பிஎஸ்என்எல் பெண்அதிகாரியை கண்டித்து ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக இருப்பவர் ராணி. இவர் பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளருக்குத் தரக்கூடிய சலுகைகளை நிறைவேற்றுவதில் காலதாமதமாக செயல்படுவதாக கூறியும், ஊழியர்களைத் தரக்குறைவாக நடத்துவதாகக் கூறியும் மாவட்ட பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதைக் கண்டித்தும், வாடிக்கையாளர்கள் சேவைமைய அதிகாரியை உடனே பணியிடம் மாற்றம் செய்ய வலியுறுத்தியும் ராஜபாளையம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நேற்று ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத் தலைவர் அனவரதம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரவீந்திரன், மாவட்டத் தலைவர் சமுத்திரக்கனி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டனர். கிளைச் செயலாளர் முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.
நன்றி :- தினகரன்
நன்றி :- தினகரன்
No comments:
Post a Comment