ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு பொது மேலாளருடன் இன்று பேட்டி காணப்பட்டது .இன்றைய பேட்டியில் மாவட்ட செயலருடன் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் ,GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர் .இன்றைய பேட்டியில் பேசப்பட்டவை
1.BTS இல் உள்ள காலாவதியாகி போன உபகரணைகளை மாற்றி செல் சேவையை மேம்படுத்துவது .குறிப்பாக நமது மாவட்டத்தில் 2G BTS பகுதியில் இணையதள சேவை கடுமையாக பாதிப்பானதை சுட்டி காட்டி 08/05/2017 அன்று செய்தித்தாளில் இந்த விஷயம் கடுமையாக விமர்ச்சனம் செய்யப்பட்டு உள்ளதை எடுத்துரைத்தோம் .
2.விருதுநகர் புதிய தொலை பேசி நிலைய வளாகத்தில் செப்டிக் டேங்க் நிறைந்து சுகாதார பாதிப்பை உண்டாக்கு கிறது என்பதை பலமுறை சுட்டி காட்டியும் அலட்சியம் செய்யும் போக்கு சரியல்ல என்பதை சுட்டிக்காட்டியவுடன் வரும் 10 நாட்களுக்குள் சரிசெய்யப்படவேண்டும் என்று GM உத்தரவு பிறப்பித்து உள்ளார் .
3. சிவகாசி குரூப்ஸ் பகுதியில் ஓடும் ஜீப்பை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்பதை விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளோம் .
4.சிவகாசி பகுதியில் ஒரு ட்ரான்ஸ்மிஷன் பகுதி உருவாக்க பட வேண்டும் என் கூறியுள்ளோம் .
5.கேடர் பெயர் மாற்றம் வந்த பிறகு புதிய அடையாள அட்டை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை நெடு நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ளதை சுட்டி காட்டி விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம் .
6.தொடர் திருட்டு நடக்கும் அல்லம்பட்டி ஸ்டோர்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஸ்டார் க்கு மாற்றப்பட வேண்டும் என கூறியுள்ளோம் .
7.விருதுநகர் பழைய தொலை பேசி நிலைய வளாகத்தின் சுவர்களில் எழுதப்பட்டு உள்ள நமது விளம்பரத்தின் மீது தனியார்கள் சுவரொட்டி ஓட்டுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .
8.திருச்சுழியில் பயனற்று உள்ள நடமாடும் ஜெனரேட்டரை தேவையான இடத்தில குறிப்பாக சோழபுரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம் .
9.ஒப்பந்த ஊழியர் ஊதிய நிலுவை தொகை விஷயம் மற்றும் இன்னோவேடிவ் நிறுவனம் செலுத்த வேண்டிய EPF விஷயம் விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுத்தோம் .
10.பவர் ஷூ மற்றும் டூல் கிட் ட்ரான்ஸ்மிசன் பகுதியில் வேலை பார்க்கும் JE க்ளுக்கு வழங்கப்படாமல் ஜெனரல் செக்க்ஷன் மற்றும் பிளானிங் செக்க்ஷன்களில் மாறி மாறி சாக்கு சொல்லும் போக்கு இருப்பதை சுட்டி காட்டி உள்ளோம் .
11. பயன்படுத்தப்படாத மர சாமான்களை விரைந்து ஏலம் விட்டு அப்புறப்படுத்த கூறியுள்ளோம் .
12. வீரசோழன் தொலை பேசி நிலைய ஜெனரேட்டர் பழுது அடைந்து உள்ளதை சுட்டி காட்டி உள்ளோம் .
13. லோக்கல் கவுன்சில் கூட்டத்தை விரைந்து நடத்த வேண்டுகோள் விடுத்து உள்ளோம் .
No comments:
Post a Comment