Showing posts with label கிளை மாநாடு. Show all posts
Showing posts with label கிளை மாநாடு. Show all posts

Monday, October 8, 2018

கிளை மாநாட்டு அழைப்பிதழ்


BSNLEU – அருப்புக்கோட்டை
14 ஆவது கிளை மாநாடு
10.10.2018 – புதன்கிழமை – மாலை 5.00 மணி – தொலைபேசி நிலையம்
தலைமை       : தோழர் U.B. உதயகுமார், கிளைத்தலைவர்
அஞ்சலி         : தோழர் கணேசமூர்த்தி, மாவட்ட அமைப்புச்செயலர்
வரவேற்புரை   : தோழர் A.சோலை, கிளைச் செயலர்
தொடக்கவுரை  : தோழர் S.ரவீந்திரன், மாவட்டச் செயலர்
செயல்பாட்டறிக்கை சமர்ப்பித்தல்
நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தல்
அமைப்புநிலை விவாதம்
             வாழ்த்துரை : திருமிகு சரவணன், கோட்டப் பொறியாளர், APK
    தோழர் A.சமுத்திரக்கனி, மாநில அமைப்புச் செயலர்
    தோழர் R.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர், BSNLEU
                தோழர் வேல்ச்சாமி, பொறுப்பு மாவட்டச் செயலர், TNTCWU
                தோழர் மனோகர், கிளைச் செயலர், SNEA
புதிய நிர்வாகிகள் தேர்வு
நன்றியுரை : புதிய செயலர்
அனைவரையும் வருக வருக என வரவேற்கும்
BSNL ஊழியர் சங்கம் – அருப்புக்கோட்டை கிளை

Sunday, September 10, 2017

அருப்புக்கோட்டை கிளை மாநாடு

அருப்புக்கோட்டை கிளை மாநாடு அதன் தலைவர் தோழர் உதயகுமார் தலைமையில் 09/09/2017 அன்று மாலை  5 மணிக்கு எழுச்சியுடன் நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் பதவி உயர்வு பெற்று செல்வதை  ஒட்டி அவருக்கு சிறப்பான பாராட்டு விழாவும் கிளை மாநாட்டுடன் இணைந்து நடைபெற்றது. தியாகிகளுக்கு தோழர் சோலை அஞ்சலி செலுத்தினார். அதன் பின் கிளை செயலர் தோழர் கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். முறையாக கிளை மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்கி வைத்தார். மாநாட்டை வாழ்த்தி SNEA மாவட்ட தலைவர் தோழர் சரவணன், கோட்ட பொறியாளர், அருப்புக்கோட்டை, மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார், JCTU தோழர் ராஜாராம், மாவட்ட மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் தோழர்கள் முத்துசாமி, காதர்  மொய்தீன், மாரியப்பா, மாரிமுத்து, சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி சிறப்புரை நிகழ்த்தினார். புதிய நிர்வாகிகளாக தோழர்கள் உதயகுமார் ,சோலை மற்றும் அய்யனார் அவரகள் தலைவர் ,செயலர் மற்றும் பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் .அதன் பின் நடைபெற்ற பாராட்டு விழாவில் தோழர்கள்  அனைவரும் தோழர் அஷ்ரப் தீன் அவர்களின் தொழிற்சங்க பணியை நினைவு கூர்ந்தனர். மாவட்ட சங்கம் சார்பாக தோழர் அஷ்ரப் தீன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பெற்றார். புதிய கிளை செயலர் தோழர் சோலை நன்றி நவின்றார்.





































Image may contain: 1 person, sitting

Image may contain: 7 people, people smiling, people sitting

Image may contain: 5 people, people sitting and indoor

Image may contain: 8 people, people sitting and indoor

Image may contain: 4 people, people sitting

Sunday, June 5, 2016

அருப்புக்கோட்டை கிளை மாநாடு

               அருப்புகோட்டை கிளை மாநாடு 04-06-2016 அன்று மாலை 5 மணி அளவில் தோழர் U .B .உதயகுமார் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் 7 வது சரிபார்ப்பு தேர்தலில் நமது மாவட்டத்தில் நமது வெற்றியின் தன்மை பற்றியும், தற்போது நெருக்கடியில் இருந்து மெல்ல மீண்டு எழும் நமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் பேசினார். வாழ்த்துரையாக நமது மாவட்ட செயலர் தோழர் A.சமுத்திரகனி, SNEA அருப்புகோட்டை கிளை செயலர் தோழர் மனோகர், ராஜை கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம், உதவி மாவட்ட செயலர் தோழர் சந்திரசேகரன், ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை செயலர் தோழர் சமுத்திரம் ஆகியோர் பேசினர். புதிய நிர்வாகிகளாக தோழர்கள் U.B. உதயகுமார், A.கண்ணன், A.S.அஷ்ரப் தீன் ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாளர் ஆக தேர்ந்து எடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின்   புரட்சிகர நல் வாழ்த்துக்கள் .



















11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...