Tuesday, June 24, 2014

கிராமங்களுக்கு தொலைத்தொடர்பு:கூடுதலாக ரூ.6,997 கோடி தேவை

        குக்கிராமங்களுக்கும் தொலைத்தொடர்புக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற, மத்திய பட்ஜெட்டில் கூடுதலாக, 6,997 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என, தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதிவேக இணையதள சேவைகளுக்காக, வரும் 2016-17ம் நிதியாண்டிற்குள், மொத்தம் 2.5 லட்சம் பஞ்சாயத்துகளில், கண்ணாடி நாரிழை கம்பிவட ஒருங்கிணைப்பு வசதிகளை ஏற்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், நடப்பு நிதியாண்டில், 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளுக்கு மேற்கண்ட வசதியை வழங்கும் திட்டமும் அடங்கும்.ஒன்பது மாநிலங்களில், நக்சல் பாதிப்பு பகுதிகளில், மொபைல் சேவை ஏற்படுத்த, 587 கோடியும், நகர்புறங்களில் தொலைத்தொடர்பு திட்டங்களை விரிவாக்க, 1,250 கோடியும் செலவாகும் என, தொலைத்தொடர்பு துறை மதிப்பிட்டுள்ளது.
               < நன்றி  யாகூ தினமலர் >

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...