Tuesday, July 28, 2015

கேடர் பெயர் மாற்றம்,

இன்று நடைபெற்ற கேடர் பெயர் மாற்ற கூட்டத்தில் கீழ் கண்டவாறு கேடர்களின் பெயர்கள் மாற்றி அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது .

1) Regular Mazdoor - Telecom Assistant.
ரெகுலர் மஸ்தூர் - டெலிகாம் அசிஸ்டன்ட் .

2) Telecom Mechanic - Telecom Technician


டெலிகாம் மெக்கானிக் - டெலிகாம் டெக்னிசியன் 



3) TTAs - Junior Engineer.
டெலிகாம் டெக்னிகல் அசிஸ்டன்ட் - ஜூனியர் இன்ஜினியர் 

4) Sr.TOAs in NE11 &

NE12 pay scales - Office Superintendent. 

NE11 மற்றும் NE12 சம்பள விகிதத்தில் உள்ள எழுத்தர்கள் --- ஆபீஸ் சூப்பரின்டெண்ட் 
5) Other Sr.TOAs - Office Associate.
மற்ற எழுத்தர்கள் --- ஆபீஸ் அசொசியேட்  

Monday, July 27, 2015

அக்கினிச்சிறகு உதிர்ந்துவிட்டது-

ஷில்லாங்: மேகாலயாவில் ஐஐஎம்மில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற பேசிக்கொண்டிருந்த போது கலாமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.மாரடைப்புஏற்பட்டு மருத்துவமனையில் காலமானார்-உலகம்போற்றும் விஞ்ஞானியாய் மாணவர்கள் இளைஞர்களின் வழிகாட்டியாய் திகழ்ந்தவர்.அக்கினிச்சிறகு உதிர்ந்துவிட்டது-
இதய அஞ்சலிகலாம்

BSNL CCWF அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு அமைப்பு கூட்ட நிகழ்வுகள்

Friday, July 24, 2015

ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் அலட்சியம் காட்டும் மாவட்ட நிர்வாகங்கள்

மாநில சங்க சுற்றறிக்கை எண் 52 படிக்க :-Click Here

ABS Group ties up with BSNL for on-demand services


I
In a bid to expand its services in a highly competitive environment, the Atul Saraf led ABS Group has lined up a spree of developments. The company, which is all set to launch its MPEG 4 headend, is now strengthening its value added services (VAS) offering. ABS has entered into an agreement with telecom giant BSNL. As part of this, BSNL’s 10 million broadband subscribers can access the VAS and movies-on-demand services of ABS through its portal www.absplay.in.“We are working on setting up the servers in the BSNL premise for our value added services,” ABS CMD Atul B Saraf tells Indiantelevision.com.The portal will go live in August, 2015 after which BSNL broadband subscribers can access the library that contains more than 1000 movies, 60,000 songs and videos and approximately 70-80 web channels. “It is a subscription based model. There will be a revenue share between BSNL and us,” informs Saraf. The content will range from Bollywood, Hollywood, Tollywood, regional, sports, devotional, comedy, horror, action to music, short length videos and full length videos. While refraining to divulge the pricing of the content, Saraf says, “It will be in a very cost effective manner.”Close to 25 per cent of the catalogue has been purchased by ABS, while 75 per cent of the content will be on revenue sharing basis with content creators. “We have bought content from both national and international content providers. We will have a revenue share with them,” he informs.“We saw a gap in the VAS space and so tried to tap into it. This is part of our new revenue generating launches,” says Saraf.
                    Courtesy: 

கிலிமயமான எதிர்காலம்


             நன்றி :- விகடன் 

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி!


                           நன்றி:- விகடன் 

Wednesday, July 22, 2015

பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் தொடர் உண்ணாவிரதம்






78.2 விழுக்காடு பஞ்சப்படி இணைப்பு உத்தரவை 10.6.2013க்கு முன்பு ஓய்வு பெற்ற அனைவருக்கும் வழங்க வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாநிலந் தழுவிய தொடர் உண்ணாவிரதம் செவ்வாயன்று (ஜூலை 21) சென்னை மந்தைவெளி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தொடங்கியது.இப்போராட்டத்தில், நிறுத்தி வைக்கப்பட்ட மருத்துவப் படியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.போராட்டத்திற்கு சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் எஸ்.மோகன்தாஸ், சென்னை தொலைபேசி மாநிலத் தலைவர் பி.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.பிஎஸ்என்எல்இயு அகில இந்திய துணைத்தலைவர் எஸ்.செல்லப்பா போராட்டத்தை தொடங்கி வைத்தார். பிஎஸ்என்எல்இயு - சென்னை தொலைபேசி மாநிலச் செயலாளர் கே.கோவிந்தராஜன், மத்திய-மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கத்தலைவர் நெ.இல.சீதரன், பிஎஸ்என்எல் ஓய்வூதிய சங்க தமிழ்நாடு மாநிலச் செயலாளர் சி.கே.நரசிம்மன், சென்னை மாநிலச் செயலாளர் எஸ்.நரசிம்மன் உள்ளிட்டோர் பேசினர்.இந்தப்போராட்டம் புதனன்றும் (ஜூலை 22) தொடர்ந்து நடைபெறுகிறது.
                            நன்றி :- தீக்கதிர் 

'வியாபம்' ஊழல் - தொடரும் மரணங்கள்!


                        நன்றி :- விகடன் 

Monday, July 20, 2015

BSNL அறிவித்த விலையில்லா திட்டங்களை பயன்படுத்துவீர்... பயன்பெறுவீர்....

பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய சுற்றறிக்கையின் மாதிரி வடிவம் படிக்க :-Click Here

ஒப்பந்த ஊழியருக்கு குறைந்த பட்ச கூலி ரூ.15,000/- கோரி 29.07.2015ல் பேரணி

மாநில சங்க  சுற்றறிக்கை படிக்க :-Click Here

'BSNL to Hive Off Tower Business Into a New Subsidiary'

india_mobile_tower.jpg
 State-run telecom service provider Bharat Sanchar Nigam Ltd (BSNL) is all set to hive off its towers business into a separate subsidiary, the valuation of which could be in the region of Rs. 20,000 crore ($3 billion), Chairman-cum-Managing Director Anupam Shrivastava has said."We already share our towers with private players. We are looking at a subsidiary company within the company. We want more focus on tower sharing. The business is small now just Rs. 200 crore. But the potential is Rs. 2,000-2,500 crore annually," Shrivastava told IANS in an interview."BSNL will hold majority stake in the new company. A cabinet note has already been moved."According to a Deloitte India report, India currently has around 400,000 telecom towers and the growth is expected at around three percent annually over the next four-five years to take the numbers to 511,000 by 2020. Indus Towers is the market leader with 31 percent share, followed by BSNL with 18.1 percent.The state-run enterprise currently has 75,000 towers out of which it intends to shift some 65,000 to the new entity. It is the only company with towers in all the difficult and strategic areas like in the northeast, Jammu and Kashmir and the so-called Naxal belt.The move for a separate towers company, the top official explained, will also give some breather to the company's bottom line. The year-on-year loss of the company stood at Rs. 7,000 crore in 2014-15."A separate subsidiary means a separate profit and loss centre and a separate sales and marketing team. It will be away from our core business of telecom services. The cabinet decision can come any time probably this month. It is likely that by this fiscal the subsidiary will be formed."Shrivastava said a consultant has been hired and a project report was being prepared for the past year-and-a-half."Initial estimation shows the valuation of the towers company will be anywhere around Rs. 20,000 crore. It will work at an arms length with our core business. That means even BSNL will have to give rental to the towers company," said Shrivastava, appointed on Jan 15, 2015, for five years."It is important to grab the opportunities in sales and marketing as and when they arise. It will equally change the mindset. People think sharing towers will cut into your business. This is not true. Once we have a subsidiary, that focus will automatically come," he said."The private operator will anyway come close to your business. It's better to leverage your strengths."
                       Courtesy :- NDTV NEWS

Saturday, July 18, 2015

காலனியாதிக்கத்தின் புதிய முகங்கள்!


             அனைவரும் படிக்கவேண்டிய கட்டுரை 
கிரேக்கத்தின் வீழ்ச்சிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஏதென்ஸில் கூடியிருந்தவர்களின் கைகளில் ஏராளமான பதாகைகள். ஏராளமான வாசகங்கள். ஒரு வயதான கிரேக்கர் தன் கைகளில் பிடித்திருந்த பதாகை வரலாற்றுக்கும் சமகால பொருளாதாரத்துக்கும் இடையே உள்ள பொருத்தப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியது: “நாங்கள்தான் ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் கொடுத்தோம். இன்றைக்கு நாங்கள் வீழ்ந்துவிடாமல் நிற்க கேவலம் இந்தக் கடன் விஷயத்தில் ஐரோப்பா கொஞ்சம் விட்டுக்கொடுக்கக் கூடாதா?”சத்தியமான வார்த்தைகள்! ஆனால், காசே எல்லாமுமான இன்றைய உலகத்தில் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் ஏதேனும் மதிப்பிருக்கிறதா? அதேசமயம், ஏகாதிபத்தியம் எல்லாவற்றையும் தன்னுடையதாக சுவிகரித்துக்கொள்ளக் கூடியது. கிரேக்கத்தைத் தங்களுடைய நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியவைத்த பிறகு, பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே அந்த கிரேக்க முதியவரின் வார்த்தைகளைத் தனதாக்கிக்கொண்டார்: “ஐரோப்பிய நாகரிகத்தின் இதயமாகவும் நம் கலாச்சாரத்தின் பகுதியாகவும் வாழ்க்கைமுறையின் அம்சமாகவும் இருக்கும் கிரேக்கத்தை எங்கே நாம் இழந்துவிடுவோமோ என்று நான் பயந்தேன்.”கிரேக்கம் பண்டைய காலத்தில் ஐரோப்பாவுக்கு எவ்வளவோ கற்றுக்கொடுத்திருக்கிறது. ஐரோப்பாவையும் தாண்டியும் அது கற்றுக்கொடுக்கும் பெரிய பாடம் அதன் சமகால அனுபவம். குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளுக்கு. நம் இந்தியாவுக்கு!தேசம் திவாலாகிவிடும் எனும் நிலைக்கு கிரேக்கம் வந்து நிற்கக் காரணம் என்ன? சர்வதேச ஊடகங்கள் வாயிலாக நமக்குச் சொல்லப்படும் செய்தி கிரேக்கம் இதுவரை வாங்கியிருக்கும் ரூ.16.8 லட்சம் கோடி கடன். அதில் இந்த ஜூன் 30-க்குள் திருப்பித் தந்திருக்க வேண்டிய தவணை ரூ.10,500 கோடியை கிரேக்க அரசால் தர முடியாமல் போனது. சரி, ரூ. 10,500 கோடியைத் திருப்பித் தர முடியாத ஒரு நாட்டுக்கு, அதே கடன்காரர்கள் எப்படி மீண்டும் ரூ. 5.90 லட்சம் கோடியைக் கடனாகத் தருகிறார்கள்?உலகம் கடன் பொருளாதாரம் எனும் கொள்கையை உள்வாங்கிக்கொண்டு நீண்ட காலம் ஆயிற்று. ஆக, கடன் என்பது இங்கே வெளியே சொல்லப்படும் காரணம். உண்மையான காரணம் என்ன? அது நாம் பேச வேண்டியது.ஐரோப்பாவில் கி.பி.1500-களுக்குப் பின் தோன்றிய பொருளாதாரக் கோட்பாடுகளில் முக்கியமானது, வணிக அடிப்படைவாதம் (Mercantalism). இன்றைய முதலாளித்துவம், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் எல்லாவற்றுக்கும் மூலக்கோட்பாடு என்று இதைச் சொல்லலாம். எது ஒன்றையும் லாப நோக்கில் அணுகச் சொல்லும் இந்தக் கோட்பாட்டின் அடிப்படை, ஒரு நாட்டின் பலமும் வளமும் அதன் செல்வ வளங்களே என்பது. அந்தச் செல்வ வளத்தைத் தக்கவைக்க ஏற்றுமதியை அதிகமாகவும் இறக்குமதியைக் குறைவாகவும் பேணும் வகையில் பொருளாதாரத்தைப் பராமரிப்பது. இந்தப் பொருளாதார ஆதிக்க நிலையைப் பராமரிப்பதற்கு ஏதுவாக காலனி நாடுகளை உருவாக்குவது.நவீன யுகத்தில், வல்லரசுகள் தங்களுடைய பொருளாதாரச் சூறையாடல்களுக்குப் புதுப்புது பெயர்களைச் சூட்டிக்கொண்டாலும், அவற்றின் அடிப்படை இயக்கம் இன்னும் வணிக அடிப்படைவாதத்திலேயே நிலைகொண்டிருப்பதற்கும் அவற்றின் நவகாலனியாதிக்க முறைக்கும் அப்பட்டமான உதாரணம் ஆகியிருக்கிறது கிரேக்கம்.கிரேக்கம் 1975-ல் மக்களாட்சியைத் தேர்ந்தெடுத்தபோதே, - ஏனைய வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் - பொருளாதாரரீதியாகப் பலவீனமாகத்தான் இருந்தது. எனினும், அன்றைக்கு அதன் பொருளாதாரம் சுயசார்புடன் இருந்தது. நாட்டின் முக்கியத் தொழிலான விவசாயம் சிறு விவசாயிகளின் கைகளில், குடும்பத் தொழிலாக, கூட்டுறவு அமைப்புடன் கை கோத்ததாக இருந்தது. 1980-ல் ‘நேட்டோ’ அமைப்பில் கிரேக்கம் இணைந்தது. 1981-ல் ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்தில் இணைந்தது. அடுத்த மூன்று தசாப்தங்களில் அதன் பொருளாதாரம் இவ்வளவு நொறுங்குவதற்கு அடிப்படையான காரணம் அதன் தற்சார்பு அழித்தொழிக்கப்பட்டது. உற்பத்திசார் பொருளாதாரம் அடித்து நொறுக்கப்பட்டு, சந்தைசார் பொருளாதாரம் வளர்த்தெடுக்கப்பட்டது. விளைவு, இன்றைக்கு கிரேக்கத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 16%, சேவைத் துறையின் பங்களிப்போ 81%. வேளாண் துறையின் பங்களிப்பு வெறும் 3.4%. சுற்றுலாத் துறையின் பங்களிப்போ 18%.கிரேக்கத்துக்கு அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பைப் போல 175% அளவுக்குக் கடன்கள் இருப்பது உலகத்துக்குத் தெரியும். இதில் அதிகபட்ச கடன் கொடுத்திருக்கும் நாடு ஜெர்மனி என்பதும் உலகத்துக்குத் தெரியும். அந்தக் கடன்களில் ஜெர்மனியிடமே திரும்பச் சென்ற தொகை எவ்வளவு? ஒரு சின்ன உதாரணம், ஜெர்மனியின் ஆயுத ஏற்றுமதியில் 15% கிரேக்கத்துக்குதான் செல்கின்றன.கிரேக்கத்தின் மோசமான செலவுகளில் ஒன்று அதன் அதீத ஆயுத நுகர்வு. ஒரு ஒப்பீட்டுக்காக எடுத்துக்கொண்டால், கிரேக்கத்திடம் இருக்கும் பீரங்கிகளின் எண்ணிக்கை 1300. இது இங்கிலாந்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்குக்கும் அதிகம். ஐரோப்பியப் பொருளாதாரச் சமூகத்தில் இணைந்த பின் - 1980-களில் - தன்னுடைய ஒட்ட்மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 6.2% ஆயுதங்கள் வாங்குவதற்காகச் செலவிட்டது. இவ்வளவு மோசமான நிலையிலிருக்கும் சூழலிலும்கூட ஆயுதங்கள் வாங்க 2.4% செலவிட்டிருக்கிறது. கிரேக்கம் செலவிட்ட இந்தப் பணமெல்லாம் யார் யாரிடம் போனது? கிரேக்கர்கள் இதைப் பற்றிதான் உலகம் பேச வேண்டும் என்கிறார்கள்.ஏகாதிபத்திய சக்திகளின் ஆதிக்கத்துக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்றே கிரேக்க மக்கள் இந்த முறை இடதுசாரி கட்சியான சிரிஸா கட்சியைத் தேர்ந்தெடுத்தார்கள். பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் நடத்திய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிலும் இதையே பெரும்பான்மை கிரேக்க மக்கள் உறுதிசெய்தனர் (தேர்தலில் சிரிஸா கட்சிக்குக் கிடைத்த வாக்குவீதத்தைவிடவும் இப்போது கருத்தறியும் வாக்கெடுப்பில் கிடைத்த வாக்குவீதம் அதிகம் என்பது இங்கே கவனிக்க வேண்டியது). அலெக்சிஸ் சிப்ராஸுக்குக் கிடைத்த வாய்ப்பு, இதேபோல, பல தசாப்தங்களாய் ஏகாதிபத்திய சக்திகளால், கடன்களின் பெயரால் காலனியாக்கப்பட்ட ஈகுவெடாரின் தலைவிதியை மாற்றியமைத்த ரஃபேல் உருவாக்கிய வாய்ப்புக்கு இணையானது. “எங்கள் நாட்டைவிடவும், மக்கள் நலனைவிடவும் வேறு எதுவும் எங்களுக்கு முக்கியம் இல்லை” என்று அதிரடி நடவடிக்கைகளை நோக்கி சிப்ராஸ் திரும்பியிருக்க வேண்டும். ஊழல் மற்று வரிஏய்ப்பு மூலம் நாட்டைச் சூறையாடிய அரசியல் - அதிகாரவர்க்கம், பெரும்பணக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். மாற்று பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவரால் முடியவில்லை.ஒரு நாட்டை ஆளும் பிரதான கட்சி ஏகாதிபத்திய சக்திகளின் நிர்ப்பந்தங்களுக்குப் பணிவதில்லை என்று முடிவெடுக்கிறது, அதையே நாடாளுமன்றமும் எதிரொலிக்கிறது, நாட்டின் ஆகப் பெரும்பாலான மக்களும் அதையே வழிமொழிகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு தேசமே கூடி எடுத்த முடிவு. எனினும், பிரதமரால் செயல்படுத்த முடியவில்லை. வெளிசக்திகளின் முடிவே இறுதியில் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது என்றால், உண்மையில் அந்த நாட்டை ஆள்பவர்கள் யார்? “பன்னாட்டுச் செலாவணி நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய ஆணையம் இவை மூன்றின் பிரதிநிதிகளே கிரேக்கத்தின் முடிவுகளைத் தீர்மானிப்பவர்கள். ஏதென்ஸில் அவற்றின் அதிகாரிகள் எப்போதும் தங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய பெயர்கள் அவ்வப்போது மாறும்; குறிக்கோள்கள் ஒன்றே” என்கிறார்கள் கிரேக்கர்கள்.இந்தியர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான இடம் இது. நம்முடைய பொருளாதாரக் கொள்கைகள் இன்றைக்கு யாரால் வடிவமைக்கப்படுகின்றன? மன்மோகன் சிங், மான்டேக் சிங் அலுவாலியாவில் தொடங்கி ரகுராம் ராஜன், அர்விந்த் பனகாரியா, அர்விந்த் சுப்ரமணியன் வரை யார்? எல்லாம் உலக வங்கி, பன்னாட்டுச் செலாவணி நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களின் முன்னாள் அதிகாரிகள்.இன்றைக்கு, கிரேக்கம் அதன் வீழ்ச்சியிலிருந்து மேலே வர ஐரோப்பிய பொருளாதாரச் சமூகம் நிர்பந்தித்திருக்கும் பரிந்துரைகள்/ கட்டுப்பாடுகள் என்ன? “ கல்வி - சுகாதாரம் மக்களுக்கான நலத்திட்டப் பணிகள், மானியங்கள் போன்ற குடிமக்களுக்கான அடிப்படைக் கடமைகள், நாட்டின் தொழில்கள் / வேலைவாய்ப்புகள் சார்ந்த பொறுப்புகளிலிருந்து அரசு தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும்; முற்றிலுமாக தனியார்மயமாக்கலை நோக்கி நகர வேண்டும்.” இதையெல்லாம் ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கிறது கிரேக்கம். இதையேதானே வெவ்வேறு வார்த்தைகளில் நாமும் நம்முடைய ‘பொருளாதார மேதைகள்’ வாயிலிருந்து கேட்கிறோம்?கிரேக்கத்தின் மீது இப்போது திணிக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை, “உலகப் போருக்குப் பின் ஜெர்மனிக்கு உலக நாடுகள் இழப்பீடு விதித்த ஒப்பந்தத்தைப் போலக் கொடூரமானது” என்று கூறியிருக்கிறார் பதவிநீக்கப்பட்ட கிரேக்க நிதியமைச்சர் யானீஸ். “புதிய காலனியாதிக்கத்தை எதிர்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார் பதவி விலகிய எரிசக்தித் துறை அமைச்சர் லஃபாஸனிஸ்.புதிய காலனியாதிக்கத்துக்குப் பல முகங்கள் உண்டு. தாம் எதிர்கொள்ளும் முகத்தின் அடையாளத்தை இந்தியர்கள் கண்டுணர வேண்டும்!
                      நன்றி :-தி ஹிந்து 

மாநில சங்க சுற்றறிக்கை

மாநில சங்க சுற்றறிக்கை எண் 50 படிக்க :-Click Here
மாநில சங்க சுற்றறிக்கை எண் 51 படிக்க :-Click Here

ரமலான் வாழ்த்துக்கள்

BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கம் அனைவருக்கும் புனித ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது  

Wednesday, July 15, 2015

அடையாளங்களை தொலைக்கும் தமிழன்!

   வேகமாக சுழலும் பூமிக்கு ஈடுக்கொடுத்து மனிதனும் வேகமாக ஓடும் காலம் இது. நாகரிகம், நவ நாகரிக வளர்ச்சி என்று படிப்படியாக நம்முடைய அடையாளங்களை மறந்தும், மறைத்தும் புதிய நாகரிகத்திற்குள் தானாகவே நகர்ந்து கொண்டிருக்கிறான் மனிதன்.புதிய நாகரிகம் நல்லதுதான். அந்த நாகரிகத்தால் நம்முடைய கலாச்சாரம், மொழி, பண்பாடு, நாகரிகம், விருந்தோம்பல் என நம்முன்னோர்கள் காலங்காலமாக கட்டிக்காத்த நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகிறான் தமிழன். இதற்கு உதாரணமாக, நம்முடைய ஒவ்வொரு செயலும் உள்ளது. முதலாவது தமிழன் மாற்ற நினைப்பது மொழியைதான். தினம் தினம் புதிதாக முளைக்கின்ற ஆங்கிலவழி பள்ளிகளில்தான் பிள்ளைகளை சேர்க்கின்றான். இதனால், 21-ம் நூற்றாண்டில் எத்தனை மாணவர்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியும்? என்பதை நினைத்தால் பகீர் என்கிறது.

குழந்தைகளின் மேல் சூரியக் கதிர்கள் படுவது நல்லது என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், நாமோ நவீன காங்கீரிட் கட்டடங்களுக்குள் காற்றுக் கூட நுழையாதவாறு கட்டிக் கொண்டு வசிக்கிறோம். காற்றே நுழையாத வீட்டிற்குள் சூரிய ஒளி எப்படி வரும்? அதனால்தான் இன்றைக்கு பிறந்த குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் வந்து மனதை நோகடிக்கிறது. கைகுத்தல் அரிசியில் பலவகை உணவை உண்ட நாம், இன்று மேல்நாட்டு கலாசார உணவுகளான பீட்சா, பர்கர், ஃபிரைட் சிக்கன் நூடுல்ஸ் மற்றும் வாயில் பெயர் நுழையாத உணவுகள் இன்று நம் வாயினுள் நுழைகின்றன.


நம் கலாசாரம் இன்று தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது. நம்முடைய பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை, கைத்தறி ஆடைகளை மறந்து, நவ நாகரிக ஆடைகளுக்கு மாறி, என்றைக்காவது ஒருநாள் மட்டும் நம் கலாச்சார ஆடைகளை அணிவது, நம் கலாச்சாரத்தை நாமே குழித்தோண்டி புதைக்கும் செயலாகும். நாம் உபயோகப்படுத்தின கைவினைப் பொருட்கள் மாறி, இன்று எல்லாம் பிளாஸ்டிக் மயமாகி விட்டது.பருகும் பானங்களை கூட விட்டு வைக்கவில்லை. உடலுக்கு ஆரோக்கியம் தரும் நுங்கு, இளநீர், மோர், பதநீர் என இயற்கை பானங்களை தவிர்த்து விட்டு, பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பானங்களையே பருகுகிறோம். இயற்கை குடிநீரை கூட கேன்களில் வாங்கி பயன்படுத்தும் சூழல் உருவாகிவிட்டது. முன்னோர்கள் உருவாக்கிய கலைகளை கூட நாம் பாதுகாப்பது இல்லை. வீட்டை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு அடிக்கும் போது பழைய பொருட்கள் என்று புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், மருத்துவ குறிப்புகள் என தெருவிலும், குப்பையிலும் தீயிலுமிட்டு எரிப்பது பழைய பொருட்களை மட்டுமல்ல, நம் முன்னோர்களின் அடையாளங்களையும்தான். இயற்கை மருத்துவ முறைகளை கூட மாற்றி நவீன மருத்துவம் என சம்பாத்தியங்களையும் தொலைத்து நிற்கின்றோம்.


இன்று தமிழன் என்ற போர்வையில் வேறொரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். இதே நிலை நீடிக்குமானால், தொன்மையான நமது நாகரிகத்தையும், மொழியையும், பழக்க வழக்கத்தையும் நாமே அழித்து விடும் நிலைக்கு தள்ளப்படுவோம்.நம் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும், வருங்கால நம்முடைய சந்ததிகளுக்கும் கற்று தருவோம். நம் அடையாளங்களை தொலைக்காமல் பாதுகாப்போம்!
         நன்றி :- விகடன் செய்திகள் 

'வீதி'தான் 'விதி'யா?


                   நன்றி : தி ஹிந்து 

அத்தனை கிரகத்தையும் எட்டிப் பார்த்து விட்டோம்... பெரும் மகிழ்ச்சி + பெருமிதத்தில் நாசா

விண்வெளி ஆராய்ச்சியில்  இன்னுமொரு மைல்கல் 



சூரியக் குடும்பத்தில் உள்ள அத்தனை கிரகத்தையும் பார்த்து விட்டோம் என்று நாசா பெருமிதத்துடன் கூறியுள்ளது. சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கிரகங்களுக்கும் விண்கலம் மூலம் போய் வந்த ஒரே நாடு அமெரிக்கா என்ற பெருமையும் அதற்குக் கிடைத்துள்ளது. புளூட்டோ பயணம் வெற்றிகரமாக அமைந்ததை நாசா விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.கடைசி "கிரக"ப் பிரவேசம் சூரியக் குடும்பத்தில் இதுவரை மனித வாடை எட்டிப் பார்க்காத ஒரே கிரகமாக புளூட்டோ மட்டுமே இருந்து வந்தது. தற்போது அதற்கும் போய் விட்டான் மனிதன். இதுவே நாசாவின் உற்சாகத்திற்கு முக்கியக் காரணம்.
                 நன்றி :- ஒன்  இந்தியா 

Tuesday, July 14, 2015

ஆறப் போட்டுடுவாங்களோ?


                              நன்றி :- தி ஹிந்து 

‘வியாபம்’ ஊழல்: மோடி மவுனம் சாதிப்பது ஏன்?



உலக விஷயங்கள் பற்றி எல்லாம் ட்விட்டரில் கருத்து தெரிவிக்கும் நமது பிரதமர் மோடி, பாஜக அரசின் ஊழல் விஷயத்தில் தொடர்ந்து மவுனமாக இருப்பது ஏன்?காங்கிரசின் திட்டங்களை எல்லாம் குறை கூறி ஆட்சிக்கு வந்தவர் நமது பிரதமர் மோடி. ஆட்சிக்கு வந்தபின்பு எதையெல்லாம் குறை கூறினாரோனா அதை எல்லாம் தீவிரமாக நடைமுறைப்படுத்திக்கொண்டு இருக்கிறார்- ஊழல் உட்பட. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பல ஊழல்களை நாம் கண்டிருந்தாலும் இந்த வியாபம் ஊழலும், அதைத் தொடர்ந்து நிகழும் மர்ம மரணங்களும் நம்மை ஆழ்ந்த சிந்தனையில் தள்ளியுள்ளது என்றே சொல்லலாம். இந்த ஊழல்கள் மூலம் இவர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. இனியும் மோடியின் அரசு ஊழலுக்கு எதிரானது என்றும், வளர்ச்சியின் நாயகன் இவர் என்றும் இவர்களின் சகாக்களும், சங்கபரிவாரங்களும் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது.'வியாபம்' என்பது மத்தியப் பிரதேத்தின் மாநில அரசுப் பணியிடங்களுக்கும், மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வு மூலம் உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் ‘பணியாளர் தேர்வாணையம்’ போன்ற அமைப்பு.இதன்மூலம் மருத்துவக் கல்லூரிக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதில் ஆள் மாறாட்டம், புத்தகங்களை வைத்து பரீட்சை எழுத அனுமதிப்பது, பரீட்சை எழுதுவதற்கான அனுமதி அட்டையில் மோசடிகள், இப்படி பல்வேறு முறைகேடுகள் நடந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் மோசடியாக தேர்வு பெற்றுள்ளனர்.இந்த பணியாளர் தேர்வாணையத்தில், அரசியல் செல்வாக்கும், பணபலமும், அதிகார துஷ்பிரயோகங்களும் இன்றைக்கு அங்கு ஆளும் பாஜக அரசு மூலம் புகுந்துள்ளது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் தொடங்கி பலர் மீது இந்த ஊழலில் குற்றச்சாட்டுகள் சுமத்தப் படுகின்றன.
இந்த விசாரணையை முன்னின்று நடத்திய மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அருண் ஷர்மாவும், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்களை பேட்டி கண்ட தொலைக்காட்சி நிருபர் அக் ஷய் சிங்கும் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி பல்வேறு முறைகேடுகள் நடந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் மோசடியாக தேர்வு பெற்று மருத்துவர்களாக பணியில் சேர்ந்தால் நாளைக்கு இவர்களிடம் மருத்துவம் பார்க்கச் செல்லும் மக்களின் நிலைமை என்ன ஆகும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும்?
                 நன்றி :- விகடன் செய்திகள் 

மோடி சொன்ன நல்ல நாள் வர 25 ஆண்டுகள் ஆகுமாம்: அமித்ஷா சொல்கிறார்!

காத்திருந்து  காத்திருந்து  காலங்கள் போகுதடி :- செய்தி படிக்க :-Click Here
                       நன்றி :- விகடன் செய்திகள் 

இந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது!

இந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது!
செய்தி படிக்க :-Click Here

கிராமங்களில் வசிக்கும் 67 கோடி பேரின் ஒருநாள் வருவாய் ரூ.33 தான்!


செய்தி படிக்க :-Click Here

BSNL Braces to Win Back the Lost Ground

செய்தி படிக்க :-Click Here

Thursday, July 9, 2015

இன்றைய செய்திகளில் நமது போராட்டம்

பிஎஸ்என்எல் பெண்அதிகாரியை கண்டித்து ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
 ராஜபாளையம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக இருப்பவர் ராணி. இவர் பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளருக்குத் தரக்கூடிய சலுகைகளை நிறைவேற்றுவதில் காலதாமதமாக செயல்படுவதாக கூறியும், ஊழியர்களைத் தரக்குறைவாக நடத்துவதாகக் கூறியும் மாவட்ட பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதைக் கண்டித்தும், வாடிக்கையாளர்கள் சேவைமைய அதிகாரியை உடனே பணியிடம் மாற்றம் செய்ய வலியுறுத்தியும் ராஜபாளையம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நேற்று ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத் தலைவர் அனவரதம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரவீந்திரன், மாவட்டத் தலைவர் சமுத்திரக்கனி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டனர். கிளைச் செயலாளர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.
                  நன்றி :- தினகரன் 

ராஜபாளையம் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம் வாடிக்கையாளர் சேவை மைய துணைக் கோட்டப் பொறியாளரின் ஊழியர் விரோத, வாடிக்கையாளர்களை மதிக்காத, BSNLன் வளர்ச்சிக்கு எதிரான போக்கைக் கண்டித்து ராஜபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக் காட்சிகளில் சில...





















11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...