Wednesday, June 26, 2019

8 வது மாவட்ட செயற்குழு கூட்டம்

8 வது மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று அருப்புக்கோட்டை நகரில் மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .தோழர் கணேசமூர்த்தி அஞ்சலி உரை நிகழ்த்த அனைவரும் தியாகிகளுக்கு மௌன  அஞ்சலி செலுத்தினர் .அதன் பின் தோழர் ஜெயக்குமார் தலைமை உரை நிகழ்த்தினார் .மாவட்ட செயலர் கீழ் வரும் ஆய்படு பொருளை சமர்ப்பித்தார் .
1.தோழர் கணேசன் பணி நிறைவு பாராட்டு 
2.8 வது சரிபார்ப்பு தேர்தல் 
3.பிசினெஸ் ஏரியா இணைப்பு 
4.ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் 
5.வரவு செலவு அறிக்கை 
மேற்குறிய விவாத பொருளின் அடிப்படையில் ஒரு விவாத குறிப்பை மாவட்ட செயலர் சமர்ப்பித்து  உரை நிகழ்த்தினார் .அதன் பின் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் எழுச்சி மிகு உரை நிகழ்த்தினார் .இன்றைய BSNL நிலைமை ,தற்போது பொறுப்பு ஏற்றுள்ள அரசாங்கத்தின் கொள்கைகள் ,ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் ,அதை தீர்க்க நடக்க உள்ள இயக்கங்கள் ,8 வது சரிபார்ப்பு தேர்தலை எதிர் கொள்ள வேண்டிய அம்ஸங்கள் ஆகியவற்றை விரிவாக பேசினார் .ஒப்பந்த ஊழியர் குறைப்பு என்பதை ஏற்று கொள்ள கூடாது  என்றும் அதற்கான முறையான எதிர்ப்பு கடிதத்தை உடனடியாக GM ,அவர்களுக்கு அனுப்ப வேண்டும் என கேட்டு கொண்டார் .மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் விருதுநகர் மாவட்டத்தின் நிலைமைகளை விரிவாக பேசினார் .BSNL ஊழியர் சங்கத்திற்கு  எதிராக செயல்படும் அதிகாரி மீது உடனடியாக PGM (F ) அவர்களின் கவனத்திற்கு மாநில சங்கம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் ,அந்த அதிகாரியை எதிர்த்து ஒரு போராட்டத்தை நடத்தவேண்டும் எனவும் வலியுறுத்தினார் .மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த அதிகாரி பற்றி நமது அனைத்திந்திய பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்களும் கேட்டு உள்ளார் .தேவை ஏற்பட்டால் கார்பொரேட் அலுவலகத்தில் டைரக்டர் (HR) அவர்களிடம்  இப் பிரச்சனையை கொண்டு செல்வோம் என கூறி இருக்கிறார் . விவாதத்தில் அனைத்து தோழர்களும் பங்கேற்று சிறப்பித்தனர் .
முடிவுகள் 
1.அனைத்து கிளைகளும் ஜூலை மாதம் பொது குழு கூட்டங்களை நடத்துவது 
2.3 மையங்களில் சிறப்பு கூட்டம் நடத்துவது (விருதுநகர் ,சிவகாசி மற்றும் ராஜபாளையம் )
3.பூத் ஏஜெண்டுகளாக தோழர்கள் சண்முக சுந்தரம் ,மாரிமுத்து ,.
4.செல்லம் ,சண்முகவேலு ,ரவிச்சந்திரன் ,வெங்கடசாமி ,தியாகராஜன் ,பொன்ராஜ் ,கண்ணன் மற்றும் ராஜ்மோகன் ,மோகனசுந்தரம் ,ஜெயச்சந்திரன் ஆகியோர் செயல்படுவர் .
5.ஓட்டு எண்ணிக்கைக்கு தோழர் இளமாறன் ஏஜென்ட் ஆக செயல்படுவார் .
6.கிளை வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்க பட்டு உள்ளனர் .
7.ஒப்பந்த ஊழியர் குறைப்பு திட்டத்திற்கு  எதிராகவும் ,பிசினஸ் ஏரியா இணைப்பு விஷயமாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் எனவும் ,ஊழியர் பிரச்சனைகளை கையாளக்கூடிய ஒரு அதிகாரி விருதுநகரில் நியமிக்கபட வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக கடிதம் கொடுப்பது .
8.பணி நிறைவு பெற்ற தோழர் முனியாண்டி அவர்களை மாவட்ட அமைப்பு செயலர் பதவியில் இருந்து விடுவிப்பது என்று மாவட்ட செயற்குழு முடிவெடுத்தது .தோழர் சேதுராம் அவர்களை மாவட்ட அமைப்பு செயலராக ஏகமனதாக  தேர்வு செய்தது .
9.மாவட்ட செயற்குழுவிற்கு தனது செலவில் மதிய உணவு வழங்கிய தோழர் கணேசன் அவர்களை மாவட்ட சங்கம் மனதார பாராட்டியது .அவரை பாராட்டி மாவட்ட செயலர் ,மாவட்ட தலைவர் ,மாநில அமைப்பு செயலர் ,தோழர் இளமாறன் தோழர் மதி கண்ணன் ,தோழர் சோலை ஆகியோர் பேசினர் .அவருக்கு நமது தமிழ் மாநில செயலர் பாபு ராதாகிருஷ்ணன் சந்தன மாலை அணிவித்து கவுரவித்தார் .தோழர் மதி கண்ணன் சால்வை அணிவித்து பாராட்டினார் .மாவட்ட சங்கத்தின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது .தோழர் பாஸ்கரன் மாவட்ட பொருளாளர் நன்றி நவின்றார் .
Image may contain: 2 people, people smiling, people sitting and indoor
Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 2 people, people smiling, people sitting and indoor
Image may contain: 4 people, people sitting, table and indoor
Image may contain: 2 people, people standing
Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 3 people, people smiling, people standing
Image may contain: 3 people, people smiling, people sitting and people standing
Image may contain: 4 people, people standing and indoor
Image may contain: 2 people, people standing
Image may contain: 4 people, people standing
Image may contain: 4 people, people standing
Image may contain: 4 people, people standing
Image may contain: 3 people, people standing
Image may contain: 2 people, people sitting
Image may contain: 3 people, people smiling, people sitting
Image may contain: 1 person, sitting, table and indoor
Image may contain: 2 people, people sitting and indoor
Image may contain: 4 people, people sitting and indoor

பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் 8 வது சரிபார்ப்பு தேர்தல் கூட்டம்

விருதுநகர் GM அலுவலக கிளை தோழர் M .ரவீந்திரன் ,TT  அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் 8 வது சரிபார்ப்பு தேர்தல் கூட்டம் செவ்வாய் கிழமை மதிய உணவு இடைவெளியில் தோழர் சிங்காரவேலு மற்றும் தோழியர் தனலட்சுமி தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .அனைவரையும் GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் மற்றும் outdoor கிளை செயலர் தோழர் மாரிமுத்து வரவேற்று உரை நிகழ்த்தினர் .அதன் பின் 30/06/2019 அன்று பணி நிறைவு பெரும் தோழர் ரவீந்திரன் மாவட்ட மற்றும் கிளை சங்கங்களால் பாராட்டை பெற்றார் .அதன் பின் மாவட்ட செயலர் ரவீந்திரன் அவர்கள் இன்றைய BSNL எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் 8 வது சரிபார்ப்பு தேர்தலில் நாம் செய்ய வேண்டிய கடமைகளையும் எடுத்துரைத்தார் . Image may contain: 3 people, including Srinivasan Ravindran, people standing
Image may contain: 3 people, people sitting and people standing
Image may contain: 3 people, people sitting and outdoor
Image may contain: one or more people, people sitting, people standing and outdoor
Image may contain: 4 people, people standing and people sitting
Image may contain: 3 people, people standing
Image may contain: 6 people, including Srinivasan Ravindran, people standing
Image may contain: 1 person, standing and outdoor
Image may contain: 2 people, people sitting

Wednesday, June 12, 2019

கடந்த 3 மாத காலமாக (மார்ச் to மே ) ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யாமல் இருப்பதை  கண்டித்தும் ,உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்டத்தில் 3 மையங்களில் மாலை நேர தர்ணா நடைபெற்றது 
Image may contain: 10 people, people standing, wedding and outdoor
Image may contain: 1 person, walking, standing and outdoor
Image may contain: one or more people, people standing and outdoor
Image may contain: one or more people and outdoor
Image may contain: 9 people

Tuesday, June 11, 2019

DCC to Discuss 5G Trials and Relief Package for BSNL, MTNL on June 13: Report

MEDIA REPORT படிக்க :-CLICK HERE

பணி நிறைவு பெற்ற தோழர்கள் வழங்கிய நன்கொடை

கடந்த  3 மாதகாலமாக பணி நிறைவு பெற்ற  கீழ் கண்ட தோழர்கள்  நமது சங்கத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர் .வழங்கிய தோழர்களுக்கு மாவட்ட சங்கம் தனது நன்றியை தெரிவித்து கொள்கிறது . தோழர்களின் பணி நிறைவு காலம் சிறக்க வாழ்த்துவோம் .
1.தோழர் பொன்னுச்சாமி ,TT ,சிவகாசி அவர்கள் மாவட்ட ,மாநில சங்கங்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கியுள்ளார் .
2. தோழர் மாயக்கிருஷ்ணன் ,TT ,ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்கள் மாவட்ட ,மாநில சங்கங்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கியுள்ளார் .
3.தோழர் R .முனியாண்டி ,TT  சிவகாசி அவர்கள் மாவட்ட ,மாநில சங்கங்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கியுள்ளார் .
4.தோழர் .பொன்னுச்சாமி ,TT ,ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்கள் மாவட்ட ,மாநில சங்கங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கியுள்ளார் .
5.தோழர் .முனியாண்டி ,TT ,வத்ராப் அவர்கள் மாவட்ட ,மாநில சங்கங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கியுள்ளார் .
6.தோழர் A .அய்யனார் ,TT ,அருப்புக்கோட்டை அவர்கள் மாவட்ட ,மாநில சங்கங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கியுள்ளார் .
7.தோழர் தங்கவேல்,OSP, ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்கள் மாவட்ட ,மாநில சங்கங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கியுள்ளார் .
8. தோழர் பொன்னுச்சாமி ,TT ,ராஜபாளையம்  அவர்கள் மாவட்ட ,மாநில, அனைத்திந்திய சங்கங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கியுள்ளார் .

Monday, June 10, 2019

ராஜபாளையம் தோழர் பொன்னுச்சாமி பாராட்டு விழாவில்

ராஜபாளையம் தோழர் பொன்னுச்சாமி பாராட்டு விழாவில் 
Image may contain: 8 people, people standing and indoor
Image may contain: 5 people, people smiling, people standing
Image may contain: 1 person, standing
Image may contain: 3 people, people standing

மே 31 மற்றும் ஜூன் 1ஆம் தேதிகளில் கோவையில் உற்சாகமாக நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழுக் கூட்டத்தின் முடிவுகள்

சுற்றறிக்கை எண்:134 படிக்க :-Click Here

பணி நிறைவு பாராட்டு விழா

முதன்மை பொது மேலாளர் அலுவலக கிளை மற்றும் விருதுநகர் outdoor கிளைகளின் சார்பாக நடைபெறும் தோழர் M .ரவீந்திரன் ,TT அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா 
இடம் :- சங்க அலுவலகம் 
நாள் : 25/06/2019
நேரம் :- மதியம் 1230 மணி 
                          தலைமை :- தோழியர் .தனலட்சுமி ,மற்றும் சிங்காரவேலு கிளை தலைவர்கள்  
                          வரவேற்புரை :- தோழர்கள் இளமாறன் மற்றும் மாரிமுத்து ,கிளை செயலர்கள் 
வாழ்த்துரை :- தோழர்கள் ரவீந்திரன் ,மாவட்ட செயலர் , ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர்  மற்றும் தோழர் சமுத்திரக்கனி ,மாநில அமைப்பு செயலர் 


8 வது மாவட்ட செயற்குழு

8 வது மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் கணேசன் ,TT ,அருப்புக்கோட்டை பணி நிறைவு பாராட்டு விழா 
****************************************
அன்பார்ந்த தோழர்களே ! வரும் 26/06/2019 அன்று*  *BSNLEU சங்கத்தின் 8 வது மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் R ஜெயக்குமார் தலைமையில் அருப்புக்கோட்டை தொலை பேசி நிலைய வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது .அனைத்து கிளை செயலர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும்  உரிய நேரத்தில் தவறாது  கொண்டு சிறப்பிக்க  வேண்டுகிறோம் .செயற்குழு கூட்டத்தை நமது தமிழ் மாநில செயலர் தோழர்    A .பாபுராதாகிருஷ்ணன் தொடக்கி வைக்க உள்ளார் 
******************************************************
######################################################
ஆய் படு பொருள் :-
1. தோழர் கணேசன் பணி நிறைவு பாராட்டு விழா .
2. 8 வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் 
3. ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் 
4. கிளை மாநாடுகள் 
5. பிசினஸ் ஏரியா இணைப்பு 
5.தலைவர் அனுமதியுடன் இன்ன பிற 
#####################################################
******************************************************

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...