Wednesday, July 31, 2013

குறைந்தபட்ச ஊதியம்

          BSNL  நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு  குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நமது அகில இந்திய தலைவர் தோழர் நம்பூதிரியின் பேட்டி
படிக்க :CLICK HERE

பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசா உயர்வு


வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

          முன்னதாக இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரி செலுத்துவோரின் வசதிக்காக ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் நமது பொது செயலர்

          அணுகுண்டுக்கு  எதிராக ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் 03-08-2013 முதல் 09-08-2013 வரை நடைபெற உள்ள  உலக மாநாட்டில் கலந்து கொள்ள நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள்  01-08-2013 அன்று ஜப்பான் செல்ல உள்ளார்.தோழர் அனிமேஷ் மித்ரா, துணை பொது செயலர் 01-08-2013 முதல் 11-08-2013 வரை பொறுப்பு பொது செயலராக பணியாற்றுவார்.  செய்தி படிக்க :-Click HERE

Tuesday, July 30, 2013

Department of Telecommunications seeks loan waiver for BSNL and MTNL

செய்தி படிக்க :-CLICK HERE

GoM on MTNL, BSNL revival to discuss spectrum issue on Aug 1

செய்தி படிக்க :-CLICK HERE

மீண்டும் பேச்சுவார்த்தை

          இன்று (30-07-2013) மீண்டும் நமது பொது செயலர் தோழர் அபிமன்யுவும், தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தியும் 78.2% IDA இணைப்பை அமல்படுத்துவதால் RM மற்றும் Gr"D" கேடரில் ஊதிய தேக்கம் ஏற்படுவதையும் அதனால் 80% மேற்பட்ட RM மற்றும் Gr"D" தோழர்கள் பாதிக்கபடுவதையும்   பொதுமேலாளர் R.K.கோயல் அவர்களை சந்தித்து விவாதித்து உள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்க நமது சங்கம் வலியுறுத்தி உள்ளது.
          நமது பொது செயலர் தோழர் அபிமன்யுவும், தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தியும் டைரக்டர் (HR) மற்றும் GM (SR) அவர்களையும் சந்தித்து பிரதான அங்கீகார சங்கமான BSNLEU சங்கத்திற்கு அனைத்து கமிட்டிகளிலும் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கபடவேண்டும் எனவும், மேனேஜ்மெண்ட் பயிற்சிக்கு ஊழியர்களை அனுமதிப்பது விஷயமாகவும்,ஆந்திரா மாநிலத்தில் மாறுதல்கள் விசயத்தில் தேவையற்ற  காலதாமதம் நீடிப்பது விஷயமாகவும் விவாதித்து உள்ளனர். 

Monday, July 29, 2013

தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு



          பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்திரம் செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.
          தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட 5 வது மாநாடு மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்பனா திருமண மண்டபத்தில் 2013 ஜூலை 21 ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.பி.இராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.முத்துக்குமார் மற்றும் மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் எம்.பி.வடிவேல் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
          முன்னதாக, தேசியக் கொடியை டி.ஆர்.ராசப்பன் மற்றும் சங்க கொடியை எஸ்.சண்முகசுந்தரமும் ஏற்றி வைத்தனர். மாவட்ட அமைப்பு செயலாளர் சம்பத் தலைமையில் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து மாநாட்டை துவக்கி வைத்தும், சுந்தரக்கண்ணன் என்பவரால் வடிவமைக்கப்பட்டிருந்த ஒப்பந்த ஊழியர்களுக்கான கோவை மாவட்ட இணையதளத்தை (http://tntcwucbt.blogspot.in/ http://tntcwu.blogspot.in/) தொடங்கிவைத்தும் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.முருகையா தொடக்க உரையாற்றினார்.
          இம்மாநாட்டை வாழ்த்தி மாநில பொருளாளர் கே.விஸ்வநாதன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.ஜே.ராஜாமணி, சுந்தரக்கண்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சி.ராஜேந்திரன், மாநில உதவித் தலைவர் வி.வெங்கட்ராமன், மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்ரமணியம், மாநில அமைப்பு செயலாளர் .முகமது ஜாபர் ஆகியோர் பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் யு.கே.சிவஞானம், சிபிஎம் தாலுகா செயலாளர் சி.பெருமாள், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
புதிய நிர்வாகிகள்
          இம்மாநாட்டில், தொலைத் தொடர்புத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக எம்.முத்துக்குமார், செயலாளராக டி.ரவிச்சந்திரன், பொருளாளராக கே.கருப்புசாமி மற்றும் 19 உறுப்பினர்களைக் கொண்ட புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாநாட்டில், 400க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Courtesy for source : http://tntcwu.blogspot.in/

கார்ட்டூன்

வறுமை கோடு
courtesy :  facebook.com/cartoonsbymanjul 

BSNL, Wishtel launch Triple Play tablet PC IRA

செய்தி படிக்க :-CLICK HERE

மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய மாநாடு

          மத்திய தொழிற்சங்கங்கள் தொடர்ந்து அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக போராடுகிறது. இந்திய நாட்டின் உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் தருவதற்கு உறுதியான கோரிக்கைகளை முன் வைத்து பொது துறையை பாதுகாக்க 12 கோடி தொழிலாளர்கள் கலந்து கொண்ட பிப்ரவரி 20 மற்றும் 21 இல் நடைபெற்ற 48 மணி நேரம் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது . இப்போது எதிர்கால நடவடிக்கை பற்றி முடிவு செய்ய, மத்திய தொழிற் சங்கங்களின் தேசிய மாநாடு புது தில்லியில் மாவ்லங்கர் ஹாலில் 06.08.2013 அன்று நடைபெற உள்ளது . நமது BSNLEU சங்கம் மாநாட்டில் பங்கேற்று அதன் முடிவுகளை முழுமையாக செயல்படுத்தும்.

கார்ட்டூன்

பொருளாதார மேதை
நன்றி : தினமணி

கார்ட்டூன்


5 ரூபாய் சாப்பாடு
நன்றி  : தினமணி


இரங்கல் செய்தி

          நமது சங்கத்தில் தொடக்க காலம் முதல் உறுப்பினராக இருந்த, நமது சங்கத்திற்கான தட்டிகளிலும், பதாகைகளிலும் (பேனர்) தன் கைவண்ணம் காட்டி மிளரச் செய்த, அருப்புக்கோட்டை டெலிகாம் மெக்கானிக் தோழர் முனியப்பன் இன்று (29/07/2013) காலை இயற்கை எய்தினார். அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

Sunday, July 28, 2013

வருமான வரி தாக்கல் செய்வதற்காக

அன்புத் தோழர்களுக்கு
என்ற செய்தியின் தொடர்ச்சியாக Efiling முறையில் வருமான வரி தாக்கல் செய்வதற்காக <இங்கே அழுத்தவும்> திறக்கக்கூடிய வலைத்தளத்தளத்தில் முதலில் உங்கள் விபரங்களைப் பதிவு செய்வதன் வழியாக உங்களுக்கான கணக்கு திறக்கப்படும்.
          அதன் தொடர்ச்சியாக நீங்கள் Efiling செய்து, உங்களுக்கான ITR-V ரசீதைப் பெற்று அதனை வருமானவரித்துறையின் பெங்களூர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

கார்ட்டூன்

நன்றி : மதி (அடடே) தினமணி

Saturday, July 27, 2013

5 ரூபாய்க்கு சாப்பாடு சாப்பிடலாம்னா... உணவு பாதுகாப்பு மசோதா எதுக்கு?

          மத்திய திட்டக் குழு கிராமப் புற, நகர்ப்புற ஏழைகளுக்கான வரையறையை முன்வைத்து புள்ளி விவரங்களை வெளியிட்டதுதான் போதும்.. எத்தனை களேபர சர்ச்சைகள் சர்ச்சைகள். கிராமங்களில் ஒரு நாளைக்கு ரூ.27.20க்கு மேலும், நகரங்களில் ரூ. 33.33க்கு மேலும் வருவாய் ஈட்டுவோர் ஏழைகள் அல்ல என்கிறது மத்திய திட்டக் குழு. இதை வைத்துதான் மாநிலங்களின் வறுமை நிலைமை பற்றி திட்டக்குழு அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையை முன்வைத்து ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் விவாதம் நடத்தி வருகின்றன. இதில் உச்சமாக மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா ரூ1க்கே வயிராற சாப்பிட முடியும் என்றார். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ரசூத்தோ ரூ.5க்கே முழுமையாக சாப்பிட முடியும் என்று கூறினார். பாலிவுட் நடிகர் ராஜ்பப்பரும் தமது பங்குக்கு ரூ. 12க்கே நன்றாக சாப்பிட முடியும் என்றார். இப்போது அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார்.
மேலும் செய்தி படிக்க : CLICK HERE

BSNL Offers FREE 3G Data Card on Purchase of Yearly 3G Data Plan

          பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இன்று அனைத்து வட்டாரங்கள் முழுவதும் அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச 3G டேட்டா கார்டு வழங்கும் ஒரு அற்புதமான திட்டத்தை  அறிவித்தது.
செய்தி படிக்க: CLICK HERE

ஊதிய தேக்கம்

          78.2 % IDA இணைப்பை அமல்படுத்துவதால் RM மற்றும்  Gr"D" கேடரில் ஊதிய தேக்கம் ஏற்படுவதை நமது பொது செயலர் தோழர் அபிமன்யுவும், தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தியும் 25-07-2013 மற்றும் 26-07-2013 அன்று பொது மேலாளர் R.K.கோயல் அவர்களை சந்தித்து பாதிக்கப்பட்டவர்களின்  பிரச்சனைகளை உதாரணத்துடன் விவாதித்து உள்ளனர். அடுத்த வாரம் இது விசயமாக மீண்டும் நிர்வாகத்தை நமது சங்கம் சந்திக்க உள்ளது.

Thursday, July 25, 2013

இது தான் வறுமை கோடாம்

          நாட்டில் வறுமை விகிதம் குறைந்துவிட்டதாக திட்டக்குழு சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. கிராமப்புறங்களில் 27 ரூபாய்க்கு அதிகம் செலவு செய்பவர்களும், நகர்ப்புறங்களில் 32 ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்பவர்களும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வரமாட்டார்கள் என்று திட்டக்குழு கூறியுள்ளது.திட்டக்குழு துணை தலைவருக்கு 32 ரூபாயை கொடுத்து டெல்லியில்  ஒரு நாள் செலவு செய்து பார்க்க சொன்னால் தெரியும்?கழுதையைக் குதிரை என்று அழைப்பதால் அது குதிரையாகிவிடாது. பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது. ஏழ்மையை ஒழிக்கத் தெரியவில்லை. ஏழைக்கான இலக்கணத்தை மாற்றி எழுத நினைக்கிறார்கள் மேதாவிகள்.வறுமைக் கோடென்ன கரும்பலகைச் சாக்பீஸ் கோடா, நினைத்தால் வரையவும், தேவைப்பட்டால் அழிக்கவும் செய்வதற்கு? புள்ளிவிவரங்கள் கிடக்கட்டும்.
நன்றி :- தினமணி 

Wednesday, July 24, 2013

தேசிய கவுன்சில்

தேசிய கவுன்சில் உறுப்பினர்களாக கீழ்கண்டோர் தேர்ந்து எடுக்கப் பட்டுள்ளனர்.  

தோழர் V.A.N.நம்பூதிரி, தலைவர்

தோழர் P.அபிமன்யு, பொது செயலர்

தோழர் அனிமேஷ் மித்ரா, துணை பொது செயலர்


தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி , உதவி பொது செயலர்

தோழர் C.K. குண்டனா, மாநில செயலர், கர்நாடகா

சமீபத்தில் வெளியான தனியார்களின் திருவிளையாடல்கள்

மாநிலச் சங்கத்தின் சுற்றரிக்கை எண் 71

டெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வு எழுதும் தோழர்கள் கவனத்திற்கு

          டெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வுக்கு ஆந்திரா மாநில தோழர்கள் ஒரு கையேடு வெளியிட்டு உள்ளனர்.கையேட்டின் விலை ரூபாய் 450/-. தொடர்புக்கு கீழ் கண்ட தோழர்களை அணுகவும் .
Fareed Ahamad, TTA Hyderabad: 9491304996
or
Kazi Irfan, JTO, BSNL : 9490751818.
(கையேடு  தேர்வுக்கான பாடதிட்டத்தை முழுமையாக உள்ளடக்கி உள்ளது.)

Tuesday, July 23, 2013

அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்துவது மக்கள் நலனுக்கு விரோதமானது : மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்

செய்தி படிக்க :-CLICK HERE

மாதா மாதம் சம்பளம் வாங்குறீங்களா... அப்படீன்னா கண்டிஷனா நீங்க ஐடி தாக்கல் செய்தாக வேண்டும்!

          மாதச் சம்பளதாரர்கள் அத்தனை பேரும் இனிமேல் தவறாமல் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுவரை வருடத்திற்கு ரூ. 5 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டுவோர் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ரூ. 5 லட்சம் அல்லது அதற்கு மேல் வருவாய் ஈட்டுவோர் மட்டுமே தற்போது வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர். இதை மாற்றி தற்போது மாதச் சம்பளம் வாங்கும் அத்தனை பேரும் இனிமேல் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

Monday, July 22, 2013

CMD உடன் சந்திப்பு

          நமது BSNL நிறுவனத்தில் உள்ள அனைத்து சங்கங்களின் மையக்குழு இன்று (22-07-2013) CMD அவர்களை சந்தித்து கீழ் கண்ட பிரச்சனைகளை விவாதித்து உள்ளது.

  • 1. டவர் பராமரிப்பு பகுதியில் டீசல் மற்றும் மின்சார பிரச்சனையால் அடிக்கடி பழுது ஏற்படுவதால் நமது சேவை கடுமையாக பாதிக்கப்படுகிறது.
  • 2. தேவையற்ற பொருட்களை ஏலம் விட தாமதம் செய்வதால் ஒவ்வொரு  மாவட்டத்திலும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
  • 3. காலியாக உள்ள நமது அலுவலகங்கள், குடியிருப்புகள்,பயிற்சி மையங்கள் ஆகியவற்றை வாடகை மற்றும் ஒத்தி அடிப்படையில் அரசாங்க நிறுவனங்களுக்கு விடுவது.
  • 4. டெலிகாம் தொழிற்சாலைகளை நவீனப்படுத்தி புதிய பொறியாளர்களை தேர்ந்து  எடுத்து புதிய கருவிகளை உற்பத்தி செய்யவேண்டும். 1000க்கும் மேற்பட்ட டவர்கள் உற்பத்தி செய்யப்பட்டு  தொழிற்சாலைகளில்  கையிருப்பாக இருக்கும் போது பல SSAக்களில் தனியாரிடம் இருந்து டவர்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • 5. மார்க்கெட்டிங் பகுதியில்  மேலும் கூடுதலாக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து வலிமைப்படுத்த வேண்டும்.
  • 6.போதுமான உபகரணங்களை (கேபிள், டெலிபோன் ) உடனடியாக வாங்க வேண்டும்.
  • 7. வொர்க் கமிட்டியை குறிப்பிட்ட தேதிகளில் நடத்தி அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகங்கள் எடுக்க வேண்டும். நமது CMD மேற்கூறிய பிரச்சனைகளை கவனிப்பதாக கூறியுள்ளார்.

கார்ட்டூன்

நன்றி : தினமணி

Saturday, July 20, 2013

கார்ட்டூன்

FDI 
                                                நன்றி :-ஹிந்து 

அன்னிய நேரடி முதலீட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து: கருணாநிதி

          அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று மத்திய அரசை, திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை படிக்க:-CLICK HERE

டெலிபோனில், ஒருவருக்கொருவர் பார்த்து பேசும் நவீன வசதி பி.எஸ்.என்.எல். விரைவில் அறிமுகம்

          டெலிபோனில், ஒருவருக்கொருவர் நேரில் பார்த்து பேசக்கூடிய, ‘‘வீடியோ காலிங்’’ என்ற புதிய சேவையை பி.எஸ்.என்.எல். சென்னை டெலிபோன் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
செய்தி படிக்க :-CLICK HERE

Friday, July 19, 2013

முதலீடல்ல, முதலுக்கே மோசம்!

தினமணி தலையங்கம் 
          இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பது உலகறிந்த ஒன்றாகிவிட்டது. "எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என்பதுதான் இந்திய அரசின் இன்றைய நிலை. பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள அரசு கண்டுபிடித்திருக்கும் ஒரே வழி அன்னிய முதலீட்டுக்குக் கதவைத் திறந்துவைப்பது என்பது. உடனடியாக பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்துக்கொள்ள அன்னிய முதலீட்டுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது என்பது வலியப்போய் பேராபத்தை விலைக்கு வாங்குவது என்பது தெரிந்தே பொருளாதார மேதைகள் என்று கருதப்படும் ஆட்சியாளர்கள் செயல்படுவதுதான் விசித்திரமாக இருக்கிறது.
          இந்திய பாதுகாப்பு மற்றும் அலுவலக ரகசியங்களுக்கு மிக இன்றியமையாத துறைகளான தொலைத்தொடர்பு, ராணுவத் தளவாட உற்பத்தி இரண்டிலுமே 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்திருக்கிறது. இனிமேல் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் இந்தியாவை உளவு பார்க்க அதிக சிரமம் கொள்ளத் தேவையில்லை. 100% அன்னிய நேரடி முதலீட்டைக் கொண்டு வந்து கொட்டப்போகும் நிறுவனங்களை அமெரிக்கா உரிமையுடன் கேட்டு, தகவல்களைப் பெற்றுக்கொள்ளும். 
          தொலைத்தொடர்புத் துறையில் இதுவரை 74% அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இனிமேல் 100% அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கதவுகளைத் திறந்திருக்கிறார்கள். அளவு உயர்த்தப்பட்ட போதிலும், 49%-க்கு அதிகமான முதலீடுகள் அனைத்தும் வழக்கம்போல, அன்னிய முதலீட்டு மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாகத்தான் வந்து சேரும் என்று சொல்கிறது அரசு. வரப்போவது இந்திய அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் வெளிநாட்டில் சேர்த்து வைத்திருக்கின்ற கருப்புப் பணமா அல்லது உண்மையாகவே முதலீடா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
          இதுவரை இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்த வோடபோன் போன்ற நிறுவனங்கள் இனி 100% முதலீட்டுடன் நேரடியாக களத்தில் இறங்கும். தற்போது இவர்களுடன் கூட்டுத்தொழில் செய்யும் இந்திய நிறுவனங்கள் தனித்து விடப்படும். அவர்களால் இந்த வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடவே முடியாது. நட்டத்தில் முடிந்து போவார்கள். ரிலையன்ஸ், டாடா போன்ற நிறுவனங்களாக இருந்தாலும் இதுதான் நிஜமாக இருக்கப் போகிறது.
          தனியார் நிறுவனங்களின் பிரச்னை ஒருபுறம் இருக்கட்டும். பிஎஸ்என்எல் போன்ற அரசு நிறுவனங்களின் கதி என்னவாக இருக்கும் என்பதுதான் நம்மை மேலும் திடுக்கிட வைக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை லாபம் காட்டிய பிஎஸ்என்எல் நிறுவனம், நட்டத்தை காட்டத் தொடங்கியிருப்பது குறித்து அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.  தணிக்கை நிறைவுபெறாத கணக்கின்படி பிஎஸ்என்எல் 2008-09-ஆம் ஆண்டில் ரூ. 525 கோடி லாபம் காட்டியது. ஆனால் 2009-10 முதல் 2012-13 நிதியாண்டு வரையிலும் முறையே ரூ.1,823 கோடி, ரூ.6,384 கோடி, ரூ.8,851 கோடி, ரூ.8,198 கோடி நட்டம் காட்டப்படுகிறது.
          தொலைத்தொடர்புத் துறையில் தற்போது இந்திய நிறுவனங்களுடன் கூட்டுத்தொழிலில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் லாபம் ஈட்டுகின்றன. மேலும் லாபம் ஈட்டவும் அரசு கதவுகளைத் திறக்கிறது. ஆனால் இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனம் மட்டும் நட்டத்தில் இயங்குகிறதே அதற்கு என்ன காரணம்? உண்மையாகவே நட்டமா அல்லது மிக மோசமாக நட்டத்தில் ஈடுபடுவதால் இந்த நிறுவனத்தை தனியாருக்கு மொத்தமாகத் தாரை வார்த்துவிடலாம் என்பதுதான் இன்றைய ஆட்சியாளர்களின் திட்டமா? ஏலம் கேட்கும் சக்தி வாய்ந்த பன்னாட்டு நிறுவனத்துக்கு - மொத்தமாக விற்றுவிடத்தான் திட்டமா?
          ஒரு வளரும் நாடு, வெளிநாடுகளுடன் கூட்டுத்தொழில் செய்யும் உள்நாட்டு நிறுவன முதலீட்டு அளவை உயர்த்துவதுதான் சரியாக இருக்குமே தவிர, வெளிநாட்டு முதலீட்டை உயர்த்தி, முழுமையாக களம் இறங்க அனுமதித்துவிட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் போட்டிபோட முடியாத நிலையை ஏற்படுத்துவது உள்நோக்கத்துடன் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவி செய்வதாகத் தோன்றுகிறது. 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் இந்தியாவுக்கு ரூ.10,000 கோடி வந்து சேரும் என்பது மத்திய அரசின் விளக்கம். அதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என்பதுதான் அரசின் உண்மையான நோக்கம்.
          ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியைப் பொருத்தவரை அன்னிய நேரடி முதலீடு 26%க்குக் குறைவாக இருக்கும்வரை "அன்னிய முதலீடு மேம்பாட்டுக் கழக'த்தின் மூலமாகத்தான் இந்தியாவுக்கு வந்து சேரும். அதற்கும் கூடுதலாக அன்னிய நேரடி முதலீடு இருக்குமெனில், நாட்டின் பாதுகாப்பு கருதி, மத்திய அமைச்சரவை நேரடியாக முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளவாட உற்பத்தியில் 100% முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் இந்தியாவுக்குப் புதிய முதலீடுகள், புதிய போர்த் தொழில்நுட்பக் கருவிகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
          இதனால் வெளிநாடுகளுடன் ஆயுத பேரம் செய்ய வேண்டிய தேவை இருக்காது என்பதும் அவர்களது விளக்கம். வெளிநாட்டிலிருந்து ஆயுதங்களை வாங்குவதற்குப் பதிலாக வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவிலேயே ஆயுதங்களைத் தயாரிக்கச் சொல்லி ராணுவத்திற்கு அந்த ஆயுதங்களை வாங்கிக் கொள்வது என்பது அரசின் நோக்கம். இதைவிட ஜப்பான் செய்திருப்பதைப்போல இந்தியாவின் பாதுகாப்பை அமெரிக்காவுக்கோ அல்லது வேறு ஏதாவது வல்லரசுக்கோ கொடுத்துவிடலாமே என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக இந்தியாவை இன்னும் விலைபேசவில்லையே என்கிற அளவில் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்!                                                                                                                                           
நன்றி :-தினமணி

Thursday, July 18, 2013

இரங்கல்


          எம்.ஜி.ஆர்., காலம் முதல் இன்றைய இளம் நடிகர் வரை பல ஆயிரம் பாடல்களை எழுதிக்குவித்த பிரபல கவிஞர் வாலி இன்று காலமானார். இவருக்கு வயது 82. வாழ்த்துப்பா பாடுவதில் மிகவும் நுண்ணிய வார்த்தைகளை பிரயோகிப்பது இவருக்கு கை வந்த கலை. தமிழக அரசின் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். நேரத்திற்கு ஏற்றால் போல் நினைத்த உடன் கவிதைகளை கொட்டி போடும் திறம் படைத்தவர் வாலி. தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் வாலிபன். பக்தி இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன். பாட்டெழுத வந்துவிட்டால் மாயக்கண்ணன்
          திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்கு வந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார் – பொன்னம்மாளின் மகன் வாலி. படித்தது எஸ்.எஸ்.எல்.சி. பிறகு, சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு. வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளை. பட்டாக இருந்தால் சந்தன நிறம். இவை தவிர வேறு விருப்பம் இல்லை. ஒரு நல்ல கவிஞனை    இழந்தது தமிழகம்.

அஞ்சலி


          சுதந்திர போராட்ட வீரரும் , பாராளுமன்ற உறுப்பினரும்  மற்றும் சிபிஐ(எம்) கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் சமர்முகர்ஜி, இன்று கொல்கத்தாவில்  காலமானார். அவருக்கு வயது 101. சமர்முகர்ஜி நீண்ட காலம்  சிஐடியு சங்கத்தின்  பொது செயலாளர் ஆக  பணியாற்றினார். அவருடைய மரணம்  இந்திய தொழிலாள வர்க்க இயக்கத் திற்கு  மதிப்பிட முடியாத இழப்பாகும். BSNLEU சங்கம் அன்னார்க்கு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி  செலுத்துகிறது.

ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம்

          நமது கொல்கத்தா  மத்திய செயற்குழு முடிவின் படி தேங்கி கிடக்கும் பிரச்சனைகள் மீது  தீர்விற்காக 19-07-2013 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற அறைகூவல்  விடப்பட்டு இருந்தது. 17-07-2013 அன்று நடைபெற்ற UNITED FORUM கூட்டத்தில் 30-07-13 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
          கிளை செயலர்கள் அனைவரும் 19-07-13 ஆம் தேதிக்கு பதிலாக 30-07-13 அன்று ஆர்பாட்டத்தை சிறப்பாக நடத்த மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது.

Wednesday, July 17, 2013

கார்ட்டூன்

எங்கே ஏழை 

ஏன் இந்த நிலைமை

சிந்தனை செய்ய வேண்டிய விஷயம்
          தொலை தொடர்பு நிறுவனங்கள் ஜூன் மாதத்தில் 3.57 மில்லியன் சந்தாதாரார்களை GSM தொழில் நுட்பத்தில் கொடுத்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக நமது BSNL நிறுவனம் ஒரு இணைப்பைக்கூட கொடுக்கவில்லையாம்.  ஆனால் இதே நேரத்தில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 1.26 மில்லியன் இணைப்புகளை கொடுத்துள்ளது.
செய்தி படிக்க :CLICK HERE

ஆர்ப்பாட்டம்

          இன்று நடைபெற்ற FORUM கூட்டத்தில் தொலை தொடர்பில் 100% அந்நிய நேரடி முதலீடு  செய்வதற்கு அனுமதி அளித்து மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை கண்டித்து 25-07-2013 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விட்டுள்ளது.

BSNL/MTNL மறு சீரமைப்பு

          BSNL/MTNL மறு சீரமைப்பு (சீரழிப்பு) பற்றி விவாதிக்க மந்திரிகள் குழு கூட்டம் வரும் 30-07-2013 அன்று நடைபெற உள்ளது.
செய்தி படிக்க :-CLICK HERE

Tuesday, July 16, 2013

GPF நிதி ஒதுக்கீடு

          BSNL தலைமையகம் இதுவரை GPFக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. தலைமையகத்தில் நிதியே இல்லையாம். GM (BFCI) இடம் நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள் இன்று  தொடர்பு கொண்டபோது  இன்னும் 2 அல்லது 3 நாட்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும் என அவர் கூறி உள்ளார்.

கருத்தரங்கம் மற்றும் தோழர் M .பெருமாள்சாமி அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா

          ‘வேலைக் கலாச்சார மேம்பாடு’ கருத்தரங்கம் மற்றும் தோழர் M.பெருமாள்சாமி அவர்களின் பணி ஓய்வு  பாராட்டு விழா 16-07-2013 அன்று VVS கல்யாண மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. தோழர் R.ரசூல், மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார். கருத்தரங்கை தோழர் C.வெங்கடேஷ்  அவர்கள் துவக்கி வைத்து பேசினார். நமது தமிழ் மாநில செயலர் S.செல்லப்பா அவரைத் தொடர்ந்து பேசினார். முத்தாய்ப்பாக  விருதுநகர் BSNL பொது மேலாளர் உயர்திரு B.V.பாலசுப்ரமணியா, ITS அவர்கள் பேசினார். தான் அறிந்த வரையில் விருதுநகர் மாவட்டத்தில் பணிக் கலாச்சாரம் சிறப்பாக இருப்பதாகவும், அதனை மேலும் செலுமைப்படுத்த நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
          தோழர் M.பெருமாள்சாமி அவர்களின் பணி ஓய்வை பாராட்டி நமது பொது செயலர் P.அபிமன்யு, மாநில செயலர் தோழர் S.செல்லப்பா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொது செயலர் தோழர் சாமுவேல் ராஜ், தோழர் தேனி வசந்தன், நாகர்கோயில் மாவட்ட செயலர் தோழர் ஜார்ஜ், மதுரை மாவட்ட செயலர் தோழர் சூரியன், AIBSNLEA வைச் சேர்ந்த திரு. T. ராதாகிருஷ்ணன், V.K.பரமசிவம், SNEA மாவட்ட செயலர் திரு. G.செல்வராஜ், ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர்  தோழர் R.முனியசாமி, ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான தோழர் மோகன்தாஸ், ஓய்வு  ஊதியர் சங்க செயலர் M.அய்யாசாமி, தோழர் முருகேசன், மாநில உதவி செயலர் தோழர் C .பழனிசாமி, LIC செயலர் தோழர் மகாலிங்கம், தமிழ் நாடு அரசு ஓய்வு  ஊதியர் சங்க செயலர் தோழர் முருகேசன், NFTE மாவட்ட செயலர் தோழர் சக்கணன், இந்திய தொழிற்சங்க மையத்தின் தோழியர் .மஹாலட்சுமி மற்றும் பெரும் திரளான முற்போக்கு தோழர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர்.
புகைப்படத் தொகுப்பிற்கு <இங்கே அழுத்தவும்>

தொழிற்சங்க பயிற்சி வகுப்பு

          நமது தமிழ் மாநில சங்கம் சார்பாக விருதுநகரில் இன்று (16.07.2013) ஆறு தென் மாவட்டங்களின் கிளைச்செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க முன்னணி தோழர்களுக்கு தொழிற்சங்க பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. மதுரை, காரைக்குடி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் விருதுநகர் உட்பட ஆறு தென் மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் வகுப்பில் கலந்து கொண்டனர். தோழர் K.மாரிமுத்து, மாநிலத்தலைவர் வகுப்பிற்கு தலைமை வகித்தார்.தோழர் S.ரவீந்திரன் விருதுநகர் மாவட்ட செயலாளர் அனைவரையும் வரவேற்றார்.

          தோழர் S.செல்லப்பா, மாநில  செயலாளர், சுருக்கமாக வகுப்பின் நோக்கம் குறித்து உரையாற்றித் தொடங்கி வைத்தார். தோழர் P.அபிமன்யு, பொது செயலாளர் பேசுகையில் விகிதாசார அடிபடையில் அங்கீகாரம் என்பதில் நமது சங்க அங்கீகாரம் என்றும் உத்திரவாதப்படுத்தப்பட்டு உள்ளதை சுட்டிக் காட்டினார். 7 ஆவது சரிபார்ப்பு தேர்தலில் மீண்டும் நமது சங்கமே முதன்மை சங்கமாக வெற்றி பெரும் என அறுதியிட்டு கூறினார். கொல்கத்தா மத்திய செயற்குழு கூட்டத்தின் முடிவுகள் பற்றியும் விரிவாக கூறினார். அதே நேரம் நமது நிறுவனத்தை லாபகரமாக மீட்சி செய்ய வேண்டிய அவசியம் பற்றியும், பணி கலாச்சாரம் மேம்பட வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டி காட்டினார்.

          78.2% IDA இணைப்பில் நமது சங்கத்தின் பங்களிப்பு  தான் பிரதானமானது  என்பதையும் அவர் சூளுரைத்தார்.வர இருக்கின்ற போராட்டங்களை விளக்கி மாநில, மாவட்ட  செயற்குழுக்களை  கூட்டி ஊழியர்களிடம்  போராட்ட உணர்வை வளர்க்க அனைவரும் முயற்சி எடுக்க பொது செயலர் வலியுறுத்தினார்.
மத்திய சங்கத்தின் புகைப்படங்கள்CLICK HERE
மேலும் புகைப்படங்கள் : CLICK HERE

Monday, July 15, 2013

பெட்ரோல் விலை போகும் போக்கில்

லேட்டஸ்ட் மாடல் கார் 
   
                                                                                                     நன்றி :-F u n 2V id eo .COM 

Saturday, July 13, 2013

அருப்புக்கோட்டை கிளை மாநாடு















































          அருப்புக்கோட்டை கிளை மாநாடு  13-07-2013 அன்று அருப்புக்கோட்டை தொலைபேசி நிலைய வளாகத்தில் தோழர் U.B.உதயகுமார் கிளை தலைவர் தலைமையில் சீரும் சிறப்புமாய் நடைபெற்றது. தோழர் R.ஜெயக்குமார், கிளை செயலர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.  தோழர் அஸ்ரப்தீன் அவர்கள் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்க உரை ஆற்றினார். நமது மாவட்டத்தில் 5 சங்கங்கள் கூட்டணி அமைத்து நமது சங்கத்தை தோற்கடிக்க முயன்றதை முறியடித்து 3 முறையாக நமது மாவட்டத்தில் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்ததை மாவட்ட செயலர் சுட்டி காட்டினார்.மேலும் பணி   கலாச்சாரம் மாற வேண்டும் எனவும், போராட்ட குணத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.
          நமது சங்கத்தில் புதிதாக தன்னை முழுமனதுடன் இணைத்துக் கொண்ட கல்லூரணி TM தோழர் கணேசன் அவர்களை மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன் கௌரவித்தார்.
          சிறப்புரையாக  பேசிய மாநில அமைப்பு செயலர் தோழர் ஜெயமுருகன் தன்னுடைய உரையில் 78.2 IDA இணைப்பு வெற்றியில் BSNLEU  சங்கத்தின் மகத்தான பங்களிப்பை கோடிட்டு வரஇருக்கின்ற போராட்ட திட்டங்களை விரிவாக விளக்கினார். BSNLEU  சங்கம் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றது சாதாரண  விஷயம் கிடையாது. எந்த அரங்கிலும் எந்த தொழிற்சங்கமும் அடையாத கின்னஸ் சாதனை நமது வெற்றி என்று அவர் கூறினார். மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி பேசுகையில் நமது மாவட்டத்தில் நம்சங்கம் இல்லாமல் எந்த ஒரு நடவடிக்கையும் யாராலும் எடுக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டினார். தோழர் A.கண்ணன்தோழர் C.சந்திரசேகரன் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் மாவட்ட செயலர் தோழர் முனியசாமி ஆகியோரும் மகாநாட்டில் உரையாற்றினர். தோழர்கள் U.B.உதயகுமார்R.ஜெயக்குமார்  மற்றும் A.சோலை ஆகியோர் முறையே தலைவர் செயலர் மற்றும் பொருளராக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...