நம்பிக்கை ஊட்டிய மாநாடு
தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட 6 வது மாவட்ட மாநாடு இன்று மாவட்ட சங்க அலுவலக வளாகத்தில் தோழர் .ஜெயக்குமார் மாவட்ட உதவி தலைவர் தலைமையில் சீரும் சிறப்புமாய் நடைபெற்றது .மூத்த தோழியர் மாரியம்மாள் ஒப்பந்த ஊழியர் சங்க கொடி ஏற்றி வைக்க தோழர் இளமாறனின் எழுச்சி மிகு கோஷங்களுடன் மாநாடு தொடங்கியது .தோழர் பெத்தணன் அவர்கள் அஞ்சலி தீர்மானம் வாசிக்க அனைவரும் தியாகிகளுக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தினர் .மாவட்ட மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் முனியசாமி முறையாக தொடக்கி வைத்தார் .அவர் சமர்ப்பித்த ஆண்டறிக்கை மற்றும் பொருளாளர் தோழர் மாரிமுத்து சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கை ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது .மாநில செயலர் தோழர் வினோத்குமார் , அனைத்திந்திய உதவி தலைவர் தோழர் முருகையா ,அனைத்திந்திய உதவி செயலர் தோழர் பழனிசாமி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர் .மாநாட்டை வாழ்த்தி BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி ,மாவட்ட உதவி தலைவர் தோழர் கண்ணன் , ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ஆகியோர் பேசினர் .விவாதத்தில் அனைத்து கிளை செயலர்களும் பங்கேற்றனர் .50 தோழர்களுக்கு ESI கார்டு வழங்கப்பட்டது .புதிய மாவட்ட சங்க நிர்வாகிகளாக தோழர்கள் இளமாறன் ,ராமசந்திரன் ,வேல்சாமி ஆகியோர் முறையே தலைவர் செயலர் ,பொருளாளர் ஆக ஏகமனதாக் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .தோழர் இளமாறன் நன்றியுரை கூற மாநாடு இனிதே நிறைவுற்றது .


















No comments:
Post a Comment