விருதுநகர் மாவட்டம் முழுவதும் நமது BSNLEU தோழர்கள் 12/09/2016 அன்று நடைபெற்ற ரோடு ஷோக்களில் பங்கேற்றனர் ஒரே நாளில் கிட்டத்தட்ட 1300 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .
GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் ,SDOP,VR கிளை செயலர் தோழர் மாரிமுத்து ,மாவட்ட பொருளர் சந்திரசேகரன் ,முன்னாள் மாவட்ட சங்க நிர்வாகி சந்திரசேகரன் ,GM அலுவலக கிளை பொருளர் தோழர் மாரியப்பா ஆகியோர் பங்கேற்ற கள்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்வில் 50 நியூ வசந்தம் சிம்களும் ,25 ஸ்டுடென்ட் ஸ்பெஷல் சிம்களும் விற்கப்பட்டன . ராஜிவ் நகரில் நடைபெற்ற ரோடு ஷோவில் அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் மதி கண்ணன் மற்றும் தோழர் கணேசன் ஆகியோர் பங்கேற்றதில் 20 சிம்களும் 2 லேண்ட் லைன் இணைப்புகளும் பெறப்பட்டன .காரியாபட்டியில் நடைபெற்ற ரோடு ஷோவில் நமது மாவட்ட சங்க நிர்வாகி கணேசமூர்த்தி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ராசு மற்றும் முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர் .இங்கு 40 நியூ வசந்தம் சிம்களும் 13 ஸ்டுடென்ட் ஸ்பெஷல் சிம்களும் விற்பனை செய்யப்பட்டன .பாலவநத்தம் கிராமத்தில் 120 நியூ வசந்தம் சிம்களும் 9 ஸ்டுடென்ட் ஸ்பெஷல் சிம்களும் விற்கப்பட்டன .இங்கு நமது தோழர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட உதவி செயலர் வெங்கடப்பன் ஆகியோர் பங்கேற்றனர் .சிவகாசியில் 3 இடங்களில் நடைபெற்ற நிகழ்வில் 507 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம் ,முனியாண்டி கிளை செயலர்கள் கருப்பசாமி மற்றும் முத்துசாமி ,தோழர்கள் சுப்பிரமணி ,குருசாமி ,அழகுராஜ் ,பாஸ்கரன் ,செல்லம் ,நாகேந்திரன் மற்றும் DE (mtce ) சிவகாசி அவர்களும் கலந்து கொண்டனர் .
மாவட்ட செயலர் ரவீந்திரன் அழகாபுரியில் நடைபெற்ற ரோடு ஷோவில் SDE (MKTG ) அவர்களுடன் இணைந்து கலந்து கொண்டார் .இங்கு 79 நியூ வசந்தம் சிம்களும் 20 ஸ்டூடெண்ட் ஸ்பெஷல் சிம்களும் விற்கப்பட்டன .எரிச்சநத்தம் பகுதியில் 31 சிம்கள் விற்கப்பட்டன .இங்கு நமது தோழர்கள் தங்கராஜ்,ஜெயராம் மற்றும் கருப்பசாமி ஆகியோர் பங்கேற்றனர் .நத்தம்பட்டியில் 22 சிம்கள் , சத்திரப்பட்டியில் 15, கீழராஜகுலராமன் பகுதியில் 5 வத்ராப்பில் 35,விற்பனை செய்யப்பட்டன .இங்கு நமது தோழர்கள் முனீஸ்வரன் ,I .முருகன் ,அர்ஜுனன் மற்றும் தங்கதுரை ஆகியோர் பங்கேற்றனர் .ராஜபாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் தோழர்கள் முத்துராமலிங்கம் ,ராதாகிருஷ்ணன் ,தியாகராஜன் ,வெள்ளை பிள்ளையார் ,பொன்னுசாமி ,ரவிச்சந்திரன் , அனவரதம் ஆகியோர் பங்கேற்றதில் 140 நியூ வசந்தம் சிம்களும் 22 ஸ்டுடென்ட் ஸ்பெஷல் சிம்களும் விற்பனை செய்யப்பட்டன மற்றும் 7 MNP பெறப்பட்டு உள்ளது .
மீண்டும் நமது பணி வரும் 15 ஆம் தேதி தொடரும்
No comments:
Post a Comment