Showing posts with label புதிய அங்கீகார விதி. Show all posts
Showing posts with label புதிய அங்கீகார விதி. Show all posts

Friday, March 15, 2013

அங்கீகார நீட்டிப்பு - கடிதம்

          நமது சங்கத்திற்கான அங்கீகார கால நீட்டிப்பு விசயமாக தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் அங்கீகார கால நீட்டிப்பு விசயமாக BSNL நிர்வாகம் உடனடியாக உத்தரவு வெளியிட நமது பொது செயலர்  கடிதம் எழுதியுள்ளார்.

கடித நகலுக்கு :- <click here>

Thursday, March 14, 2013

அங்கீகார கால நீட்டிப்பு

          நமது தொடர் முயற்சியால் தொழிலாளர் அமைச்சகம் நமது சங்கத்திற்கான அங்கீகார காலத்தை 6 ஆவது சரிபார்ப்பு தேர்தல் முடியும் வரை நீடித்துள்ளது. இது நமது சங்க முயற்சிக்கு மிக ப்பெரிய வெற்றியாகும். சம்பள மாற்றம் போன்ற விசயங்களை தவிர்த்து அன்றாட ஊழியர் பிரச்சனைகளை நாம் நிர்வாகத்துடன் பேசலாம்.

உத்தரவுக்கு <click here>

Friday, February 15, 2013

UNITED FORUM கூட்டம் மற்றும் சில தகவல்கள்

            UNITED  FORUM கூட்டம் வரும் 17-02-2013 அன்று மதியம் 3 மணி அளவில் TEPU சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அந்த;f கூட்டத்தில் 6 வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான  பிரசார யுக்தி மற்றும் சுற்றுபயணம் பற்றி முடிவு எடுக்கப்படும்.

            ITS அதிகாரிகள் பிரச்சனையில் டெல்லி உயர்நீதி மன்றம் இன்று BSNL நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி பண்ணிவிட்டது .அதனுடைய முந்தைய தீர்ப்பை  6 வார காலத்திற்குள்  அமல்படுத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

            தேர்தல் வரை நமது சங்க அங்கீகாரம் நீட்டிக்கபட வேண்டும் என நாம் கோரியதை தலைமைத் தொழிலாளர் ஆணையர் முடிவிற்கு நிர்வாகம் காத்துள்ளது .

Monday, January 7, 2013

புதிய அங்கீகார விதிகள் பற்றி FNTO

          புதிய அங்கீகார விதிகளை FNTO சங்கம் கடுமையாக எதிர்த்து உள்ளது. புதிய அங்கீகார விதிகளை திரும்ப பெற வேண்டும் என அச்சங்கம் கடிதம் கொடுத்துள்ளது. புதிய அங்கீகார விதிகள் இடது தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக உள்ளதாக அச்சங்கம் கூறி உள்ளது வேடிக்கையானது .

Thursday, January 3, 2013

புதிய அங்கீகார விதி

          புதிய அங்கீகார விதியின் அடிப்படையில் சரிபார்ப்புத் தேர்தல் நடைபெறுவதற்கான முறையான அறிவிப்பு இன்னும் ஒரிரு தினங்களில் வெளியாக உள்ளது. சரிபார்ப்புத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் .

Friday, December 28, 2012

தோழனுக்கு தோள் கொடுத்த BSNLEU

          புதிய அங்கீகார விதிகளை BSNL நிறுவனம் உருவாக்க வேண்டும் என நமது BSNLEU சங்கம் தொடர்ந்து எடுத்த முயற்சியால் தற்போது BSNL நிறுவனம் தனது சுயஅங்கீகார விதிகளை உருவாக்கிவிட்டது. தொழிற்சங்க ஜனநாயகத்தை நமது நிறுவனத்தில் உருவாக்குவதில் நாம் எடுத்த முயற்சி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி ஆகும். இந்த முயற்சி தொழிற்சங்க ஒற்றுமையை உருவாக்கி நமது BSNL நிறுவனத்தை காக்கவும் தொடர்ந்து நடக்க இருக்கும் போராட்டத்தை வலிமையாக்கவும் பயன்படும். இப்படியான நமது முயற்சியை NFTE சங்கம் தன் இணைய தளத்தில் சிறப்பாக பாராட்டியுள்ளது.

Wednesday, December 26, 2012

புதிய அங்கீகார விதி சாராம்சம்

1. தேர்தல் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடைபெறும்.
2. அங்கீகார காலம் 3 ஆண்டுகளாக இருக்கும்.
3. 50 சதவீதத்திற்கும் அதிக  ஓட்டு வாங்கும் பட்சத்தில் அந்த ஒரு சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும்.
4.எந்த சங்கமும் 50 சத ஓட்டு வாங்கவில்லைஎனில் குறைந்த பட்சம் 35 சத வாக்குகள் வாங்கும் சங்கத்திற்கு பிரதான அங்கீகார சங்கமாக அங்கீகாரம் கிடைக்கும் .2 ஆவது அதிக ஓட்டு வாங்கும் சங்கம் குறைந்த பட்சம் 15 சத வாக்குகள் வாங்கினால் அதற்கு 2 ஆவது சங்கமாக அங்கீகாரம் கிடைக்கும்.
5. எந்த சங்கமும் 35 சத ஓட்டு வாங்காத பட்சத்தில் குறைந்த பட்சம் 15 சத வாக்குகள் வாங்கும் 2 சங்கங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
6.குறைந்த பட்சம் 2 சத வாக்குகள் வாங்கும் சங்கங்களுக்கு LIMITED TRADE UNION வசதி மட்டும் கிடைக்கும்.
7.National JCM ,R JCM ,LCM  ஊழியர் தரப்பு உறுப்பினர் எண்ணீக்கை 14 ஆக இருக்கும் , அகில இந்திய அளவில் சங்கங்கள் வாங்கும் வாக்கு  அடிபடையில் JCM உறுப்பினர் எண்ணிக்கை அமையும்.
8. 7 சத ஓட்டு வாங்கும் சங்கத்திற்கு National JCM ,R JCM ,LCM  அமைப்பில் 1  உறுப்பினர் கிடைக்கும்.
9. ஊழியர் தரப்பு செயலர் பதவி  அதிக ஓட்டு வாங்கும் சங்கத்திற்கு கிடைக்கும். லீடர் பதவி 2 வது அதிக ஓட்டு வாங்கும் சங்கத்திற்கு கிடைக்கும்.
10. ஊழியர் தரப்பு செயலர் மூலம் மட்டுமே  ஊழியர் தரப்பு பிரச்சனைகள் கொடுக்கப்படவேண்டும்.

புதிய அங்கீகார விதி,

புதிய அங்கீகார விதிகளுக்கான உத்தரவை BSNL நிர்வாகம் .வெளியிட்டு விட்டது .உத்தரவு எண் .BSNL/5-2/SR/2012 dated 26-12-2012.


Saturday, December 15, 2012

புதிய அங்கீகாரம் விதிகள் தொடர்பான கூட்டம்

          புதிய அங்கீகாரம் விதிகள் பிரச்சினை தொடர்பாக BSNLEU மற்றும் நிர்வாகத்திற்கு இடையே, 14.12.2012 அன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாம் checkoff system அடிப்டையில் எதிர்காலத்தில் உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலை நடத்த எண்ணியுள்ள நிர்வாகத்தின் வரைவுத் திட்டத்தை ஏற்று கொள்ள முடியாது என்றும் JCM மற்றும் சங்க நிர்வாகிகள் எண்ணிக்கையைக் குறைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் உறுதியாக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்.நிர்வாகம் நம்மால் முன்மொழிவு செயப்பட்ட வழிமுறைகளில் சிலவற்றை பரிசீலிக்க உறுதியளித்துள்ளது .தோழர்.P.அபிமன்யூ, பொது செயலாளர், தோழர். V.A.N. நம்பூதிரி, தலைவர் மற்றும் தோழர் . சைபல் செங்குப்தா, உதவி பொது செயலாளர் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். நிர்வாகத் தரப்பில் இருந்து, ஸ்ரீ நீரஜ் வர்மா, GM(SR), ஸ்ரீ முகேஷ் மீனா, DGM (SR) மற்றும் ஸ்ரீ வாட்வா , AGM (SR) பங்கேற்றனர்.

Saturday, December 8, 2012

புதிய அங்கீகார விதி

           புதிய அங்கீகார விதிகள் அடிப்டையில் தேர்தல் நடைபெரும்பட்சதில் BSNLEU சங்கத்தின் அங்கீகார காலம் 13-02-2013 அப்பால் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் இல்லையேல் பழைய அடிப்படையில் உறுப்பினர் சரிபார்பு தேர்தல் நடத்த வேண்டும் என நம் சங்கம் கோரியுள்ளது . நமது BSNLEU சங்கம் பிஎஸ்என்எல் நிறுவனம் சமர்பித்த அங்கீகாரம் விதிகள் மீது தன கருத்துக்களை கொடுத்துள்ளது. Sr.GM (SR) அவர்கள் சரிபார்ப்பு தேர்தலை தாமதிக்க எண்ணம் இல்லை என்று 05-12-2012 அன்று com.P.Abhimanyu, GS, அவர்களிடம் உறுதியளித்தார். அவர் மேலும் சரிபார்ப்பு தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார் . தாமதம் இல்லாமல் புதிய அங்கீகாரம் விதிகள் முடிவு செய்ய பட வேண்டும் என்று நமது GS வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tuesday, November 20, 2012

புதிய அங்கீகார விதிகளுக்கான கூட்டம்

          புதிய அங்கீகார விதிகளை விவாதிப்பதற்கு 19-11-2012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகம் ஒரு வரைவுத் திட்டத்தை சமர்ப்பித்தது. அதனை விவாதிப்பதற்குத் தேவையான கால அவகாசம் பல மாதங்கள் ஆகும். ஆதலால் BSNL ஊழியர் சங்கம் 6 ஆவது சரிபார்பு தேர்தலை பழைய விதிகளின்படி நடத்தவேண்டும் என வலியுறத்தியுள்ளது. ஏனெனில் 13-02-2013 தேதி வரை BSNLEU சங்கத்திற்கு அங்கீகாரம் உள்ளது. புதிய விதிகளை உருவாக்க அதிக காலம் ஆகும் போது 13-02-2013 தேதிக்கு பிறகு எந்த சங்கத்திற்கும் அங்கீகாரம் இல்லா சூழ்நிலை உருவாகும். இதைத்தான் நிர்வாகம் விரும்புகிறது. நிர்வாகத்தின் இந்தப் போக்கை நம் சங்கம் அனுமதிக்காது. இன்றைய கூட்டத்தில் BSNLEU சார்பாக அனைத்திந்திய செயலர் தோழர் P.அபிமன்யு, அனைத்திந்திய தலைவர் தோழர் V.A.N.நம்பூதிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Friday, November 16, 2012

புதிய அங்கீகார விதிகளுக்கான சந்திப்பு

             BSNL மூன்றாம் பிரிவு ஊழியர்களின் தொழிற்சங்கத்திற்கான புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவதற்காக இம்மாதம் 19ஆம தேதி நடைபெறவிருக்கும் சந்திப்புக் கூட்டத்திற்கான கார்ப்பரேட் அலுவலகத்தின் கடித நகல்   <<click here>>

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...