Friday, October 28, 2016

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அனைவர்க்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை விருதுநகர் மாவட்ட BSNLEU சங்கம் தெரிவித்து கொள்கிறது 

Thursday, October 27, 2016

2 வது மாவட்ட செயற்குழு கூட்டம்

     இன்று நமது BSNLEU சங்கத்தின் 2 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் L .தங்கதுரை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி பேச அனைவரும்  1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்

பின்னர் மாவட்ட செயலர் சமர்ப்பித்த விவாத குறிப்பின் மீது விவாதம் நடைபெற்றது .வரும் நவம்பர் 10 போராட்டத்திற்கு 2 பேருந்துகளில் ஊழியர்களை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது .வரும் நவம்பர் மாதம் 17,18,19 தேதிகளில்   ரோடு ஷோ நடத்துவது .பெரும் எண்ணிக்கையில் நமது ஊழியர்களை ஈடுபடுத்துவது .ரோடு  ஷோகளில் விற்கப்படும் சிமகள் கடும் காலதாமதத்திற்கு பிறகு activation செய்யப்படுவது வாடிக்கையாளர் மத்தியில் கடும் அதிருப்தி உள்ளதை அனைவரும் சுட்டி காட்டினார்கள் .அனைத்து கிளை செயலர்களும் மாநில ,மாவட்ட சங்க செய்திகளை உடனடியாக சங்க பலகையில் போட  வேண்டும் .விருதுநகர் ,சிவகாசி தவிர்த்து அனைத்து  கிளைகளும் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் .பிரைமரி மற்றும் பில்லர் பிரச்சனைகள் சரி செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை அனைத்து பகுதியிலும் வந்துள்ளன .கேடர் பெயர் மாற்றத்திற்கு பிறகு அனைவருக்கும் புதிய அடையாள அட்டை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை ,வரும் 5 மாதங்களில் outdoor பகுதியில் அதிகம் பேர் பணி ஒய்வு பெற உள்ளதை ஒட்டி அலுவலக பணியில் இருந்து  TT  களை விடுவிக்க வேண்டும் , AO (drawal ) பகுதியில் ஊழியர் பிரச்சனைகள் அலைக்கழிக்கப்படுவதை பல தோழர்கள் சுட்டி காட்டி உள்ளனர் ஆவியூர் BSNL site இல் CALL DROP ஆவது, RR நகர், கலெக்டர் EXCHANGE பகுதியில் நீண்ட நாட்களாக நிலவும் தண்ணீர் பிரச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் மைக்ரோ வேவ் குடியிருப்பில் சிண்டெக்ஸ் மாற்ற வேண்டிய பிரச்சனைகள்  பிராட் பேண்ட் மற்றும் 3G யில் உள்ள ஸ்பீட் பிரச்சனை, Outdoor பகுதியில் அதிகம் உள்ள JE களை அதிகம் தேவைப்படும் பகுதிகளுக்கு மாற்றுவது, N.சுப்பையாபுரம் BTS,  M.ரெட்டியாபட்டி  BTS, பெத்தூரெட்டியபட்டிBTS, சிவகாசியில் கவிதா நகர் காந்தி ரோடு,தெய்வானை நகர் பகுதிகளில் கேபிள் போடுவது ,ஒப்பந்த ஊழியர்களுக்கு கடப்பாரை, மண்வெட்டி ஆகியவற்றை நிர்வாகம் வழங்குவது ,ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த அளவே போனஸ் வழங்கப்பட்டு உள்ளதை சரி செய்ய கடிதம் கொடுப்பது, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ரிங்கை சரி செயவது என்று சேவையை வளப்படுத்தக்கூடிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன .மாவட்ட சங்கம் இதை முழுமையாக தொகுத்து நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கும் .லோக்கல் கவுன்சில் மற்றும் ஒர்க் கமிட்டி கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று இன்று நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்து உள்ளோம் .தேவைப்படும் இடங்களில் ஊழியர்களை நிரப்புவதில் நிர்வாகம் காலதாமதம் செய்தால் ஒரு எழுச்சிமிகு போராட்டத்தை நிர்வாகத்திற்கு எதிராக நடத்துவது என்ற முடிவோடு மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூற செயற்குழு நிறைவு பெற்றது . மதிய உணவுக்கான செலவை தன் தாயார் நினைவு தினத்தை ஒட்டி முழுமையாக ஏற்று கொண்ட மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் அவர்களுக்கு மாவட்ட சங்கம் தன நன்றியை தெரிவித்து கொள்கிறது .




















ஆர்ப்பாட்டம்


BSNL நிறுவனத்திற்கு சொந்தமான டவர்களை பிரித்து தனியாக ஒரு துணை நிறுவனம் அமைக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து விருதுநகர் GM அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி தலைமை வகித்தார் .கோரிக்கையை விளக்கி BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,NFTE  பொறுப்பு மாவட்ட செயலர் தோழர் D.ரமேஷ் ,AIBSNLEA மாவட்ட சங்க நிர்வாகி தோழர் மணிகண்டன் ஆகியோர் விரிவாக பேசினர் .அதன் பின் நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்பாட்டத்தில் GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் கோஷங்களை எழுப்ப ,NFTE சங்க கிளை செயலர் தோழர் சம்பத்குமார் நன்றியுரை கூறினார் .பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் ,அதிகாரிகள் கலந்து கொண்டனர் .ஆனால் இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு SNEA சங்கத்தில் இருந்து ஒரு அதிகாரியும் கலந்து கொள்ளாதது வருந்தத்தக்க நிகழ்வு ஆகும் 










Wednesday, October 26, 2016

அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழுக் கூட்டம் Tuesday, 25 October, 2016

மாநில சங்க சுற்றறிக்கை எண்:136 படிக்க :-Click Here

சென்னையில் நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம்

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

பாராட்டு

அனைத்திந்திய மாநாட்டு நிதி திரட்டும் இயக்கத்தில் மாநிலத்தில் இலக்கை எட்டிய முதல் மாவட்டமாக விருதுநகர் வந்ததற்கு மாவட்டத்திற்கு கிடைத்த பாராட்டு .இதை விருதை BSNLEU மாவட்ட ஊழியர்களுக்கு சமர்பிக்கிறோம்.

மாலை நேர தர்ணா

சென்னையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 11 பெண் ஊழியர்களுக்கு மீண்டும் பணிவழங்க வலியுறுத்தி விருதுநகர் GMஅலுவலகம் முன்பு தோழர் கருப்பசாமி ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்த .ஊழியர்கள் பங்கேற்றனர் .தர்ணாவை முறையாக ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் துவக்கி வைத்தார் .அச் சங்கத்தின் மாநில  பொறுப்பாளர் தோழர் வேலுச்சாமி உட்பட பலர் தர்ணாவை வாழ்த்தி பேசினர் .

Saturday, October 22, 2016

பிஎஸ்என்எல் லாபம் ஈட்டியதில் ஊழியர் சங்கத்திற்கும் பெரும்பங்கு உள்ளது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் பேச்சு




பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத் தின் 8வது அகில இந்திய மாநாடு வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதி துவங்கி ஜனவரி 3ம் தேதி வரை 4 நாட்கள் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான வரவேற்புக் குழு கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் வியாழனன்று (அக். 20) சென்னையில் நடைபெற்றது.சர்க்கிள் செயலாளர் ஏ.பாபுராதாகிருஷ்ணன் வரவேற்றார்.டி.கே.ரங்கராஜன் பேசுகையில் பிஎஸ்என்எல் முந்தைய ஆண்டுகளை விட கடந்தாண்டு லாபம் ஈட்டியுள்ளது. இதில் ஊழியர் சங்கத்திற் கும் பெரும் பங்குள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களின் லாபத்தை பெருக்கிக் கொள்வதற்காக இங் குள்ள தொழிலாளர்கள் சுரண்டப் படுகிறார்கள். புதிய பொருளாதாரக் கொள்கைகளின் ஷரத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஆளும் வர்க் கம் அவர்களது நோக்கத்தை மட்டுமே நோக்கி பயணிக்கிறார்கள். அவர்களுக்கு ஒத்து வராதவர்களை வெளியே எடுத்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு வங்கியின் வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்று சொன்ன ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜனை அப்பொறுப்பில் இருந்து நீக்கினார்கள். அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இந்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. படித்து வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால்தான் புதிய கல்விக் கொள்கையை அறிவித்து அதன்மூலம் கல்விதர மறுக்கிறது மத்திய அரசு. அனைவருக்கும் இலவச கல்வி, வேலை , ஆண் பெண் சமத் துவம் என்பது ஜனநாயக கோஷம். தீண்டாமை, ஆணவப் படுகொலை இவற்றுக்கெதிரான உறுதியான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த மாநாடு அமைய வேண்டும் என்றார்.தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் பி.சம்பத் பேசுகையில் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கை என்பது தொழிலாளர் களை மட்டும் பாதிக்கவில்லை. அது தேச விரோதக் கொள்கையாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் சாதகமான கொள்கை. இதை ஊழியர் சங்கம் முறியடிக்கும். ஒப்பந்த முறையை எதிர்க்கிறோம். அதே நேரத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. செப். 2 ஒரு நாள் வேலை நிறுத்தம் என்பது மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வருங் காலங்களில் தொடர் வேலை நிறுத்தமாக நடைபெறும். மதவாத, வகுப்புவாத சக்திகளிடம் நாடு சிக்கிக் கொண்டுள்ளது.மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். இதற்கெதிரான வலுவான போராட்டத்தை நடத்த வேண்டும் என்றார்.பிஎஸ்என்எல்இயு பொதுச் செயலாளர் பி.அபிமன்யூ பேசுகையில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட சங்க மாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுக்கும் அவர்கள் பெற்ற வாக்கு சதவிகித அடிப் படையில் பிரதிநிதித் துவம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து அதிலும் வெற்றி பெற்றுள்ளது. தொலைத் தொடர்புத் துறையை தனியார்மயமாக்காமல் இருக்க மென்மேலும் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது. பி.எஸ்.என்.எல். டவர்களை தனிநிறுவனமாக மாற்றும் முயற் சியை எதிர்த்து, வரும் 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரதூதராக இருக்கி றார் பிரதமர் மோடி. ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பி.எஸ்.என்.எல்.தான் போட்டியாக உள்ளது. மாதா மாதம் இணைப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.ரிலையன்ஸ் நிறுவனம் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஜியோவை அறிமுகப்படுத்தியது. ஆனால் அந்த மாதம் மட்டும் பி.எஸ்.என்.எல். 2,50,000 புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் இலவச வாய்ஸ் காலை வழங்க உள்ளது பி.எஸ்.என்.எல். நிறுவனம். இதற்கு ஊழியர் சங்கத் திற்கு பெரும் பங்குண்டு என்றார்.சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் பேசுகையில் தொலைதொடர்புத் துறை ஊழியர்களுக்கு இது சவால்கள் நிறைந்த காலம். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது பழமொழி. ஆனால் இந்திய பிரதமர் மோடி அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஆதரவாக இல்லாமல், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாகவே செயல்படுகிறார். மேலும் 24 மணி நேரமும் தனியார்மய சிந்தனையிலேயே செயல் படுகிறார் நம் பாரத பிரதமர் மோடி. இந்திய நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. ஊழியர் சங்கம் ஊழியர்களின் கோரிக்கையோடு நிறுவனத்தையும் பாதுகாக்கப் போராடி வருவது பாராட்டுக்கு உரியது. அனைத்து போராட்டங்களிலும் ஒப்பந்த தொழிலாளர்களை இணைத்துக் கொண்டு போராட வேண்டும். உங்களது அனைத்துப் போராட்டத்திற்கும் சிஐடியு ஆதரவளிக்கும் என்றார்.சிஐடியு துணைச் செயலாளர் ஆர்.கருமலையான், ஊழியர் சங்கத்தின் உதவி பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா, பி.எஸ்.என்.எல். பெண்கள் அமைப்பின் கன்வீனர் பி.இந்திரா, போஸ்டல் ஊழியர் சங்க நிர்வாகி ஜி.கண்ணன், காப்பீட்டு ஊழியர் சங்க நிர்வாகி டி.செந்தில்குமார் உள்ளிட்டோரும் பேசினர். மாநாட்டிற்கு விருதுநகர் மாவட்டத்தின் சார்பில் 3 லட்ச ரூபாயும், நாகர்கோயில்  மாவட்டம் சார்பில் 3.25 லட்ச ரூபாயும், ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பில் முதல் தவணையாக 22 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. ஊழியர் சங்கத்தின் பொருளாளர் கே.சீனிவாசன் நன்றி கூறினார். இதில் ஊழியர் சங்க நிர்வாகி கே.கோவிந்தராஜ், பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் எம்.முருகைய்யா, சி.பழனிச்சாமி மற்றும் மாநிலம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நன்றி :- தீக்கதிர்

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...