Thursday, June 29, 2017

பாரபட்சமான SDE (பிளானிங்) மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாவட்ட நிர்வாகமே !
பாரபட்சமான SDE (பிளானிங்) மீது உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் 
இலாகா குடியிருப்புகளில் ஒரு ஊழியர் குடி வந்து அந்த மாத முடிவில் தான் அவரது  சம்பளத்தில் லைசென்ஸ் fee பிடிக்கப்படும் .
தற்போது நமது  மாவட்டத்தில் புதிய JE க்கள் வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர் .புதிய சூழலில் அவர்களுக்கு வீடு கிடைக்காத சூழ்நிலையை மாவட்ட பொது மேலாளரிடம் சுட்டி காண்பித்து அவர்கள் அனுமதியுடன் இலாகா குடியிருப்பு ஒதுக்கப்பட்டது . GM அனுமதி கொடுத்தபின்பும் கொடுப்பதற்கு இவர்களுக்கு மனம் வரவில்லை .மனிதாபிமானமற்ற இவர்களின் போக்கை மீண்டும் மீண்டும் நிர்வாகத்திடம் சுட்டி காண்பித்து அனுமதி பெற்றோம் .உதவி தொகை வந்த பின்பு கட்ட வேண்டிய சூழலில் அவர்கள் இருந்த போது  அவர்களை குடியிருப்பை விட்டு காலி பண்ண சொல்லி தினம் தினம் நிர்பந்தம் செய்த அற்பத்தனத்தை என்ன வென்பது ? 3 வது மாடியில் யார் SDE என்றே தெரியவில்லை இவர்களின்  பாரபட்ச  போக்கின் சில உதாரணங்கள் .
நமது குடியிருப்புகளில் குடியிருக்கும் வேறு இலாகாவில் பணி புரியும் சிலர் 6 மாதங்களாக  வாடகை கட்ட வில்லை .
சென்ற ஆண்டு ஒரு நபர் ஏப்ரல் 2016 இல் 19,000 ரூபாய்க்கும் மேல் கட்ட வேண்டிய தொகையை 5 மாதங்கள் கழித்து அ க்டோபரில் கட்டிய போது வாய் மூடி மௌனம் சாதித்தது ஏன். உங்கள் பழைய தொழிற்சங்க விசுவாசம் தானே ! 
ஆள் பார்த்து , சங்கம் பார்த்து விதிகளை அமல்படுத்தும் SDE ( பிளானிங் ) மீது மாவட்ட நிர்வாகமே உரிய நடவடிக்கை எடு 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...