புதிய நியமனம் பெறும் Assistant Telecom Technician கௌரவிப்பு
Wednesday, May 31, 2017
புதிய நியமனம் பெற்ற JE களுடன்
30/05/2017 அன்று புதிய நியமனம் பெற்ற JE களுடன் மாவட்ட சங்கம் சந்திப்பு மற்றும் அவர்களுக்கு கௌரவிப்பு
பிரமாண்டமாக நடைபெற்ற GM அலுவலக மற்றும் விருதுநகர் அவுட்டோர் கிளைகளின் இணைந்த 14 வது கூட்டு மாநாடு
30/05/2017 அன்று GM அலுவலக கிளை மற்றும் விருதுநகர் அவுட்டோர் கிளைகளின் இணைந்த 14 வது கூட்டு மாநாடு மற்றும் நமது மூத்த தோழர் G.சந்திரசேகரன் மற்றும் தோழியர் மங்கையற்கரசி அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா மிக பிரமாண்டமாக ஒரு மாவட்ட மாநாடு போல் நடைபெற்றது ..விருதுநகர் அவுட்டோர் கிளையின் தலைவர் தோழர் சிங்காரவேலு தலைமை வகித்தார் .அதிர் வேட்டுக்கள் வெடிக்க நமது சங்க கொடியை தோழர் சந்திரசேகரன் ஏற்றிவைத்தார் .கிளை பொருளாளர் தோழர் மாரியப்பா அஞ்சலி தீர்மானம் வாசிக்க அனைவரும் ஒரு நிமிடம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.அதன் பின் முறையாக மாவட்ட செயலர் கிளை மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றினார் .அவர் தம் உரையில் மத்திய அரசு ஒட்டு மொத்தமாக பொது துறைகளை .அழிக்கும் முயற்சியை உதாரணங்களுடன் விளக்கினார் .அதே நேரம் ஊதிய மாற்றத்திற்கான போராட்டத்தை இணைந்து நடத்த வேண்டிய கட்டாயத்தையும் கூறினார் .பணி ஓய்வு பெரும் தோழர்கள் சந்திரசேகரன் மற்றும் மங்கயற்கரசி அவர்கள் நமது சங்கத்தின் மீது கொண்ட அபிமானத்தையும் ,நடந்த போராட்டங்கள் அனைத்திலும் அவர்கள் முத்திரை பதித்த நிலையையும் ,,குப்தா அணியினரின் கொடுமையான தாக்குதல்களை எதிர்த்து கேஜி போஸ் அணியின் ஒரு வித்தாக இருந்த சந்திரசேகரின் தொழிற் சங்க செயல்பாடுகளை மாவட்ட செயலர் நினைவு கூர்ந்தார் .அதே போல் தோழியர் மங்கயற்கரசி அவர்கள் மாவட்ட சங்கத்திற்கு அனைத்து வகையிலும் உதவிகரமாக இருந்ததை சுட்டி காட்டினார் .சிறப்புரையாக தோழர் முருகையா ,தமிழ் மாநில உதவி செயலர் நமது சங்கம் கடந்து வந்த பாதைகளையும் ,ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் நீதிமன்றம் மூலமாக நமது மாவட்டத்தில் பணி நியமனம் 3 பேருக்கு பெற்று தருவதற்கு செய்த முயற்சிகளை கூறினார் .அதன் பின் சிறப்புரையாக அனைத்திந்திய உதவி செயலர் ,CCWF தோழர் C.பழனிச்சாமி பேசுகையில் புதிய ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கு பெற்று தந்தது ,பணியின் அடிப்படையில் ஊதியம் பெறுவதற்கான நமது முயற்சி ,.ஊதிய மாற்றத்திற்கான போராட்டம் ஆகியவற்றை விரிவாக பேசினார் .நமது மாவட்ட தலைவரும் ,மாநில அமைப்பு செயலருமான தோழர் சமுத்திரக்கனி இன்று மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை கூறி வாழ்த்துரை நிகழ்த்தினார் .பணி ஓய்வு பெரும் தோழர்களை வாழ்த்தி தோழர்கள் ஜெயக்குமார் ,AIBDPA மாநில பொறுப்பாளர் தோழர் பெருமாள்சாமி ,ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ,அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ஆகியோர் பேசினர் .இறுதியாக பணி ஓய்வு பெரும் தோழர்கள் ஏற்புரை நிகழ்த்தினர் .GM அலுவலக கிளை புதிய தலைவர் ,செயலர் ,பொருளர் ஆக தோழியர் தனலட்சுமி ,தோழர் இளமாறன் ,தோழர் மாரியப்பா ஆகியோர் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர் . விருதுநகர் அவுட்டோர் கிளை புதிய தலைவர் ,செயலர் ,பொருளர் ஆக தோழர்கள் சிங்காரவேலு ,தோழர் மாரிமுத்து ,தோழர் லட்சுமணன் ஆகியோர் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர் தோழர் லட்சுமணன் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது .
Monday, May 29, 2017
14 வது GM அலுவலக கிளை மற்றும் விருதுநகர் அவுட்டோர் கிளைகளின் இணைந்த மாநாடு
14 வது GM அலுவலக கிளை மற்றும் விருதுநகர் அவுட்டோர் கிளைகளின் இணைந்த மாநாடு மற்றும் தோழர் சந்திரசேகரன் மற்றும் தோழியர் மங்கையற்கரசி அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா
Monday, May 22, 2017
8 வது மாநில மாநாடு -----ஈரோடு
பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் 8 வது தமிழ் மாநில மாநாடு ஈரோடு நகரில் தோழர் பெத்தல்ராஜ் நினைவரங்கில் மே 19,20 தேதிகளில் எழுச்சியுடன் நடைபெற்றது .மாநாட்டின் துவக்க .நிகழ்ச்சியாக தேசிய கொடியை மாநில துணை தலைவர் தோழர் சாமிகுருநாதன் ஏற்றி வைத்தார் .சங்கத்தின் கொடியை மாநில .தலைவர் தோழர் வெங்கடராமன் ஏற்றி வைத்தார் .மாநில தலைவர் தோழர் செல்லப்பா தலைமை வகித்தார் .துணை தலைவர் தோழர் ஜான் போர்ஜியோ அஞ்சலி உரையாற்றினார் .வரவேற்பு குழு நிர்வாகிகள் திரு செந்தில்வேல் மற்றும் தோழர் பரமேஸ்வரன் வரவேற்பு உரை நிகழ்த்தினர் துவக்க உரையாற்றிய பொது செயலர் தோழர் அபிமன்யு , 100% தனியார் மயமாக்கப்படாமல் இருப்பதற்கு பி எஸ் என் எல் ஊழியர்கள் நடத்திய பல கட்ட போராட்டங்கள் தான் என்பதை நினைவு கூர்ந்தார் .மேலும் அந்த போராட்டங்களை தொடர வேண்டிய கட்டாயத்தையும் கூறினார் .டவர் நிறுவனம் உருவாக்கப்படுவதை எதிர்த்து கடந்த ஆண்டு ஒரு நாள் வேலை நிறுத்தத்தை நடத்தி ,அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை ஏற்று கொள்ள ,மாட்டோம் என்று உறுதியாக பி எஸ் என் எல் ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பதை அரசுக்கு புரிய வைத்தோம் என் கூறினார் .ஊதிய மாற்றத்திற்கு நிறுவனம் ஆதரவாக இருந்தாலும் DOT இதுவரை அதற்க்கு சாதகமாக இல்லைஎன்பதை எதிர்த்து போராட்ட வேண்டிய அவசியத்தை கூறினார் .மாநாட்டில் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அறிக்கை முன் மொழிந்தார் .மாநில பொருளாளர் சீனிவாசன் நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்தார் .தமிழகம் முழுவதும் இருந்து 400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .ஆய்வறிக்கை மீது நடை பெற்ற விவாதத்தில் பிரதிநிதிகள் பங்கேற்றனர் .இரண்டாம் நாள் நடைபெற்ற நிகழ்வில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் தோழர் சம்பத் வாழ்த்துரை வழங்கினார் .முன்னதாக 19 தேதி நடைபெற்ற பொது அரங்கில் மாநில தலைமை பொது மேலாளர் திருமதி பூங்குழலி ,SNEA மாநில செயலர் தோழர் ராஜசேகர் ,NFTE மாநில செயலர் நடராஜன் , CITU சார்பாக கருமலையான் ஆகியோர் பங்கேற்றனர் .புதிய நிர்வாகிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் :
மாநில தலைவர் : தோழர் S.செல்லப்பா
துணை தலைவர்கள் : 1.தோழர் .K .மாரிமுத்து
2. தோழர் டி .பிரேமா
3. தோழர் .S.தமிழ்மணி
4.. தோழர் .பி .சந்திரசேகரன்
5. கே.வி .சிவகுமார்
மாநில செயலர் : தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன்
துணை செயலர்கள் :1. M .. முருகையா ,
2. எஸ் .சுப்ரமணியன்
3. தோழியர் .V.P.இந்திரா
4.தோழர் மெய்யப்பன் கிறிஸ்டோபர்
5. M.பாபு
மாநில அமைப்பு செயலர்கள் :1.V.மணியன் ,TT .ஈரோடு
2.A.சமுத்திரக்கனி .TT .சிவகாசி
3.கே .பழனிக்குமார் ,OS ,பழனி
4.N.சக்திவேல் TT உடுமலை ,
5.N.P.ராஜேந்திரன் ,SOA ,கோவை
6.B .ரிச்சர்ட் ,JE,மதுரை
7. வி .சீதாலட்சுமி ,OS ,திருநெல்வேலி
மாநில பொருளாளர் :-கே .சீனிவாசன் ,TT ,சென்னை
மாநில உதவி பொருளாளர் :-G.சுந்தர்ராஜன் ,JE,திருச்சி
மாநில உதவி பொருளாளர் :-G.சுந்தர்ராஜன் ,JE,திருச்சி
புதிய நிர்வாகிகளுக்கு விருதுநகர் மாவட்ட சங்கத்தின் புரட்சிகர நல் வாழ்த்துக்கள்
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...