போராட்ட விளக்க கூட்டங்கள்
7 ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி ,ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் போராட்ட விளக்க கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றது .இக் கூட்டங்களில் நமது BSNLEU மாநில சங்க நிர்வாகி தோழர்பழனிக்குமார் ஒரு அற்புதமானஎழுச்சியுரை நிகழ்த்தினார் .மேலும் போராட்டத்தை விளக்கி சேவா BSNL சார்பாக அதன் மாநில உதவி செயலர் தோழர் R பிரேம்குமார் ,அதன் மாவட்ட தலைவர் தோழர் I .கோவிந்தன் ,SNEA மாநில சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜன் , கிளை செயலர் தோழர் தங்கவேலு ,AIBSNLEA சங்கம் சார்பாக அதன் மாவட்ட தலைவர் தோழர் A.நாராயணன் ஆகியோர் விரிவாக பேசினர் .சிவகாசியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர் ராஜையாவும் ,ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டத்திற்கு தோழர் கோவிந்தன் அவர்களும் ,ராஜபாளையம் கூட்டத்திற்கு சேவா BSNL மாவட்ட செயலர் தோழர் ராஜகுருவும் தலைமை வகித்தனர் .இக் கூட்டங்களில் அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment