Showing posts with label பேட்டி. Show all posts
Showing posts with label பேட்டி. Show all posts

Friday, November 13, 2015

பொது மேலாளருடன் பேட்டி

இன்று (13-11-2015) மாவட்ட சங்கம் பொது மேலாளர் அவர்களை பேட்டி கண்டது .07-05-2015 அன்று நடைபெற்ற லோக்கல் கவுன்சில் கூட்டத்திற்க்கு பிறகு (6 மாதங்களுக்கு பின்பு ) மாவட்ட சங்கம் பொது மேலாளரை பார்க்க வாய்ப்பு கிடைத்தது .நமது சங்கம் சார்பாக  5 இடங்களில் நடத்திய ரோடு ஷோ மூலம் 598 சிம்கள் ,13 MNP மற்றும் 9 லேன்ட் லைன் இணைப்புகள் பெற்றதை கூறினோம் .டீலர்களை புதிதாக நியமனம் செய்ய மாநில நிர்வாகத்திடம் வலியுறுத்த வேண்டும் என கூறியுள்ளோம் .
கீழ் கண்ட பிரச்சனைகள் பொது மேலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் .
1.சோழபுரம் ,மெட்டுகுண்டு ,சித்துராஜபுரம் ,மம்சாபுரம்  ஆகிய ஊர்களில் பாட்டரி பழுதாகி உள்ளதால் மின் தடை நேரங்களில் லேன்ட் லைன் இணைப்புகள் , அலை பேசி  இணைப்புகள் வேலை செய்வதில்லை .
2.P.ராமசந்திராபுரம் தொலை பேசி நிலையத்தில் பவர் பிளான்ட் பாட்டரி பழுதாகி உள்ளதால் BTS உட்பட பாதிப்பு உள்ளதை சுட்டி காட்டி உள்ளோம் .
3. புதிய தொலை பேசி இணைப்புகள் வழங்க போதுமான ட்ராப்  வயர்  இல்லை என்பதை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் .
4.சிவகாசி OCB தொலை பேசி நிலையத்தில் indoor பகுதிக்கு கூடுதல் அதிகாரி நியமனம் வேண்டும் என நமது கருத்தை கூறியுள்ளோம் .
5. விடுமுறை நாட்களில் பிராட் பேண்ட்  செக்சனில் ஒரு ஊழியராவது பணிக்கு அமர்த்த வேண்டும் என கூறியுள்ளோம் 
6. திருச்சுழி தொலை பேசி நிலையத்தில் புதிய  ஜெனரேட்டர் வந்து 6 மாதங்கள் ஆகியும்  நிர்மாணிக்காமல் உள்ளதை சுட்டி காட்டி உள்ளோம் .
7. காலி இடங்களை  நிரப்புவதில் சரியான விதி முறைகள் கடை பிடிக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறி விட்டோம் .
8. கல்லூரணி  பகுதியில் 4 மாத காலமாக 15 இணைப்புகள் பழுதாகி உள்ளதை பழுது நீக்காமல் உள்ளதை பொது மேலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் .
மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தடையான காரணங்களை தெளிவாக கூறி உள்ளோம் . 6 மாதங்களுக்கு மேலாக லோக்கல் கவுன்சில் கூட்டம் நடைபெறாமல் உள்ளதை சுட்டி காட்டி விரைவில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் .
இன்றைய பேட்டியில் மாவட்ட செயலருடன் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள்  சமுத்திரகனி ,ஜெயபாண்டியன் ,கண்ணன் ,அஷ்ரப் தீன் ,முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Saturday, October 25, 2014

CMD மற்றும் DOT செயலருடன் பேட்டி

         24-10-2014 அன்று தோழர் நம்பூதிரி  அவர்கள் நமது நிறுவன CMD மற்றும் DOT செயலர் அவர்களை சந்தித்து BSNL  நிறுவன புத்தாக்கம் பற்றி பேசியுள்ளார்.பேட்டியின் போது கருவிகள்  வாங்குவதற்கும், விரிவாக்கத்திற்கும் மத்திய  அரசு நமது BSNL நிறுவனத்திற்கு உடனடியாக நிதி உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்  45 மில்லியன் மொபைல் டெண்டரை ரத்து செய்ததால் தான் BSNL வளர்ச்சி குறைந்தற்கு காரணம் என்பதையும் , ஸ்பெக்ட்ரம் சரண்டர் செய்த கட்டணமான ரூபாய் 6000 கோடியையும் , USO fund ரூபாய் 1250 கோடியையும் அரசாங்கம் BSNL நிறுவனத்திற்கு  தராமல் உள்ளதையும் தோழர் நம்பூதிரி அவர்கள் DOT செயலர் அவர்களிடம் சுட்டி காட்டி உள்ளார் . BSNL புத்தாக்கதிற்கு அரசு தேவையான உதவிகளை   செய்திடும் என  DOT செயலர் பேட்டியின் போது கூறியுள்ளார் .சிறந்த சேவையையும் , நல்ல லாபத்தையும் ஈட்டிய கேரள மாநில BSNL ஊழியர்களை பாராட்டிய DOT செயலர் சேவையில் ஏற்படும் குறைபாடுகளை பற்றிய புகார்களை கூறி சேவையை    மேம்படுத்தவேண்டிய அவசியத்தை தனக்கு டெல்லி மற்றும் UP இல் ஏற்பட்ட அனுபவங்களை கூறினார் .FORUM சார்பாக சேவையை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி தோழர் நம்பூதிரி அவர்கள் விரிவாக விளக்கினார் . பென்சனருக்கு 78.2% IDA இணைப்பு வழங்கப்படாமல் காலதாமதம் ஆவதையும் DOT செயலரிடம் தோழர் நம்பூதிரி சுட்டி காட்டி உடனடியாக இப் பிரச்சனையை தீர்க்க கோரினார் .M/s Deloittee Committee பரிந்துரைகளை அமல்படுத்தும் முன் சங்கங்களிடம் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என நமது CMD அவர்களிடம் வலியுறுத்தி மகாராஷ்டிர மாநிலத்தில் இது விசயமாக எடுக்கப்பட்ட முடிவை நிறுத்தி வைக்கவும் அவர் கேட்டு கொண்டார் . தொழிலாளர் நல சட்டங்கள்  ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்கள்  மத்தியில் அமல்படுத்தப்படவில்லை என்பதையும் CMD அவர்களிடம் தோழர் நம்பூதிரி அவர்கள்  சுட்டி காட்டினார் . ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட BSNL ஊழியர்களுக்கு தேவையான உதவிகள்  செய்திடவும் அவர் வலியுறுத்தி உள்ளார் .

Monday, June 23, 2014

பேட்டி

  • விடுபட்ட அனைத்து  ஊழியர்களுக்கும் ப்ரீ சிம் வழங்க நிர்வாக கமிட்டி ஒப்புதல் கொடுத்த பின்பும் உத்தரவு வெளியாகாமல் உள்ள பிரச்னை சரிசெய்யப்பட வேண்டும்.
  • டெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வில் 10 ஆம் வகுப்பு தகுதியை தளர்த்தவேண்டும்.
  • Welfare போர்டு மற்றும் ஸ்போர்ட்ஸ் கமிட்டி கூடாமல் உள்ள பிரச்னை சரிசெய்யப்பட வேண்டும்.
  • JTO போட்டி தேர்வில் எக்ஸ் சர்வீஸ் மேன் சேவை காலத்தை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என  அலகாபாத் நிர்வாக நீதி மன்றம் தந்த தீர்ப்பை உடனடியாக அமல் படுத்த வேண்டும்.
போன்ற பிரச்சனைகளை நமது பொது செயலர் தோழர் P அபிமன்யு அவர்கள் இன்று (23-06-2014) நமது உதவி பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்ரபோர்ட்டி அவர்களுடன் பொது மேலாளர் (ESTT) R.K.கோயல் மற்றும் பொது மேலாளர் (Admn) A.K.சிங்ஹால்  அவர்களை சந்தித்து விவாதித்தார். 

Thursday, October 24, 2013

பேட்டி

          23-1-2013 அன்று மாவட்ட சங்கம் மாவட்ட பொது மேலாளரை பேட்டி கண்டது. கீழ் கண்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
          1. சிவகாசி பகுதியில் மழையால் 300 க்கும் மேற்பட்ட WiMax இணைப்புகள் பழுதாகி உள்ளன என்பதையும், கடந்த 10 நாட்களாக பழுது சரியாகாமல் உள்ளதை சுட்டி காட்டி விரைவில் சரி செய்ய கோரியுள்ளோம்.
          2.ஒப்பந்த ஊழியர்களுக்கு தொழிலாளர் நல சட்டத்தின்  அடிப்படையில் போனஸ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.
          3. நத்தம்பட்டி தொலைபேசி நிலையத்திற்கு ஒரு டெலிகாம் மெக்கானிக் உடனடியாக நியமிக்க வலியுறுத்தி உள்ளோம்.
          4.கார்போரேட்  அலுவலக உத்தரவுகளை அமல்படுத்துவதில் நமது மாவட்டத்தில் விதி மீறல்கள் இருப்பதை சுட்டி காட்டி O B C Union  கூட்டம்  நடத்த 05-09-2013 அன்று மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை  நாம் மாவட்ட பொது மேலாளரிடம் சுட்டிக் காட்டிய போது, பொது மேலாளர் அவர்கள் எதிர  காலத்தில் இது போன்ற அனுமதி வழங்க கூடாது  என அதிகாரிகளுக்கு வழி காட்டியுள்ளார் .
          அருப்புகோட்டை மாறுதல் விசயத்தில் மாறுதல் கொள்கைக்கு மாறுபட்ட எந்த முடிவையும் நமது சங்கம் ஏற்று கொள்ளாது எனத் தெளிவாக கூறிவிட்டோம்.
"ஜாதிகள் இல்லையடி பாப்பா " ----மஹா கவி பாரதி

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...