Showing posts with label பணி ஓய்வு. Show all posts
Showing posts with label பணி ஓய்வு. Show all posts

Saturday, January 31, 2015

பணி ஓய்வு

       விருதுநகர் GM அலுவலகத்தில் பணி புரிந்த தோழர் S நாராயணன் , SSS அவர்கள் இன்று பணி ஓய்வு பெற்றார் .அந்தமான் தீவுகளில் தன் பணியை துவக்கிய தோழர் நாராயணன் ,காரைக்குடியில் பணியை தொடர்ந்து விருதுநகரில் பணி நிறைவு செய்தார் .ஜனவரி மாதம்  பணி நிறைவு உள்ள சூழலில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர் நாராயணன் நமது அனைத்து இயக்கங்களிலும் கலந்து கொண்டவர் . பணி நிறைவை ஒட்டி அவர் மாநில சங்கத்திற்கு ரூபாய் 1000/ மாவட்ட சங்கத்திற்கு ரூபாய் 2000/-மற்றும் கிளை  சங்கத்திற்கு ரூபாய் 2000 என ஆக மொத்தம் ரூபாய் 5000/- நன்கொடையாக வழங்கியுள்ளார் .அவரது பணி ஓய்வு காலம் சிறக்க மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது .

Thursday, January 29, 2015

பணி ஓய்வு

சாத்தூரில் பணிபுரியும் மூத்த தோழர் A .ராஜேந்திரன் , SSS அவர்கள் வரும் 31-01-2015 அன்று பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு   BSNLEU மாவட்டசங்கத்தால் 28-01-2015 அன்று சாத்தூரில் கௌரவிக்கப்பட்டார் .தோழர் ராஜேந்திரன் விருதுநகர் மாவட்டத்தில் கே ஜி போஸ் அணியை கட்டுவதில் ஒரு பெரிய பங்கு வகித்தவர் .மாவட்ட சங்க நிர்வாகியாக கிளை சங்க பொறுப்பாளராக பணி செய்த தோழர் ராஜேந்திரன் அவர்கள் பணி ஓய்வு காலம் சிறக்க BSNLEU மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது .  

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...