Wednesday, June 25, 2014

27-06-2014 பேச்சு வார்த்தையில் BSNLEU பங்கேற்காது

2014 ஏப்ரல் 9 அன்று நிர்வாகிகளல்லாத ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக்குழு 30 அம்சக் கோரிக்கைகளை நிர்வாகத்திடம் முன்வைத்தது. இந்த 30 அம்சக் கோரிக்கைகளில் அதிகபட்சமானவை நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத எரியக்கூடிய பிரச்சனைகள் ஆகும்.
ஆச்சர்யமூட்டும் வகையில் கூட்டு நடவடிக்கைக் குழுவுடன் எந்தவிதமான பேச்சு வார்த்தையும் நடத்துவதில்லை என நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மாற்றாக BSNLEU மற்றும் NFTE சங்கங்களை மட்டும 2014 ஜூன் 27 அன்று பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது.
BSNLEUவின் அனைத்திந்திய மையம் இம்மாதம் 20 அன்று சந்தித்து இந்தப் பிரச்சனையின் மீது விவாதித்தது. கூட்டு நடவடிக்கைக்குழு அழைக்கப்படாவிடில் ஜூன் 27ல் நடைபெறும் பேச்சு வார்த்தையில் பங்கேற்காது என சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது. இம்முடிவை நடைமுறைப்படுத்தும்விதமாக BSNLEU நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது. (கடித நகலுக்குஇங்கே அழுத்தவும்) NFTE சங்கமும் இதே முடிவை எடுக்கும் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...