Tuesday, March 27, 2018

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL - ஆர்ப்பாட்டக் காட்சிகள்








திருவில்லிபுத்தூர் பொதுக்குழு

          திருவில்லிபுத்தூரில் கிளைப் பொதுக்குழு மார்ச் 26 அன்று மாலை கூடியது. பொதுக்குழுவில் மாவட்டத் தலைவர் தோழர் ஜெயக்குமார், மாவட்டச் சங்க நிர்வாகி தோழர் வெள்ளைப் பிள்ளையார், தோழர் முனியாண்டி, மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக்கனி, ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலர் தோழர் வேல்ச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
          
          பொதுக்குழுவின் ஒரு பகுதியாக தோழர் சஞ்சீவி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

          மாவட்ட மாநாட்டிற்கு திருவில்லிப்புத்தூர் தோழர்கள் நன்கொடையாக ரூபாய் 18,000 வழங்கினார்கள்.








Monday, March 26, 2018

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL - ஆர்ப்பாட்டம்

          ஊழியர்கள் மற்றும அதிகாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி 01.04.2018 முதல் துணை டவர் நிறுவனத்தை செயல்படுத்த தொலை தொடர்பு துறையும் அரசாங்கமும் வேகமாக செயல்பட்டு வருகின்றது. BSNLன் வளர்ச்சியை இந்த துணை டவர் நிறுவனம் நிறுத்திவிடும் என்ற காரணத்திற்காகவே நாம் இந்த துணை டவர் நிறுவனம் அமைக்கப்படுவதை எதிர்த்து வருகின்றோம். BSNLஐ பலவீனப்படுத்த அரசு எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியுற்றதால் அரசு இறுதி முயற்சியாக BSNLன் 70,000 டவர்களை அதனிடம் இருந்து பறித்து முடமாக்க பார்க்கிறது. BSNLன் உயிர் மூச்சு அதன் டவர்கள்தான். அந்த டவர்கள் BSNLஇடம் இருந்து பறிக்கப்பட்டது என்று சொன்னால் அது வெறும் எலும்புக்கூடாக மாறிவிடும். துணை டவர் நிறுவனத்தின் CMDஆக ஒரு IAS அதிகாரியை தொலை தொடர்பு துறை நியமித்துள்ளது. எனவே கண்டிப்பாக இது BSNL இயக்குனர் குழுவின் கீழ் செயல்படாது. இது அரசாங்கம் நடத்தும் ஒரு பகல் கொள்ளை. எனவே BSNL நிறுவனத்தை பாதுகாப்பதற்காக இந்த துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்திட 27.03.2018 அன்று அனைத்து கிளைகளிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் என ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL அறை கூவல் விடுத்துள்ளன. எனவே நமது மாவட்ட சங்கம் அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டும்.

Friday, March 23, 2018

நினைவு நாள்


‘ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்தப் போர் 
எங்களால் தொடங்கப்படவுமில்லை. 
எங்களுடன் முடியப்போவதுமில்லை’

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வதற்கு
தோழர் பகத்சிங்கின் 88ஆவது நினைவு நாளில் உறுதிகொள்வோம்.

Thursday, March 22, 2018

பொறுப்பு மாவட்டச் செயலர்

          மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் வரும் 23/03/2018 முதல் 23/04/2018வரை விடுப்பில் செல்ல இருப்பதால் மாவட்ட உதவி செயலர் தோழர் A.கண்ணன், JE, அருப்புக்கோட்டை பொறுப்பு மாவட்டச் செயலராக செயல்படுவார். 
- மாவட்ட செயலர்

Tuesday, March 13, 2018

பணி ஓய்வு பாராட்டு விழா

          2018 மார்ச் 13 அன்று நடைபெற்ற BSNLEU’வின் 9ஆவது மாவட்டச் செயற்குழுவின் ஒரு பகுதியாக மாவட்ட உதவித் தலைவர் தோழர் ராஜூ அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்டச் சங்க கிளைச் சங்க நிர்வாகிகள் வாழ்த்துரைகளும் நினைவுப் பரிசுகளும் வழங்கினர்.















9 ஆவது மாவட்ட செயற்குழு

          விருதுநகர் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் 9 ஆவது மாவட்ட செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
          அஞ்சலியுரையுடன் தொடங்கிய மாவட்ட செயற்குழுவில் ஆய்படுபொருளை தலைவர் விளக்கியதைத் தொடர்ந்து, விவாதக் குறிப்புகளை மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன் முன்வைத்தார்.
          டெல்லி பேரணி மற்றும் மாநிலச் சங்கச் செயல்பாடுகள் குறித்து மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக்கனி உரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் ஆய்படுபொருளின் மீதும் விதாகக் குறிப்புகளின் மீதும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
          இறுதியில் மாவட்டப் பொருளாளர் தோழர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
          
செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்
  1.  BSNL ஊழியர் சங்கத்தின் 9 ஆவது மாவட்ட மாநாட்டை வரும் மே மாதம் 29-30 தேதிகளில் நடத்துவது.
  1.  நமது மாவட்ட மாநாட்டிற்கு அனைத்திந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர் எஸ். செல்லப்பா, மாநிலச் செயலர் ஏ. பாபு ராதாகிருஷ்ணன் மற்றம் மாநில உதவிச் செயலர் தோழர் எம். முருகையா ஆகியோரை அழைப்பது.
  1.  முதல் நாள் மாநாடு பிரதிநிதிகள் அமர்வு, தோழமை சங்கங்களின் வாழ்த்துரை நிகழ்ச்சி நடைபெறும்.
  1. இரண்டாம் நாள் பொது அரங்கம், சேவை மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடைபெறும். இதில் மாவட்டப் பொது மேலாளர், துணைப் பொது மேலாளர், உதவிப் பொது மேலாளர், துணைப் பொது மேலாளர் (நிதி) ஆகியோரை அழைப்பது. பொது அரங்கில் உரை நிகழ்த்த CITU சங்கம் சார்பாக ஒரு சிறப்புப் பேச்சாளரை அழைப்பது.
  1.  விருதுநகர் மாவட்டத்தில் ஒட்டு மொத்த GSM சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்க கொண்டு செல்வது.
  1. ஏராளமான AirCell வாடிக்கையாளர்கள் BSNL சேவையை ஏற்க வருவது அதிகரித்து உள்ள சூழலில் வாடிக்கையாளர் சேவை மையங்களில் தற்காலிகமாக கூடுதல் பணியாளர்களை அமர்த்த மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது.
  1.  Long Stay மாறுதலில்  கார்ப்பரேட் அலுவலக உத்தரவு அடிப்படையில் மாறுதல்களை நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது.
  1.  30.04.2018வரை ரோடு ஷோக்களில் திரளாகப் பங்கேற்பது.
  1.  NFTE மாவட்ட மாநாட்டில் நமது BSNLEU மாவட்டச் செயலரை தரக்குறைவாகப் பேசியவர்களை இந்த மாவட்டச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.






























11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...