Tuesday, September 30, 2014

அனைவருக்கும் இனிய தசரா நல் வாழ்த்துக்கள்

Free Dussehra, Vijaya Dashami, Dasara Greetings e-cards | Animated Glitter Scraps

IDA உயர்வு

01-10-2014 முதல் IDA 6.9% உயர்ந்து மொத்த IDA 98.2% ஆக இருக்கும் .செய்தி படிக்க :-Click Here

2 மணி நேர வெளி நடப்பு போராட்டம்

        JAC அறைகூவலின்  படி இன்று நடைபெற்ற 2 மணி நேர வெளி நடப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், அருப்புகோட்டை மற்றும் சிவகாசி CSC கள் மூடப்பட்டன .விருதுநகர் GM  அலுவலகத்தில் ஒரு சிலரை   தவிர்த்து அனைவரும் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் .JAC தலைவர் தோழர் சக்கணன் தலைமை தாங்க JAC கன்வீனர் தோழர் ரவீந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார் .தோழர் இளமாறன் எழுச்சியான கோஷத்தை எழுப்ப தோழர் சம்பத்குமார் நன்றியுரை  கூறி   ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார் . 

Monday, September 29, 2014

'Will revive BSNL, MTNL as I did Coal India': Ravi Shankar Prasad

Loss-making state-owned telecom service providers, Bharat Sanchar Nigam (BSNL) and MTNL will not be privatised; instead they will be turned around, telecom minister Ravi Shankar Prasad has said.For the private sector players, the minister’s message is that he’s willing to take a re-look at the merger and acquisition guidelines finalised by the UPA government, if they feel that it is not workable. Also that sufficient spectrum to operators and its optimum utilisation by them will be ensured by him.In a wide-ranging interview with FE, Prasad, who also holds the law portfolio, acknowledged that there were serious problems with the two PSUs. He also alleged that the previous government had ruined them and was responsible for their current plight. “BSNL and MTNL were not provided the requisite infrastructure support for 4-5 years by the previous government. There were forces interested that they do not do well and they succeeded,” Prasad said.Asked how does he plan to turn around the units that have been posting losses for the last 4-5 years and having a miniscule market share of 11%, Prasad said that he has experience in turning around loss-making PSUs and has done so with Coal India when he was coal minister during the Vajpayee government’s regime. “When I was a coal minister in the Vajpayee government, CIL had a net loss of around R1,400 crore. Within one-and-a-half years, I turned around the company and it posted a net profit of around R1,500 crore,” Prasad said.The minister declined to give a time-frame for turning around BSNL and MTNL but said that he was closely monitoring them. Though he did not share his strategy for turning them around, he said that a merger between the two was being contemplated.Prasad, who is overseeing the Digital India project of Prime Minister Narendra Modi, acknowledged that average spectrum holding with domestic operators was small compared to global averages. He also agreed that unless optimal spectrum was not provided to the operators, programmes like e-governance, e-health and e-education would not succeed.He said that he’s directed his officials to work out the final guidelines for spectrum trading and sharing by the year end. Also spectrum harmonisation is being worked out with the defence ministry so that more 2G and 3G spectrum is released for commercial services. “Sharing and trading guidelines would be in place by the year-end and so would be the case with spectrum harmonisation.
                  <courtesy:- The Financial Express>

மாநில மாநாட்டு போஸ்டர்


நாடாளுமன்ற நிலைகுழுவுடன் சந்திப்பு

     ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு (BSNLCCWF) சார்பாக நமது தலைவர்களை தொழிலாளருக்கான நாடாளுமன்ற நிலைகுழு இன்று சந்தித்தது.பாராளுமன்ற கட்டிடத்தில் இக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் தோழர் V.A.N. நம்பூதிரி, துணை தலைவர் தோழர் பி அபிமன்யு, பொது செயலர் தோழர் . தபாஸ் கோஷ், மற்றும் துணை தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா, ஆகியோர் இச் சந்திப்பில் பங்கேற்றனர்.குறைந்த பட்ச ஊதியம் வழங்காமல் இருப்பது , பணிக்கொடை,வருங்கால வைப்பு நிதி , மற்றும் ESI திட்டங்கள் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது போன்ற பிரச்சினைகள் பற்றி இக் கூட்டத்தில் விவாதித்தனர். இந்த நாடாளுமன்ற நிலைகுழு CMD உட்பட BSNL மற்றும் DOT அதிகாரிகளையும் சந்தித்து உள்ளது .

Sunday, September 28, 2014

இரண்டு மணி நேர வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

தமிழ் மாநில செயற்குழு

தமிழ் மாநில செயற்குழு 27-09-2014 அன்று சென்னை கிண்டியில் உள்ள CITU அலுவலகத்தில் மாநில துணை தலைவர் தோழர் பரமேஸ்வரன் தலைமையில் 30-09-2014 அன்று பணி ஓய்வு பெற உள்ள வேலூர் மாவட்ட செயலர் தோழர் ஞானசேகரன் அவர்கள் நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க கொடியை ஏற்றி வைக்க முறையாக தொடங்கியது .ஒரு கருத்தோட்டம் மிக்க செயல்பாட்டு அறிக்கையை நமது மாநில செயலர் தோழர் செல்லப்பா சமர்பித்தார் .செழுமையான விவாதத்தோடு தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு செயல்பாட்டு அறிக்கை ஏற்று கொள்ளப்பட்டது .மாநில பொருளாளர் தோழர் ஸ்ரீனிவாசன் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கையும் ஏற்று கொள்ளப்பட்டது.மாநில  செயலர் தன் உரையில் சமீபத்தில் வேலூர்   மாவட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பிரச்சனையில் அவர்களை மீண்டும் பணியில் எடுக்க கோரி நாம் நடத்திய போராட்டத்தின் தன்மையையும் , அதில் நாம் அடைந்த வெற்றியும் , அப்   போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள்  திரண்டு  வந்த நிகழ்வும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது என நினைவு கூர்ந்தார்.இம் மாதம் 30-09-2014 அன்று பணி ஓய்வு   பெற உள்ள சூழலில்  கூட இப் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்ற வேலூர் மாவட்ட செயலர் தோழர் ஞானசேகரன் அவர்களை மாநில செயலர் பாராட்டினார் .மாநில மாநாடு சார்பாளர் எண்ணிக்கை இரண்டு ஆண்டு பகுதி பணம் செலுத்திய அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும் .மகாநாட்டில் பார்வையாளர் அனுமதி கிடையாது .முதல் நாள் பொது அரங்க நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கலாம் .வரும் அனைவர்க்கும் காலை மற்றும் மதியம் உணவு ஏற்பாடு செய்யப்படும் .சார்பாளர் பங்கேற்பில் மகளிருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் .மகாநாட்டு வேலையின்  அடிப்படையில் பணிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன .மாநில மகாநாட்டில் பங்கேற்க மாவட்டம் முழுவதும் அணிதிரட்டுவோம் .  மாநில மாநாட்டு நிதியாக நமது மாவட்டம் சார்பாக ரூபாய் 58,000/- கொடுக்கப்பட்டு விட்டது .நிதியை பொறுத்தவரை மேல்மட்டங்களுக்கு முறையாக ,மற்றும் முழுமையாக கொடுப்பதில் நமது மாவட்ட சங்கம் மாநில சங்கத்தால் பாராட்டப்பட்டு உள்ளது .இம் முயற்சியில் மாவட்ட சங்கத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைத்து உறுப்பினர்களுக்கும் மாவட்ட சங்கம் தன் நன்றியறிதலை தெரிவித்து  கொள்கிறது .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...