Monday, May 22, 2017

8 வது மாநில மாநாடு -----ஈரோடு

பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் 8 வது தமிழ்  மாநில மாநாடு ஈரோடு நகரில் தோழர் பெத்தல்ராஜ் நினைவரங்கில் மே 19,20 தேதிகளில் எழுச்சியுடன் நடைபெற்றது .மாநாட்டின்  துவக்க .நிகழ்ச்சியாக தேசிய கொடியை மாநில  துணை தலைவர் தோழர் சாமிகுருநாதன் ஏற்றி வைத்தார் .சங்கத்தின் கொடியை மாநில  .தலைவர் தோழர் வெங்கடராமன் ஏற்றி வைத்தார் .மாநில தலைவர் தோழர் செல்லப்பா தலைமை வகித்தார் .துணை தலைவர் தோழர் ஜான் போர்ஜியோ அஞ்சலி உரையாற்றினார் .வரவேற்பு குழு நிர்வாகிகள் திரு செந்தில்வேல் மற்றும் தோழர் பரமேஸ்வரன் வரவேற்பு உரை நிகழ்த்தினர்  துவக்க உரையாற்றிய பொது செயலர் தோழர் அபிமன்யு , 100% தனியார் மயமாக்கப்படாமல் இருப்பதற்கு  பி எஸ் என் எல் ஊழியர்கள் நடத்திய பல கட்ட போராட்டங்கள் தான் என்பதை நினைவு கூர்ந்தார் .மேலும் அந்த போராட்டங்களை தொடர வேண்டிய கட்டாயத்தையும் கூறினார் .டவர் நிறுவனம் உருவாக்கப்படுவதை எதிர்த்து கடந்த ஆண்டு ஒரு நாள் வேலை நிறுத்தத்தை நடத்தி ,அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை ஏற்று கொள்ள ,மாட்டோம் என்று உறுதியாக பி எஸ் என் எல் ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பதை அரசுக்கு புரிய வைத்தோம் என் கூறினார் .ஊதிய மாற்றத்திற்கு நிறுவனம் ஆதரவாக இருந்தாலும் DOT இதுவரை அதற்க்கு சாதகமாக இல்லைஎன்பதை எதிர்த்து போராட்ட வேண்டிய அவசியத்தை கூறினார் .மாநாட்டில்  மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அறிக்கை முன் மொழிந்தார் .மாநில பொருளாளர் சீனிவாசன் நிதி நிலை அறிக்கை  சமர்ப்பித்தார் .தமிழகம் முழுவதும் இருந்து 400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .ஆய்வறிக்கை மீது நடை பெற்ற விவாதத்தில் பிரதிநிதிகள் பங்கேற்றனர் .இரண்டாம் நாள் நடைபெற்ற நிகழ்வில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி  தலைவர் தோழர் சம்பத் வாழ்த்துரை வழங்கினார் .முன்னதாக 19 தேதி நடைபெற்ற பொது அரங்கில் மாநில  தலைமை பொது மேலாளர் திருமதி பூங்குழலி ,SNEA மாநில செயலர் தோழர் ராஜசேகர் ,NFTE மாநில செயலர் நடராஜன் , CITU சார்பாக கருமலையான் ஆகியோர் பங்கேற்றனர் .புதிய நிர்வாகிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் :

மாநில தலைவர்           : தோழர் S.செல்லப்பா  
துணை தலைவர்கள்    : 1.தோழர் .K .மாரிமுத்து 
                                              2. தோழர்  டி .பிரேமா 
                                              3. தோழர் .S.தமிழ்மணி 
                                              4.. தோழர் .பி .சந்திரசேகரன் 
                                               5. கே.வி .சிவகுமார் 
மாநில செயலர்               : தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன் 
துணை செயலர்கள்        :1. M  ..  முருகையா ,
                                               2. எஸ் .சுப்ரமணியன் 
                                               3. தோழியர் .V.P.இந்திரா 
                                               4.தோழர் மெய்யப்பன் கிறிஸ்டோபர் 
                                                5. M.பாபு 
மாநில அமைப்பு செயலர்கள் :1.V.மணியன் ,TT .ஈரோடு 
                                                         2.A.சமுத்திரக்கனி .TT .சிவகாசி 
                                                         3.கே .பழனிக்குமார் ,OS ,பழனி 
                                                         4.N.சக்திவேல் TT உடுமலை ,
                                                         5.N.P.ராஜேந்திரன் ,SOA ,கோவை 
                                                         6.B .ரிச்சர்ட் ,JE,மதுரை 
                                             7. வி .சீதாலட்சுமி ,OS ,திருநெல்வேலி 
மாநில பொருளாளர்                :-கே .சீனிவாசன் ,TT ,சென்னை 
மாநில  உதவி பொருளாளர்  :-G.சுந்தர்ராஜன் ,JE,திருச்சி 
                               புதிய நிர்வாகிகளுக்கு விருதுநகர் மாவட்ட சங்கத்தின்  புரட்சிகர நல் வாழ்த்துக்கள் 
Image may contain: one or more people and crowd


































No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...