செப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம் மற்றும் தோழியர் பகவதி அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா
செப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம் மற்றும் தோழியர் பகவதி அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா 31/08/2016 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் மிக சிறப்பாகவும் ,உற்சாகமாகவும் நடைபெற்றது .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக சங்க கொடியை மூத்த தோழர் தங்கவேலு விண்ணதிரும் கோஷங்களுடன் ஏற்றினார் .அஞ்சலி உரையை மாவட்ட உதவி செயலர் தோழர் .தங்கதுரை நிகழ்த்தினார் .கிளை செயலர் தோழர் சமுத்திரம் வரவேற்பு உரை நிகழ்த்தினார் .அதன் பேசிய மாவட்ட செயலர் ரவீந்திரன் , மாநில உதவி செயலர் தோழர் சுப்பிரமணியன் ,மாவட்ட உதவி செயலர்கள் அஷ்ரப் தீன் ,ஜெயக்குமார் ,வெங்கடப்பன் ,மற்றும் கிளை செயலர்கள் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தின் அவசியத்தையும் , அதை வெற்றி அடைய உறுதி கூறியும் பேசினர் .அத்துடன் நமது முன்னணி தோழியரும் ,முன்னாள் மாவட்ட சங்க நிர்வாகியும் ஆன தோழியர் பகவதியின் பணி நிறைவை வாழ்த்தி பேசினர் .மாவட்ட சங்கம் சார்பாக ராஜபாளையம் தோழியர் சித்திரை செல்வி அவர்கள் தோழியர் பகவதிக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார் .மாவட்ட சங்கம் சார்பாக அவர்க்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது .அதன் பின் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு தோழர் சமுத்திரக்கனி தலைமை வகித்தார் .வர்த்தக ரீதியாக மேம்படுத்தப்படவேண்டிய ஆலோசனைகளை அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் கண்ணன் தொடக்கி வைத்து உரை நிகழ்த்தினார் .அதன் பின் மாவட்ட உதவி பொது மேலாளர் திரு .மாரியப்பன் ,துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்குறிய பொருளில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர் .அதன் பின் தோழமை சங்க பிரதிநிதிகள் தோழர்கள் பரமேஸ்வரன் ,கேசவன் ,குருசாமி ஆகியோர் பேசினர் . அதிகாரிகள் சங்க தோழர்கள் செந்தில்குமார் ,SNEA, நாராயணன் ,AIBSNLEA , ராஜபாளையம் கோட்ட பொறியாளர் திருமதி அரங்கநாயகி ஆகியோரும் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர் .மாவட்ட பொருளர் சந்திரசேகரன் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது .
No comments:
Post a Comment