Thursday, November 26, 2015

7 வது மாவட்ட செயற்குழு கூட்டம்

BSNLEU சங்கத்தின் 7 வது மாவட்ட  செயற்குழு கூட்டம் 26/11/2015 அன்று சாத்தூரில்  மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் இளைய தோழர் ராதாகிருஷ்ணன் அஞ்சலி உரை  நிகழ்த்த தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார் .மாவட்ட செயலர் சமர்ப்பித்த ஆய் படு பொருள் மீது சிறப்பான விவாதம் நடைபெற்றது . கடந்த மே மாதம் நடைபெற்ற லோக்கல் கவுன்சில் கூட்டத்திற்க்கு பின் இது வரை அக் கூட்டம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் இல்லை என்பதை நமது மாநில சங்கத்தின் மூலமாக மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்றும் ,மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கூடிய லோக்கல் கவுன்சில் கூட்டத்தை உடனடியாக நடத்த கோரியும் இது விசயமாக கார்போரேட் அலுவலக் உத்தரவை மதியாத மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து   ஒரு பெரும் திரள் முறையீடு போராட்டத்தை மாவட்ட சங்கம் டிசம்பர் மாதம் நடத்தும் .அதற்கான முறையான கடிதம் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்பிக்கப்படும் . பிரச்சனைகள் பால் ஒரு அலட்சிய போக்கை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்வதை மாவட்ட சங்கம் அனுமதிக்காது .மாவட்ட மாநாடு நன்கொடையை பொறுத்தவரை விருதுநகர் கிளைகள் இதுவரை 33,000/- ரூபாயும் , ராஜபாளையம் கிளை 21,000 ரூபாயும் ,ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை ரூபாய் 20,000/,  அருப்புகோட்டை கிளை ரூபாய் 24,000 மும் வழங்கியுள்ளன .சிவகாசி கிளைகள் இதுவரை 60,000/- வசூல் செய்து உள்ளன .அனைத்து  கிளைகளும் விரைந்து இலக்கை முடிக்க செயற்குழுவில் ஒப்புதல் கொடுத்துள்ளது மிகவும் வரவேற்கதக்க நிகழ்வாகும் .ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளுக்கு உரிய வழிகாட்டுதல் இச் செயற்குழுவில் எடுக்கப்பட்டது .கடலூர் வெள்ள நிவாரண நிதியை அனைத்து கிளைகளும்  வழங்கி விட்டன .செயற்குழுவின் இறுதி நிகழ்ச்சியாக மூத்த தோழர் கருப்பசாமி ,CTM அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது .தோழரின் அலுவலக பணி  மற்றும் அவரது சங்க பற்று அனைவராலும்  பாராட்ட பட்டது . செப்டம்பர் 2 அகில இந்திய வேலை நிறுத்தம் உட்பட அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று முத்திரை பதித்தவர் தோழர் கருப்பசாமி .அன்னார்க்கு மாவட்ட சங்கம் உரிய முறையில் கௌரவித்தது. தோழர் கருப்பசாமி அவர்கள் அற்புதமாக ஏற்புரை நிகழ்த்தினார் . தோழர் கலையரசன் நன்றியுரை  நிகழ்த்த கூட்டம் இனிதே நிறைவு பெற்றது . 
                         விருதுநகர் கிளை சங்கம் நிதியளிப்பு 
 ராஜபாளையம் கிளையின் முதல் தவணை ரூபாய் 21,000/-



No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...