மானியங்களை குறைக்க வேண்டும்:
உலக வங்கி ஆலோசனை (உத்தரவு)
புதிதாக அமைந்திருக்கும் நரேந்திர மோடி அரசு தன்னுடைய முதல்
பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் சூழ்நிலையில் உலக வங்கி தன்னுடைய ஆலோசனையைத்
தெரிவித்திருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரியை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மானியங்களைக் குறைக்க வேண்டும், வளர்ச்சியை அதிகரிக்க புதிய வரிவிதிப்பு வழிகளை கண்டறிய வேண்டும்
என்று உலக வங்கி தன்னுடைய ஆலோசனையைத் தெரிவித்திருக்கிறது.மேலும், வரி விதிப்பு முறைகளை எளிமையாக்கி, வரிவரம்புகளைத் தளர்த்த வேண்டும் என்றார். அடுத்த மாத ஆரம்பத்தில்
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
(நன்றி : தி இந்து தமிழ் நாளேடு 22-06-2014 )
No comments:
Post a Comment