நமது BSNLEU சங்கம் இந்த மாதம் மூன்றாம் முறையாக ரோடு ஷோவை மாவட்டம் முழுவதும் நடத்தி உள்ளது .ஒரே நாளில் கிட்டத்தட்ட 1000 சிம்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன .திருச்சுழியில் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் மதி கண்ணன் ,சேல்ஸ் நாயகன் தோழர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர் .இங்கு 154 சிம்கள் விற்கப்பட்டன .ராஜபாளையத்தில் நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் முருகன், ராதாகிருஷ்ணன் ,அனவ்ரதம் ,கிளை செயலர் தோழர் பொன்ராஜ் மற்றும் வெள்ளைப்பிள்ளையார் ,பொன்னுச்சாமி ஆகியோர் பங்கேற்ற நிகழ்வில் அதிக பட்சமாக 320 சிமகள் +1 MNP பெறப்பட்டு உள்ளது .சிவகாசியில் 105 , திருத்தங்கலில் 145, ஸ்ரீவில்லிபுத்தூரில் 40, கூமாபட்டியில் 35,காரியாபட்டியில் 107, விருதுநகரில் 30 விற்பனை செய்யப்பட்டு உள்ளன .வீரசோழனில் 1 லேண்ட் லைன் இணைப்பு பெறப்பட்டு உள்ளது .சிவகாசி கிளை செயலர்கள் முத்துசாமி ,கருப்பசாமி ,ஸ்ரீவில்லிபுத்தூரில் சமுத்திரம் ,வெங்கடசாமி ,சுந்தரமஹாலிங்கம் ,கணேசமூர்த்தி ,சுப்பையா ,தோழியர்கள் பாண்டிசெல்வி ,பாண்டியம்மாள் ,தோழர் கோவிந்தராஜ் மற்றும் பலர் பங்கேற்று உள்ளனர் .மீண்டும் மீண்டும் சாதனை படைக்கிறது நமது சங்கம் மார்க்கெட்டிங் பணிகளில் .



