Showing posts with label மாநில செயற்குழு. Show all posts
Showing posts with label மாநில செயற்குழு. Show all posts

Wednesday, June 18, 2014

எழுச்சிமிகு தமிழ் மாநில செயற்குழு

          BSNLஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில செயற்குழு சென்னை கிண்டியில் உள்ள CITU அலுவலகத்தில் 17.06.2014 அன்று காலை 10.00 மணிக்கு  தூத்துக்குடி மாவட்ட செயலர் தோழர் ராமர் நமது சங்க கொடியை  ஏற்றி வைக்க தோழியர் V .P.இந்திரா, மாநில உதவி தலைவர்  தலைமையில் எழுச்சியுடன் தொடங்கியது.
          மாநில அமைப்பு செயலர் தோழர் செல்வின் சத்யராஜ் அஞ்சலி உரை நிகழ்த்த தோழியர் இந்திரா அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் உரையில் ஜூன் 17ஆம் தேதியின் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்தார். 1911 ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி மாவீரன் வாஞ்சிநாதன்  ஆஷ் துரையை சுட்டு கொன்று  தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு இந்திய சுதந்திர  போராட்டத்தில் தமிழகத்தின்  பங்கினை மகாகவி பாரதி மற்றும் வ .உ .சிதம்பரனார் வரிசையில் வாஞ்சியின்  நினைவு நாள் அன்று நமது செயற்குழு  நடைபெறுவதை சுட்டி காட்டினார்.
          மாநில செயலர் தோழர் செல்லப்பா அவர்கள் தன் உரையில்  தொடர்ந்து வந்த இயக்கங்கள் மற்றும் அவரது உடல் நிலை காரணங்களால்   மாநில செயற்குழு  நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதை சுட்டி காட்டி சென்னை சொசைட்டி தேர்தலில் நமது சங்கம் சார்பாக வெற்றி பெற்ற தமிழக தோழர்கள் யாரும் விலை போகாத பெருமையை ஒரு தீர்மானம் மூலமாக நன்றியும் பாராட்டையும் தெரிவித்தார். வரவிருக்கும் தமிழ் மாநில மாநாடு அக்டோபர் மாதம் 10,11,12 தேதிகளில் பொன்னி நதி கரையில் உள்ள  திருச்சி நகரில் நடைபெற உள்ளதாகவும், மாநாட்டு நன்கொடையாக ரூபாய் 250/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது  எனவும் அறிவித்தார்.
          நமது பொது செயலர் தோழர் .P .அபிமன்யு அவர்கள் தன் எழுச்சியுரையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனதற்கு சோர்ந்து  போக வேண்டிய அவசியம் இல்லை என்பதை மிக தெளிவாக கூறினார். 10 ஆண்டு கால ஐக்கிய முன்னணி    அரசு அமல்படுத்திய புதிய தாராளமய கொள்கைகளுக்கு நாட்டு மக்கள் கடும் அடி கொடுத்து அந்த கட்சிக்கு எதிர் கட்சி தலைமைகூட கிடைக்காமல் செய்தது மிக பெரிய நிகழ்வு என்றும், தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள அரசு அதே புதிய தாராளமய கொள்கைகளை அமல்படுத்த முற்பட்டால் அவர்களுக்கும் மக்கள் இதே பதிலை தருவார்கள் என்று தெளிவுபடுத்தினார். பணவீக்கம் உயர்வது, டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீடு என்று தற்போது செய்திகளில் வருவதை பார்க்கும்போது  புதிய அரசும் ஐக்கிய முன்னணி    அரசு சென்ற அதே பாதையில் செல்வதை அவர் சுட்டி காட்டினார்.
          இந்த நாட்டில் மட்டும் இன்றி பல வெளி வெளிநாடுகளிலும் புதிய தாராளமய கொள்கைகளின் அமலாக்கத்தால் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளை குறிப்பாக ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கை அதிகரிப்பதும், நிரந்தர ஊழியர் எண்ணிக்கை குறைவதையும் உதாரணங்களுடன் கூறினார். நாட்டில் உள்ள ஆளும் கட்சிகளின் தொழிற் சங்கங்கள்கூட உலகமய, தாராளமய கொள்கைகளினால் தங்கள் அமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கபடும் நிலை கண்டு ஒரு வலுவான போராட்ட களத்தில் பங்கெடுப்பதை   10 கோடி தொழிலாளர்கள் கலந்து கொண்ட பிப்ரவரி வேலை நிறுத்தம் பறைசாற்றியது என்பதை சுட்டி காட்டி வலுவான போராட்டங்கள் முலமே நமது உரிமையை பாதுகாக்க முடியும் என்பதை சொல்லி அனைவருக்கும் உற்சாகம் ஊட்டினார். பொது செயலரின் உரை நமது தயக்கங்களை களைய செய்தது.
          மத்திய ,மாநில சங்கங்கள் எடுக்கும் முடிவுகளை அமல்படுத்துவதில்  நமது விருதுநகர் மாவட்ட சங்கம் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் எனவும் , மாவட்டத்தில் வளாச்சி பணிகளுக்கு தேவையான  கேபிள் மற்றும் BTS களில் பேட்டரி பிரச்சனை ஆகியவற்றை நமது மாவட்ட செயலர் சுட்டி காட்டி உள்ளார். அனைத்து மாவட்ட மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் விவாதத்தில்  பங்கேற்றனர். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் ஊழியர் பிரச்சனைகள் தீர்வில் அலட்சியம் காண்பிப்பதை கண்டித்து  04.07.2014இல் ஆர்ப்பாட்டம் மற்றும் 11.07.2014 அன்று மாவட்ட தலைநகரங்களில் தர்ணா நடத்துவது என முடிவு எடுக்க பட்டுள்ளது.  தோழர் பரமேஸ்வரன் நன்றியுரை கூற இனிதே மாநில செயற்குழு முடிவுற்றது.


மாநில சங்க சுற்றறிக்கை எண் 141 படிக்க :-Click Here

Tuesday, June 17, 2014

BSNLEUவின் தமிழ் மாநில மாநாடு



இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளில் சில...

  • இந்த ஆண்டிற்கான BSNLEUவின் மாநில மாநாடு வரும் அக்டோபர் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் திருச்சியில் நடைபெற உள்ளது.
  • உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மாநிலமாநாட்டிற்காக ரூபாய் 250 நன்கொடையாகச் செலுத்த வேண்டும்.

Monday, May 26, 2014

மாநில செயற்குழு

           வரும் ஜூன் மாதம் 17 ஆம் தேதி நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க தமிழ் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது .நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள் மாநில செயற்குழுவை தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகிறார். நமது கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் மாநில மட்டத்தில் பேச கூடிய விசயங்கள் இருந்தால் மாவட்ட செயலரிடம் தெரிவித்து விட வேண்டும் என மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது.  

Saturday, June 29, 2013

மாநில செயற்குழு கூட்டம்

          பிஎஸ்என்எல் ஊழியர் சங்கதின்  தமிழ்நாடு  மாநில  செயற்குழு கூட்டம் தோழர் K .மாரிமுத்து, மாநில தலைவர் தலைமையில் 29.06.2013 அன்று  நடைபெற்றது. மாநில செயற்குழுவை  தோழர் P.அபிமன்யு, பொது செயலர்  அவர்கள் தொடக்கி வைத்தார். மாநில செயலர் தோழர் S.செல்லப்பா அவர்கள் நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார்.

          தோழர் K.கோவிந்தராஜன், மாநில செயலர், சென்னை தொலைபேசி  அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பொதுச்செயலர் P.அபிமன்யு  அவர்கள் பேசுகையில்  6வது  சரிபார்ப்பு தேர்தலில் நமது  வெற்றியின்  சிறப்பம்சங்களையும், 78.2%IDA இணைப்பு வெற்றியில் BSNLEU  சங்கத்தின் முக்கிய   பங்கையும் விவரித்தார் 6ஆவது சரிபார்ப்பு தேர்தலுக்குப்பின் புதிய சூழல் உருவாகி உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

          பிஎஸ்என்எல் திறன் மேம்படுத்த நாடுதழுவிய பிரசாரம் நடத்த JOINT  FORUM  முடிவு செய்து வரும் 03.08.2013 அன்று புதுதில்லியில்  தேசிய கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக கூறினார். 03-07-2013 முதல் நெய்வேலி  ஊழியர்கள் பங்கு   விற்பனைக்கு எதிராக செய்யவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு  ஆதரவாக 04-07-2013 அன்று அனைத்து  கிளைகளிலும் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது.

செய்திக்கு : CLICK HERE

Wednesday, January 23, 2013

காவிரிக்கரையில் கரை கடந்த உற்சாகம்

கலந்து கொண்ட தோழர்கள்
          நமது BSNLEU சங்கத்தின் விரிவடைந்த தமிழ் மாநில செயற்குழு கூட்டம் 22-01-2013 அன்று திருச்சி மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 தோழர்கள்வரை கலந்து கொண்டனர். தமிழகத்தில் உள்ள மொத்தம் 239 கிளைச்செயலர்களில் 221 பேர் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும். தேசியக்கொடியை மாநிலத் தலைவர் தோழர் M.மாரிமுத்து ஏற்றி வைக்க, நமது சங்கக்கொடியை அனைத்திந்திய பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு கோஷங்கள் முழங்க ஏற்றி வைத்தார்.

பொதுச்செயலாளர் தோழர் அபிமன்யு

        விவாதத்திற்கான குறிப்புகளைச் சமர்பித்து மாநிலச்செயலர் தோழர் S.செல்லப்பா உரை நிகழ்த்தினார். அனைத்திந்திய பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு மாறியுள்ள சூழ்நிலையில் புதிய அங்கீகார விதிகளின் அவசியம் பற்றியும் ,BSNL நிறுவனத்திற்கு எதிரான அரசின் கொள்கைகள் பற்றியும், வரும் பெப்ரவரி மாதம் 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். மாநில செயற்குழுவில் நமது மாவட்டத்தில் இருந்து 38 தோழர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் சார்பாக அருப்புக்கோட்டை கிளைச்செயலர் தோழர் R ஜெயக்குமார் விவாதக்குறிப்புகள் மீதான உரையை முன்வைத்தார். நமது மாவட்டம் சார்பாக அகில இந்திய சங்க கட்டிட நிதியாக ரூ.25,000/- வழங்கப்பட்டது.
மாநிலச் செயலர் தோழர் செல்லப்பா

மாநிலத் தலைவர் தோழர் மாரிமுத்து









11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...