள் தோழர். மணிவண்ணணை    பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .மாவட்ட சங்கம்  சார்பாக மாவட்ட தலைவர் தோழர் .சமுத்திரகனி அவர்கள தோழர் .மணிவண்ணணை    பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .தோழர்கள் அய்யாசாமி , ராஜு ,ஜெயபாண்டியன் ,ராஜாகனி அவர்கள் வாழ்த்தி பேசினர் .தோழர் மணிவண்ணன் ஏற்புரை நிகழ்த்த தோழர் .இன்பராஜ் நன்றியுரை கூற கூட்டம் இனிதே முடிவுற்றது .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...