Tuesday, September 27, 2016

மாநில செயற்குழு கூட்டம்

கிளை செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு 
நமது தமிழ் மாநில  சங்கத்தின் செயற்குழு கூட்டம் வரும் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளது .அன்று மாலை 4 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ள அனைத்திந்திய மாநாட்டு வரவேற்பு குழு கூட்டமும் நடைபெற உள்ளது .அகில இந்திய மாநாட்டு நிதி நிலுவை தொகையை வரும் 10 ஆம் தேதிக்குள் மாவட்ட சங்கத்திடம் செலுத்தி விட வேண்டும் என்று அனைத்து கிளை செயலர்களுக்கும் தோழமையுடன் கேட்டு கொள்கிறோம் . .

TNTCWU விருதுநகர் மாவட்ட சங்க சிறப்பு கூட்டம்

TNTCWU விருதுநகர் மாவட்ட சங்க சிறப்பு கூட்டம் அதன் தலைவர் தோழர் இளமாறன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் தொடக்க உரை நிகழ்த்தினார் .அதன் பின் BSNLEU மாவட்ட செயலர் வாழ்த்துரை வழங்கினார் .மாநில தலைவரும் ,அகில இந்திய துணை தலைவரும் ஆன தோழர் முருகையா சிறப்புரை நிகழ்த்தினார் .அதன் பின் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு உரிய விளக்கங்களை அவர் கூறிட மாவட்ட பொருளாளரும்  மாநில  சங்க நிர்வாகியுமான தோழர் வேலுச்சாமி நன்றியுரை கூறினார் .மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்ற  இக் கூட்டத்தில் நமது மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் ,மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் ,அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர்  தோழர் மதிக்கண்ணன் ,விருதுநகர் OUTDOOR கிளை செயலர் தோழர் மாரிமுத்து , மாவட்ட துணை தலைவர் தோழர்  அனவ்ரதம் ,மாவட்ட அமைப்பு செயலர் ராதாகிருஷ்ணன் ,மற்றும் ராஜாராம் மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்  மாவட்டம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர் .ஊதிய நிலுவை பிரச்சனை , EPF ,ESI பிரச்சனைகள் ,ஊதிய மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஆய்வு செய்யப்பட்டன .

TNTCWU ஆர்ப்பாட்டம்.

27 09 2016 அன்று விருதுநகரில கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்  அகில இந்திய துணைத் தலைவரும் , மாநில தலைவருமான தோழர் M .முருகையா சிறப்புரை நிகழ்த்த மாவட்ட துணை தலைவர் தோழர் .முனியசாமி தலைமையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
கோரிக்கைகள் :-
*விடுபட்ட காசுவல் ஊழியர்களையும் ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரப் படுத்து. !
*சம வேலைக்கு சம சம்பளம் உறுதிப்படுத்து !
*உடனடியாக குறைந்த பட்ச சம்பளம் ரூபாய் 18 000 வழங்கிடு !
*ஒப்பந்த தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யாதே !
*வேலை நீக்கம் செய்யப்பட்டதொழிலாளர்களுக்கு மறுபடியும் வேலை கொடு !
*பகுதி நேர ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக மாற்றிடு.!
அனைவருக்கும் கிராஜுட்டி, போனஸ் உறுதி செய்திடு !
*HRA, CCA, TA , போன்ற அலவன்சுகளை வழங்கிடு !
*EPF, ESI, Pension போன்ற சட்டபூர்வ விதிகளை உறுதி செய்திடு ! .
*விடுப்பு, வாராந்திர ஓய்வு, விடுமுறை .ஆகியவற்றை அமுல்படுத்து !

Tuesday, September 20, 2016

உண்ணாவிரத போராட்டம்

           24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தின் ஒரு பகுதியாக விருதுநகரில் இன்று நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமை வகித்தார் . மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் அவர்கள் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து விரிவாக கோரிக்கைகளை விளக்கியும் ,அரசின் கொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து நாம் நடத்துகிற இயக்கங்கள் ,அதன் மூலம் நமது நிறுவனம் காக்கப்படுகின்ற சூழல் , புன்னகையுடன் சேவையை நாடுதழுவிய அளவில் FORUM சார்பாக நடத்தியதன் விளைவு இன்று நமது நிறுவனம் 3800 கோடிக்கும் மேல் operating profit பெற்றுள்ளதை குறிப்பிட்டார் .மத  ரீதியில் மக்களை  பிளவு படுத்தி தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டங்களை பலவீனப்படுத்த நினைக்கும் மத்திய அரசின் போக்கை சுட்டி காட்டினார் .அதன் பின் மாவட்ட துணை செயலர்கள்  தோழர் ஜெயக்குமார் ,மற்றும் தோழர் அஷ்ரப் தீன் ,அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் மதி கண்ணன் ,GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் ,SDOP கிளை செயலர் மாரிமுத்து ,சிவகாசி கிளை செயலர்கள் தோழர்கள் முத்துசாமி மற்றும் கருப்பசாமி ,ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை செயலர் தோழர் சமுத்திரம் ராஜை கிளை செயலர் முத்துராமலிங்கம ,சாத்தூர் கிளை செயலர் தோழர் கலையரசன் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் காதர் ,ராஜமாணிக்கம் ,முனியாண்டி ,தங்கதுரை ,அனவ்ரதம் , I .முருகன் ,ராஜு ,ராஜாராம் மனோகரன் ,வெங்கடசாமி ,கணேசமூர்த்தி ஆகியோரும் ,சேவா (R ) சார்பாக தோழர்கள் பரமேஸ்வரன் ,குருசாமி ஆகியோரும் ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ,மணிலா சங்க நிர்வாகி தோழர் பெருமாள்சாமி ,ஒப்பந்த  ஊழியர் கிளை செயலர் தோழர் பாண்டியராஜன் ஆகியோரும் போராட்டத்தை வாழ்த்தி பேசினர் .உண்ணாவிரத போராட்டத்தை முறையாக நன்றி கூறி மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் முடித்து வைத்தார் .கவிதைகளும் பாட்டுகளும் நமது உண்ணாவிரத போராட்டத்திற்கு  வலிமை ஊட்டியது .சென்னை சொசைட்டியில் இருந்து தோழர் கனகாம்பரம் ,TSO ,சாத்தூர் தோழருக்கு வரவேண்டிய நிலுவை தொகை (surity சிக்கலால் ) கிடைப்பதற்கு ஒரு கடும் முயற்சி எடுத்து அதை பெற்று தந்த நமது மாநில சங்க நிர்வாகி தோழர் முருகையா அவர்களுக்கு தோழர் கனகாம்பரம் உண்ணாவிரத  பந்தலில் நன்றி கூறியது மட்டும் இன்றி நமது அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூபாய் 5000 வழங்கியது குறிப்பிடத்தக்கது . 






































11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...