திருவில்லிபுத்தூர் நகரில் இன்று நடைபெற்ற நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க 3 ஆவது சிறப்பு செயற்குழு முடிவுகள்
1.அனைத்திந்திய மகாநாட்டு சார்பாளர்களாக நமது விருதுநகர் மாவட்ட சங்கம் சார்பாக தோழர்கள் ரவீந்திரன் SSS, சமுத்திரகனி, TM மற்றும் முத்துராமலிங்கம் ,TTA ஆகியோர் கலந்து கொள்வர் .பார்வையாளர்களாக தோழர்கள் C .சந்திரசேகரன் ,TM, M .கருப்பசாமி,TM, ஆகியோர் கலந்து கொள்வர்.

2. மாநில மகாநாட்டு பொது அரங்க நிகழ்ச்சிக்கு அனைத்து கிளைகளும் வேன் ஏற்பாடு செய்து அதிக ஊழியர்களை அழைத்து வரவேண்டும் .
3. வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள JAC போராட்ட அழைப்பான தர்ணா போராட்டத்தை மிகவும் சக்தியாக நடத்துவது .
4. மாநில மகாநாட்டு நிதியை பொறுத்தவரை அருப்புகோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ,சிவகாசி SDOP ,ராஜபாளையம் கிளைகள் முழுமையாக கொடுத்துவிட்டன .
5. ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட சங்க மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் தொடர்ந்து BSNLEU சங்க நிர்வாகிகளோடு ஒரு சரியான நிலை பாட்டை அனுசரிக்காது இருப்பதை மாவட்ட சங்கம் வருத்தத்துடன் பார்க்கிறது .தன்னிச்சை போக்கு சமீப காலமாக தொடர்ந்து வளருவது சரியல்ல.இதை BSNLEU மாவட்ட சங்கம் அனுமதிக்காது .வரும் காலங்களில் ஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டங்கள் BSNLEU சங்க கிளை கூட்டங்களோடு மட்டுமே நடத்த வேண்டும்என மாவட்ட செயற்குழு முடிவு எடுத்துள்ளது . ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தோழர்கள் ரவீந்திரன், சமுத்திரகனி,முத்துசாமி,தங்கதுரை,கண்ணன்,சந்திரசேகரன்,சிங்காரவேல்,ஜெயக்குமார்,சிவஞானம்,ஜெயபாண்டியன் ஆகியோர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment