8 வது மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று அருப்புக்கோட்டை நகரில் மாவட்ட தலைவர் தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .தோழர் கணேசமூர்த்தி அஞ்சலி உரை நிகழ்த்த அனைவரும் தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர் .அதன் பின் தோழர் ஜெயக்குமார் தலைமை உரை நிகழ்த்தினார் .மாவட்ட செயலர் கீழ் வரும் ஆய்படு பொருளை சமர்ப்பித்தார் .
1.தோழர் கணேசன் பணி நிறைவு பாராட்டு
2.8 வது சரிபார்ப்பு தேர்தல்
3.பிசினெஸ் ஏரியா இணைப்பு
4.ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள்
5.வரவு செலவு அறிக்கை
மேற்குறிய விவாத பொருளின் அடிப்படையில் ஒரு விவாத குறிப்பை மாவட்ட செயலர் சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார் .அதன் பின் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் எழுச்சி மிகு உரை நிகழ்த்தினார் .இன்றைய BSNL நிலைமை ,தற்போது பொறுப்பு ஏற்றுள்ள அரசாங்கத்தின் கொள்கைகள் ,ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் ,அதை தீர்க்க நடக்க உள்ள இயக்கங்கள் ,8 வது சரிபார்ப்பு தேர்தலை எதிர் கொள்ள வேண்டிய அம்ஸங்கள் ஆகியவற்றை விரிவாக பேசினார் .ஒப்பந்த ஊழியர் குறைப்பு என்பதை ஏற்று கொள்ள கூடாது என்றும் அதற்கான முறையான எதிர்ப்பு கடிதத்தை உடனடியாக GM ,அவர்களுக்கு அனுப்ப வேண்டும் என கேட்டு கொண்டார் .மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் விருதுநகர் மாவட்டத்தின் நிலைமைகளை விரிவாக பேசினார் .BSNL ஊழியர் சங்கத்திற்கு எதிராக செயல்படும் அதிகாரி மீது உடனடியாக PGM (F ) அவர்களின் கவனத்திற்கு மாநில சங்கம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் ,அந்த அதிகாரியை எதிர்த்து ஒரு போராட்டத்தை நடத்தவேண்டும் எனவும் வலியுறுத்தினார் .மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த அதிகாரி பற்றி நமது அனைத்திந்திய பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்களும் கேட்டு உள்ளார் .தேவை ஏற்பட்டால் கார்பொரேட் அலுவலகத்தில் டைரக்டர் (HR) அவர்களிடம் இப் பிரச்சனையை கொண்டு செல்வோம் என கூறி இருக்கிறார் . விவாதத்தில் அனைத்து தோழர்களும் பங்கேற்று சிறப்பித்தனர் .
முடிவுகள்
1.அனைத்து கிளைகளும் ஜூலை மாதம் பொது குழு கூட்டங்களை நடத்துவது
2.3 மையங்களில் சிறப்பு கூட்டம் நடத்துவது (விருதுநகர் ,சிவகாசி மற்றும் ராஜபாளையம் )
3.பூத் ஏஜெண்டுகளாக தோழர்கள் சண்முக சுந்தரம் ,மாரிமுத்து ,.
4.செல்லம் ,சண்முகவேலு ,ரவிச்சந்திரன் ,வெங்கடசாமி ,தியாகராஜன் ,பொன்ராஜ் ,கண்ணன் மற்றும் ராஜ்மோகன் ,மோகனசுந்தரம் ,ஜெயச்சந்திரன் ஆகியோர் செயல்படுவர் .
5.ஓட்டு எண்ணிக்கைக்கு தோழர் இளமாறன் ஏஜென்ட் ஆக செயல்படுவார் .
6.கிளை வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்க பட்டு உள்ளனர் .
7.ஒப்பந்த ஊழியர் குறைப்பு திட்டத்திற்கு எதிராகவும் ,பிசினஸ் ஏரியா இணைப்பு விஷயமாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் எனவும் ,ஊழியர் பிரச்சனைகளை கையாளக்கூடிய ஒரு அதிகாரி விருதுநகரில் நியமிக்கபட வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக கடிதம் கொடுப்பது .
8.பணி நிறைவு பெற்ற தோழர் முனியாண்டி அவர்களை மாவட்ட அமைப்பு செயலர் பதவியில் இருந்து விடுவிப்பது என்று மாவட்ட செயற்குழு முடிவெடுத்தது .தோழர் சேதுராம் அவர்களை மாவட்ட அமைப்பு செயலராக ஏகமனதாக தேர்வு செய்தது .
9.மாவட்ட செயற்குழுவிற்கு தனது செலவில் மதிய உணவு வழங்கிய தோழர் கணேசன் அவர்களை மாவட்ட சங்கம் மனதார பாராட்டியது .அவரை பாராட்டி மாவட்ட செயலர் ,மாவட்ட தலைவர் ,மாநில அமைப்பு செயலர் ,தோழர் இளமாறன் தோழர் மதி கண்ணன் ,தோழர் சோலை ஆகியோர் பேசினர் .அவருக்கு நமது தமிழ் மாநில செயலர் பாபு ராதாகிருஷ்ணன் சந்தன மாலை அணிவித்து கவுரவித்தார் .தோழர் மதி கண்ணன் சால்வை அணிவித்து பாராட்டினார் .மாவட்ட சங்கத்தின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது .தோழர் பாஸ்கரன் மாவட்ட பொருளாளர் நன்றி நவின்றார் .
No comments:
Post a Comment