Tuesday, December 6, 2016

அஞ்சலி 

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் கழித்து நேற்று இரவு 1130 மணி அளவில்  மரணமடைந்தார்.அவரது மறைவிற்கு விருதுநகர் BSNLEU மாவட்ட சங்கம் நெஞ்சார்ந்த அஞ்சலியை தெரிவித்து கொள்கிறது .
செ. செயலலிதா என்று அறியப்படும் கோமளவல்லி செயராம் (4 பிப்ரவரி 1948 - 5 டிசம்பர் 2016) தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத்திரைப்பட நடிகையும் ஆவார். இவர்தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 அன்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 ற்கும் மேற்பட்ட தமிழ்,தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக உள்ள இவரைப் "புரட்சித் தலைவி" என இவரது ஆதரவாளர்கள் அழைப்பர்தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம்ஸ்ரீரங்கம் எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்ட இவர்,கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர்.1984 முதல் 1989 வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைஉறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ம. கோ. இராமச்சந்திரனின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக ஜெயலலிதா தன்னை அறிவித்துக் கொண்டார். ஜானகி இராமச்சந்திரனுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...