அருப்புகோட்டை பகுதியில் எழுத்தர் கேடரில் சுழல் மாற்றம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட பொது மேலாளரிடம் பல முறை மாவட்ட சங்கம் பேசியுள்ளது .மாநில தலைமை பொது மேலாளர் எந்த மாறுதல் உத்தரவையும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடைமுறை படுத்த கூடாது என கூறியுள்ளதால் உங்கள் "Grievance " என்ன என்பதை கூறுங்கள்..அதை நடைமுறைப்படுத்துகிறேன் என்று கூறிய மாவட்ட பொது மேலாளர் அவர்கள் தற்போது 1 மாத அவகாசம் கேட்டுள்ளார் .நேற்று நடைபெற்ற பேட்டியின் போது கீழ்க்கண்ட கருத்துக்களை நாம் கூறியுள்ளோம் .
1.அருப்புகோட்டையில் எழுத்தர் கேடரில் சுழல் மாற்றம் செய்யும் போது சுழல் மாற்றல் நடைபெறாத அனைத்து ஊர்களிலும் அதை நடைமுறைப்படுத்த நமது சங்கம் ஒத்து கொண்டது .
2.அதை அமல்படுத்த தாமதமாகும் பட்சத்தில் நமது சங்க "Grievance " ஐ அமல்படுத்தப்படும்போது NFTE சங்கத்தின் "Grievance " இருந்தால் அதையும் செட்டில் செய்ய நாம் ஒத்து கொண்டோம் .
3.சென்ற ஆண்டு ஒரு ஊழியர்க்கு மாவட்ட நிர்வாகத்தால் போடப்பட்ட மாறுதல் உத்தரவு இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை என்பதை பொது மேலாளரிடம் சுட்டி காட்டிய போது அதை அமல்படுத்தாத அருப்புகோட்டை கோட்ட பொறியாளரிடம் விளக்கம் கேட்டு உடனடியாக கடிதம் எழுத உத்தரவு இட்டுள்ளார் .
4. CSC அருப்புகோட்டையில் ஒரு ஊழியர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக ஒரே சீட்டை பார்க்க கூடிய விசயத்தை பொது மேலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் .
5.DE லெவலில் முடியக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் தட்டி கழித்து மாவட்ட நிர்வாகத்தின் முடிவுக்கு அனுப்புகின்ற DE ,அருப்புகோட்டை அவர்களின் போக்கை பொது மேலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் .
No comments:
Post a Comment