இன்று (13-11-2015) மாவட்ட சங்கம் பொது மேலாளர் அவர்களை பேட்டி கண்டது .07-05-2015 அன்று நடைபெற்ற லோக்கல் கவுன்சில் கூட்டத்திற்க்கு பிறகு (6 மாதங்களுக்கு பின்பு ) மாவட்ட சங்கம் பொது மேலாளரை பார்க்க வாய்ப்பு கிடைத்தது .நமது சங்கம் சார்பாக 5 இடங்களில் நடத்திய ரோடு ஷோ மூலம் 598 சிம்கள் ,13 MNP மற்றும் 9 லேன்ட் லைன் இணைப்புகள் பெற்றதை கூறினோம் .டீலர்களை புதிதாக நியமனம் செய்ய மாநில நிர்வாகத்திடம் வலியுறுத்த வேண்டும் என கூறியுள்ளோம் .
கீழ் கண்ட பிரச்சனைகள் பொது மேலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் .
1.சோழபுரம் ,மெட்டுகுண்டு ,சித்துராஜபுரம் ,மம்சாபுரம் ஆகிய ஊர்களில் பாட்டரி பழுதாகி உள்ளதால் மின் தடை நேரங்களில் லேன்ட் லைன் இணைப்புகள் , அலை பேசி இணைப்புகள் வேலை செய்வதில்லை .
2.P.ராமசந்திராபுரம் தொலை பேசி நிலையத்தில் பவர் பிளான்ட் பாட்டரி பழுதாகி உள்ளதால் BTS உட்பட பாதிப்பு உள்ளதை சுட்டி காட்டி உள்ளோம் .
3. புதிய தொலை பேசி இணைப்புகள் வழங்க போதுமான ட்ராப் வயர் இல்லை என்பதை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் .
4.சிவகாசி OCB தொலை பேசி நிலையத்தில் indoor பகுதிக்கு கூடுதல் அதிகாரி நியமனம் வேண்டும் என நமது கருத்தை கூறியுள்ளோம் .
5. விடுமுறை நாட்களில் பிராட் பேண்ட் செக்சனில் ஒரு ஊழியராவது பணிக்கு அமர்த்த வேண்டும் என கூறியுள்ளோம்
6. திருச்சுழி தொலை பேசி நிலையத்தில் புதிய ஜெனரேட்டர் வந்து 6 மாதங்கள் ஆகியும் நிர்மாணிக்காமல் உள்ளதை சுட்டி காட்டி உள்ளோம் .
7. காலி இடங்களை நிரப்புவதில் சரியான விதி முறைகள் கடை பிடிக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறி விட்டோம் .
8. கல்லூரணி பகுதியில் 4 மாத காலமாக 15 இணைப்புகள் பழுதாகி உள்ளதை பழுது நீக்காமல் உள்ளதை பொது மேலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம் .
மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தடையான காரணங்களை தெளிவாக கூறி உள்ளோம் . 6 மாதங்களுக்கு மேலாக லோக்கல் கவுன்சில் கூட்டம் நடைபெறாமல் உள்ளதை சுட்டி காட்டி விரைவில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் .
இன்றைய பேட்டியில் மாவட்ட செயலருடன் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சமுத்திரகனி ,ஜெயபாண்டியன் ,கண்ணன் ,அஷ்ரப் தீன் ,முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment