இது முடிவல்ல ஆரம்பம்
நவம்பர் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி இன்று இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டம் விருதுநகர் மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மிக திரளான ஊழியர்களுடன் நடைபெற்றது .இந்த போராட்டத்திற்கு ஓப்பதை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் இளமாறன் தலைமை வகித்தார் .கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ,TNTCWU சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ,அதன் மாவட்ட துணை தலைவர் தோழர் முனியசாமி ,,மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ,BSNLEU மாவட்ட துணை செயலர் தோழர் முத்துச்சாமி ,மற்றும் கிளை மாவட்ட சங்க நிர்வாகிகள் பேசினர் .போராட்டத்தை வாழ்த்தி முற்போக்கு எழுத்தாளர் சங்க நிர்வாகி தோழர் தேனீ வசந்தன் ,அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் கண்ணன் ,ஆகியோர் பேசினர் .மாவட்டம் முழுவதும் இருந்து 170 தோழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு ஒரு முத்திரை பதித்த போராட்டமாக திகழ்ந்தது .தோழர்கள் உணவுக்காக மனிதாபிமானத்தோடு பல ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் பங்களிப்பாக ரூபாய் 5250/- வழங்கினர் மாநில சங்க வழிகாட்டலுடன் போராட்டம் மாலை 5 மணிக்கு நிறுத்தப்பட்டது .மேலும் இப் பிரச்சனைக்காக நமது BSNLEU ,TNTCWU மாநில சங்க நிர்வாகிகள் வரும் 02/01/2018 அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்க இருப்பதாக மாநில சங்கம் அறிவித்து உள்ளது நெஞ்சுறுதியோடு 2 நாட்கள் களம் கண்ட நமது தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .உதவி கரம் நீட்டிய நெஞ்சங்களுக்கு நன்றியை தெரிவித்து கொளகிறோம் .