Thursday, June 29, 2017
பாரபட்சமான SDE (பிளானிங்) மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாவட்ட நிர்வாகமே !
பாரபட்சமான SDE (பிளானிங்) மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இலாகா குடியிருப்புகளில் ஒரு ஊழியர் குடி வந்து அந்த மாத முடிவில் தான் அவரது சம்பளத்தில் லைசென்ஸ் fee பிடிக்கப்படும் .
தற்போது நமது மாவட்டத்தில் புதிய JE க்கள் வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர் .புதிய சூழலில் அவர்களுக்கு வீடு கிடைக்காத சூழ்நிலையை மாவட்ட பொது மேலாளரிடம் சுட்டி காண்பித்து அவர்கள் அனுமதியுடன் இலாகா குடியிருப்பு ஒதுக்கப்பட்டது . GM அனுமதி கொடுத்தபின்பும் கொடுப்பதற்கு இவர்களுக்கு மனம் வரவில்லை .மனிதாபிமானமற்ற இவர்களின் போக்கை மீண்டும் மீண்டும் நிர்வாகத்திடம் சுட்டி காண்பித்து அனுமதி பெற்றோம் .உதவி தொகை வந்த பின்பு கட்ட வேண்டிய சூழலில் அவர்கள் இருந்த போது அவர்களை குடியிருப்பை விட்டு காலி பண்ண சொல்லி தினம் தினம் நிர்பந்தம் செய்த அற்பத்தனத்தை என்ன வென்பது ? 3 வது மாடியில் யார் SDE என்றே தெரியவில்லை இவர்களின் பாரபட்ச போக்கின் சில உதாரணங்கள் .
நமது குடியிருப்புகளில் குடியிருக்கும் வேறு இலாகாவில் பணி புரியும் சிலர் 6 மாதங்களாக வாடகை கட்ட வில்லை .
சென்ற ஆண்டு ஒரு நபர் ஏப்ரல் 2016 இல் 19,000 ரூபாய்க்கும் மேல் கட்ட வேண்டிய தொகையை 5 மாதங்கள் கழித்து அ க்டோபரில் கட்டிய போது வாய் மூடி மௌனம் சாதித்தது ஏன். உங்கள் பழைய தொழிற்சங்க விசுவாசம் தானே !
ஆள் பார்த்து , சங்கம் பார்த்து விதிகளை அமல்படுத்தும் SDE ( பிளானிங் ) மீது மாவட்ட நிர்வாகமே உரிய நடவடிக்கை எடு
Sunday, June 25, 2017
வாழ்த்துக்கள்
அனைவருக்கும் BSNLEU ,TNTCWU விருதுநகர் மாவட்ட சங்கத்தின் புனித ரமலான் நல் வாழ்த்துக்கள்
எழுச்சியுடன் நடைபெற்ற விரிவடைந்த செயற்குழு மற்றும் சேவை கருத்தரங்கம் ,நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் தோழர் ராஜமாணிக்கம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா
ஜூன் 24 அன்று சிவகாசியில் விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் சேவை கருத்தரங்கம் ,நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் தோழர் ராஜமாணிக்கம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா மிகுந்த எழுச்சியுடன் ,உற்சாகத்தோடு நடைபெற்றது .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி தலைமை வகித்தார் .தேசிய கொடியை தோழர் K .தர்மராஜ் ஏற்றி வைக்க ,நமது சங்க கொடியை தோழர் N .ராஜமாணிக்கம் அதிர் வேட்டுக்கள் வெடிக்க , கோஷங்கள் முழங்க ஏற்றி வைத்தார் .தோழர் சமுத்திரக்கனி தலைமையுரை நிகழ்த்த ,இரண்டு கிளைகளின் செயலர்கள் கருப்பசாமி மற்றும் முத்துசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர் .முறையாக மாவட்ட செயற்குழுவை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடங்கிவைத்து உரை நிகழ்த்தினார் .அதன் பின் நமது மாநில செயலர் தோழர் A பாபு ராதாகிருஷ்ணன் சிறப்புரை நிகழ்த்தினார் .ஊதிய மாற்றத்திற்கான வர இருக்கின்ற போராட்டங்கள் ,பொது துறைகளை அழிக்க நினைக்கும் மத்திய அரசின் கொள்கைகள் , மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி விரிவாக நமது மாநில செயலர் பேசினார் .நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கை மதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் N. நன்மாறன் துவக்கி வைத்து தனக்கே உரிய நகைச்சுவையுடன் சோவியத் புரட்சியின் தாக்கத்தை எளிமையுடன்விளக்கினார் .அதன் பின் நடைபெற்ற சேவை கருத்தரங்கத்தை அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் மதி கண்ணன் துவக்கி வைக்க ,னது மாவட்ட துணை பொது மேலாளர் திரு S.ராதாகிருஷ்ணன் கருத்துரை வழங்கினார் .SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார், ஓய்வூதியர் சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி மற்றும் பெருமாள்சாமி , கோட்ட பொறியாளர் திருமதி தமிழ் செல்வி BSNLEU திருநெல்வேலி மாவட்ட செயலர் தோழர் மரிய சூசை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் அதன் பின் நடைபெற்ற தோழர் ராஜமாணிக்கம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில் ,நமது மாநில செயலர் பாபு ராதாகிருஷ்ணன் ,மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி , புதிய மாவட்ட தலைவர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ஆகியோர் தோழரை பாராட்டி கவுரவித்தனர் .தோழர் தர்மராஜ் அவர்களும் அக் கூட்டத்தில் பாராட்டு பெற்றார் .தோழர் இன்பராஜ் நந்தி நவில செயற்குழு இனிதே முடிவு பெற்றது .
விரிவடைந்த மாவட்ட செயற்குழு முடிவுகள்
1.விருதுநகர் BSNLEU மாவட்ட சங்க புதிய தலைவராக தோழர் R .ஜெயக்குமார் ,JE அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்
2.விருதுநகர் GM அலுவலக தோழர் A ,மாரியப்பா மாவட்ட உதவி பொருளாளர்க தேர்ந்து எடுக்கப்பட்டார் .
3.சிவகாசி தோழர் M .முத்துசாமி அவர்கள் மாவட்ட உதவி செயலராக தேர்ந்து எடுக்கப்பட்டார் .
4. சிவகாசி SDOP மற்றும் OCB கிளைகள் இணைக்கப்பட்டு ஒரே கிளையாக புனரமைக்கப்பட்டது .
அதன் நிர்வாகிகளாக தோழர்கள் ராஜய்யா ,கருப்பசாமி மற்றும் இன்பராஜ் முறையே தலைவர் ,செயலர் ,பொருளாளர்க தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர் .
மனித நேயத்தை தொடரும் விருதுநகர் மாவட்ட சங்கங்கள்
சிவகாசியில் பணி புரிந்த தோழர் அசோக் குமார் கடந்த மார்ச் மாதம் ஒரு விபத்தில் காலமானார் .அன்னார் குடுமபத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற முடிவை விருதுநகர் மாவட்ட BSNLEU மற்றும் TNTCWU சங்கங்கள் எடுத்தன .அந்த அடிப்படையில் 24/06/2017 அன்று நடைபெற்ற விரிவடைந்த மாவட்ட செயற்குழுவில் அத் தோழரின் குடும்பத்தார்க்கு குடும்ப நிவாரண நிதியாக 1,15,000/- ரூபாயை நமது தமிழ் மாநில செயலர் தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன் வழங்கினார் .நிதி வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் ,தோழமைகளுக்கு விருதுநகரின் இரண்டு மாவட்ட சங்கங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறது .
Friday, June 23, 2017
Wednesday, June 21, 2017
ஊதிய மாற்றம் எங்கள் உரிமை------------தர்ணா போராட்டம்
ஊதிய மாற்றம் எங்கள் உரிமை என முழக்கமிட்டு விருதுநகர் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் எழுச்சிகரமாக நடைபெற்றது .SNEA மாவட்ட செயலர் திரு S .செந்தில்குமார் தலைமையில் தொடங்கிய தர்ணா போராட்டத்தை BSNLEU மாவட்ட செயலர் தோழர் S .ரவீந்திரன் முறையாக தொடக்கி வைத்தார் .கோரிக்கைகளை விளக்கி .SNEA சங்க மாநில சங்க நிர்வாகி திரு கோவிந்தராஜன் , AIGETOA மாநில சங்க நிர்வாகி திரு விக்டர் சாம்சன் ,BSNLEU மாநில சங்க நிர்வாகி தோழர் A.சமுத்திரக்கனி , SNEA சங்க மாவட்ட பொருளாளர் செல்வராஜ் , சிவகாசி கிளை செயலர் தோழர் M .சுப்ரமணியன் மற்றும் தோழர் கேசவன் ,தோழர் தங்கவேலு ,BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் ஜெயக்குமார் ,மற்றும் தோழர் அஷ்ரப் தீன் ,கிளை செயலர்கள் தோழர் .கண்ணன் ,முத்துசாமி ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர்கள் சிவஞானம் ,பெருமாள்சாமி ,அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .எழுச்சி மிகு கோஷங்களை GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் எழுப்ப உற்சாகத்துடன் முடிவடைந்த தர்ணா போராட்டத்தை BSNLEU மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூறி நிறைவு செய்தார் .மாவட்டம் முழுவதும் 130 க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...