விருதுநகர் GM அலுவலக கிளை தோழர் M .ரவீந்திரன் ,TT அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் 8 வது சரிபார்ப்பு தேர்தல் கூட்டம் செவ்வாய் கிழமை மதிய உணவு இடைவெளியில் தோழர் சிங்காரவேலு மற்றும் தோழியர் தனலட்சுமி தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .அனைவரையும் GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் மற்றும் outdoor கிளை செயலர் தோழர் மாரிமுத்து வரவேற்று உரை நிகழ்த்தினர் .அதன் பின் 30/06/2019 அன்று பணி நிறைவு பெரும் தோழர் ரவீந்திரன் மாவட்ட மற்றும் கிளை சங்கங்களால் பாராட்டை பெற்றார் .அதன் பின் மாவட்ட செயலர் ரவீந்திரன் அவர்கள் இன்றைய BSNL எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் 8 வது சரிபார்ப்பு தேர்தலில் நாம் செய்ய வேண்டிய கடமைகளையும் எடுத்துரைத்தார் . 









No comments:
Post a Comment