BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களின் மாநில சங்க அறைகூவலின் படி விருதுநகரில் இன்று மாலை 3.30 மணி அளவில் எழுச்சி மிகு மாலை நேர தர்ணா தோழர் முனியசாமி ,TNTCWU மாவட்ட உதவி தலைவர் தலைமையில் நடைபெற்றது .தர்ணாவை முறையாக BSNLEU தமிழ் மாநில சங்க அமைப்பு செயலாளர் தோழர் சமுத்திரக்கனி துவக்கி வைத்தார் .கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி ,TNTCWU சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ,மாநில சங்க நிர்வாகி தோழர் வேல்சாமி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சமுத்திரம் ,முனியாண்டி ,கிருஷ்ணகுமார் ,அனவ்ரதம் மற்றும் பலர் பேசினர் . மாவட்டம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது .
இது பினாமிகள் சங்கம் அல்ல
சுனாமி போன்று சுழன்று அடிக்கும் சங்கம் என்பதை புரியாத அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment