Wednesday, June 18, 2014

எழுச்சிமிகு தமிழ் மாநில செயற்குழு

          BSNLஊழியர் சங்கத்தின் தமிழ் மாநில செயற்குழு சென்னை கிண்டியில் உள்ள CITU அலுவலகத்தில் 17.06.2014 அன்று காலை 10.00 மணிக்கு  தூத்துக்குடி மாவட்ட செயலர் தோழர் ராமர் நமது சங்க கொடியை  ஏற்றி வைக்க தோழியர் V .P.இந்திரா, மாநில உதவி தலைவர்  தலைமையில் எழுச்சியுடன் தொடங்கியது.
          மாநில அமைப்பு செயலர் தோழர் செல்வின் சத்யராஜ் அஞ்சலி உரை நிகழ்த்த தோழியர் இந்திரா அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் உரையில் ஜூன் 17ஆம் தேதியின் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்தார். 1911 ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி மாவீரன் வாஞ்சிநாதன்  ஆஷ் துரையை சுட்டு கொன்று  தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு இந்திய சுதந்திர  போராட்டத்தில் தமிழகத்தின்  பங்கினை மகாகவி பாரதி மற்றும் வ .உ .சிதம்பரனார் வரிசையில் வாஞ்சியின்  நினைவு நாள் அன்று நமது செயற்குழு  நடைபெறுவதை சுட்டி காட்டினார்.
          மாநில செயலர் தோழர் செல்லப்பா அவர்கள் தன் உரையில்  தொடர்ந்து வந்த இயக்கங்கள் மற்றும் அவரது உடல் நிலை காரணங்களால்   மாநில செயற்குழு  நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதை சுட்டி காட்டி சென்னை சொசைட்டி தேர்தலில் நமது சங்கம் சார்பாக வெற்றி பெற்ற தமிழக தோழர்கள் யாரும் விலை போகாத பெருமையை ஒரு தீர்மானம் மூலமாக நன்றியும் பாராட்டையும் தெரிவித்தார். வரவிருக்கும் தமிழ் மாநில மாநாடு அக்டோபர் மாதம் 10,11,12 தேதிகளில் பொன்னி நதி கரையில் உள்ள  திருச்சி நகரில் நடைபெற உள்ளதாகவும், மாநாட்டு நன்கொடையாக ரூபாய் 250/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது  எனவும் அறிவித்தார்.
          நமது பொது செயலர் தோழர் .P .அபிமன்யு அவர்கள் தன் எழுச்சியுரையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனதற்கு சோர்ந்து  போக வேண்டிய அவசியம் இல்லை என்பதை மிக தெளிவாக கூறினார். 10 ஆண்டு கால ஐக்கிய முன்னணி    அரசு அமல்படுத்திய புதிய தாராளமய கொள்கைகளுக்கு நாட்டு மக்கள் கடும் அடி கொடுத்து அந்த கட்சிக்கு எதிர் கட்சி தலைமைகூட கிடைக்காமல் செய்தது மிக பெரிய நிகழ்வு என்றும், தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள அரசு அதே புதிய தாராளமய கொள்கைகளை அமல்படுத்த முற்பட்டால் அவர்களுக்கும் மக்கள் இதே பதிலை தருவார்கள் என்று தெளிவுபடுத்தினார். பணவீக்கம் உயர்வது, டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீடு என்று தற்போது செய்திகளில் வருவதை பார்க்கும்போது  புதிய அரசும் ஐக்கிய முன்னணி    அரசு சென்ற அதே பாதையில் செல்வதை அவர் சுட்டி காட்டினார்.
          இந்த நாட்டில் மட்டும் இன்றி பல வெளி வெளிநாடுகளிலும் புதிய தாராளமய கொள்கைகளின் அமலாக்கத்தால் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளை குறிப்பாக ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கை அதிகரிப்பதும், நிரந்தர ஊழியர் எண்ணிக்கை குறைவதையும் உதாரணங்களுடன் கூறினார். நாட்டில் உள்ள ஆளும் கட்சிகளின் தொழிற் சங்கங்கள்கூட உலகமய, தாராளமய கொள்கைகளினால் தங்கள் அமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கபடும் நிலை கண்டு ஒரு வலுவான போராட்ட களத்தில் பங்கெடுப்பதை   10 கோடி தொழிலாளர்கள் கலந்து கொண்ட பிப்ரவரி வேலை நிறுத்தம் பறைசாற்றியது என்பதை சுட்டி காட்டி வலுவான போராட்டங்கள் முலமே நமது உரிமையை பாதுகாக்க முடியும் என்பதை சொல்லி அனைவருக்கும் உற்சாகம் ஊட்டினார். பொது செயலரின் உரை நமது தயக்கங்களை களைய செய்தது.
          மத்திய ,மாநில சங்கங்கள் எடுக்கும் முடிவுகளை அமல்படுத்துவதில்  நமது விருதுநகர் மாவட்ட சங்கம் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் எனவும் , மாவட்டத்தில் வளாச்சி பணிகளுக்கு தேவையான  கேபிள் மற்றும் BTS களில் பேட்டரி பிரச்சனை ஆகியவற்றை நமது மாவட்ட செயலர் சுட்டி காட்டி உள்ளார். அனைத்து மாவட்ட மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் விவாதத்தில்  பங்கேற்றனர். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் ஊழியர் பிரச்சனைகள் தீர்வில் அலட்சியம் காண்பிப்பதை கண்டித்து  04.07.2014இல் ஆர்ப்பாட்டம் மற்றும் 11.07.2014 அன்று மாவட்ட தலைநகரங்களில் தர்ணா நடத்துவது என முடிவு எடுக்க பட்டுள்ளது.  தோழர் பரமேஸ்வரன் நன்றியுரை கூற இனிதே மாநில செயற்குழு முடிவுற்றது.


மாநில சங்க சுற்றறிக்கை எண் 141 படிக்க :-Click Here

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...