Sunday, September 28, 2014

தமிழ் மாநில செயற்குழு

தமிழ் மாநில செயற்குழு 27-09-2014 அன்று சென்னை கிண்டியில் உள்ள CITU அலுவலகத்தில் மாநில துணை தலைவர் தோழர் பரமேஸ்வரன் தலைமையில் 30-09-2014 அன்று பணி ஓய்வு பெற உள்ள வேலூர் மாவட்ட செயலர் தோழர் ஞானசேகரன் அவர்கள் நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க கொடியை ஏற்றி வைக்க முறையாக தொடங்கியது .ஒரு கருத்தோட்டம் மிக்க செயல்பாட்டு அறிக்கையை நமது மாநில செயலர் தோழர் செல்லப்பா சமர்பித்தார் .செழுமையான விவாதத்தோடு தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு செயல்பாட்டு அறிக்கை ஏற்று கொள்ளப்பட்டது .மாநில பொருளாளர் தோழர் ஸ்ரீனிவாசன் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கையும் ஏற்று கொள்ளப்பட்டது.மாநில  செயலர் தன் உரையில் சமீபத்தில் வேலூர்   மாவட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பிரச்சனையில் அவர்களை மீண்டும் பணியில் எடுக்க கோரி நாம் நடத்திய போராட்டத்தின் தன்மையையும் , அதில் நாம் அடைந்த வெற்றியும் , அப்   போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள்  திரண்டு  வந்த நிகழ்வும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது என நினைவு கூர்ந்தார்.இம் மாதம் 30-09-2014 அன்று பணி ஓய்வு   பெற உள்ள சூழலில்  கூட இப் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்ற வேலூர் மாவட்ட செயலர் தோழர் ஞானசேகரன் அவர்களை மாநில செயலர் பாராட்டினார் .மாநில மாநாடு சார்பாளர் எண்ணிக்கை இரண்டு ஆண்டு பகுதி பணம் செலுத்திய அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும் .மகாநாட்டில் பார்வையாளர் அனுமதி கிடையாது .முதல் நாள் பொது அரங்க நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கலாம் .வரும் அனைவர்க்கும் காலை மற்றும் மதியம் உணவு ஏற்பாடு செய்யப்படும் .சார்பாளர் பங்கேற்பில் மகளிருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் .மகாநாட்டு வேலையின்  அடிப்படையில் பணிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன .மாநில மகாநாட்டில் பங்கேற்க மாவட்டம் முழுவதும் அணிதிரட்டுவோம் .  மாநில மாநாட்டு நிதியாக நமது மாவட்டம் சார்பாக ரூபாய் 58,000/- கொடுக்கப்பட்டு விட்டது .நிதியை பொறுத்தவரை மேல்மட்டங்களுக்கு முறையாக ,மற்றும் முழுமையாக கொடுப்பதில் நமது மாவட்ட சங்கம் மாநில சங்கத்தால் பாராட்டப்பட்டு உள்ளது .இம் முயற்சியில் மாவட்ட சங்கத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைத்து உறுப்பினர்களுக்கும் மாவட்ட சங்கம் தன் நன்றியறிதலை தெரிவித்து  கொள்கிறது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...