24/12/2016 அன்று நமது விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் D.செல்வராஜ் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா தோழர் சமுத்திரக்கனி,மாவட்ட தலைவர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மறைந்த கியூபாவின் சோஷலிச நாயகன் தோழர் பிடல் காஸ்ட்ரோ , கவிஞன் இன்குலாப் ,நமது மண்ணின் மைந்தன் தோழர் முத்துராமலிங்கம் அவர்களின் மறைவிற்கு நினைவஞ்சலி செலுத்தி மாவட்ட செயலர் ரவீந்திரன் விரிவடைந்த செயற்குழுவை முறையாக தொடக்கி வைத்தார் .முன்னதாக தோழர் செல்வராஜ் அவர்களின் குடும்ப சிறுமி சிறுவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது .ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் தோழர் முத்துராஜ் மற்றும் நமது தமிழ் மாநில சங்க உதவி மணிலா செயலர் தோழியர் .V.P.இந்திரா அவர்கள் சிறப்புரை.நிகழ்தினார்கள் .நடந்து முடிந்த டிசம்பர் 15 வேலை நிறுத்தம் ,மார்க்கெட்டிங் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன .தோழர் செல்வராஜ் அவர்களின் பணி நிறைவை பாராட்டி தோழர்கள் சமுத்திரக்கனி ,ரவீந்திரன் ,முத்துசாமி,கருப்பசாமி ஆகியோர் பேசினர் .மாவட்ட சங்கம் சார்பாக தோழர் செல்வராஜ் அவர்களுக்கு ஒரு நினைவு பரிசை அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் இணைந்து வழங்கினர் .தோழர் செல்வராஜ் அவர்கள் தனது பணி நிறைவை ஒட்டி மணிலா சங்கத்திற்கு ரூபாய் 2000/-ஐ உடனடியாக மாநில சங்க உதவி செயலர் தோழியர் இந்திராவிடம் ரூபாய் .அத்துடன் மாவட்ட சங்கத்திற்கு ரூபாய் 1500 ம் ,சிவகாசி இரு கிளைகளுக்கு தலா ரூபாய் 500 /ம், ஒப்பந்த ஊழியர் மாவட்ட சங்கம் மற்றும் கிளை சங்கத்திற்கு தலா ரூபாய் 250/- ம் வழங்க உள்ளார் .மேலும் விரிவடைந்த மாவட்ட செயற்குழு நடத்த மண்டப செலவு ,உணவு செலவு அனைத்தையும் தோழர் செல்வராஜ் அவர்களே ஏற்று கொண்டது சிறப்பு மிக்க நிகழ்வு .அந்த தோழருக்கு மாவட்ட சங்கம் தனது நெஞ்சு நிறை நன்றியை தெரிவித்து கொள்கிறது .அன்று நடைபெற்ற சேவை கருத்தரங்கத்தில் நமது BSNL நிறுவனத்தின் புதிய பிளான்களை பொது மக்களிடம் கொண்டு செல்வது பற்றி விவாதிக்கப்பட்டது .நமது மாவட்ட துணை பொது மேலாளர் திரு .S.ராதாகிருஷ்ணன் அவர்கள் கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார் .மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் நன்றி நவில செயற்குழு இனிதே நிறைவுற்றது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment