ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாவட்ட தலைமை அலுவலகங்களில் மாவட்ட பொது மேலாளர் அவர்களிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சியும் ,பெரும் திரள் ஆர்ப்பட்டமும் இன்று மாலை GM அலுவலகத்தில் நடைபெற்றது .இன் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தோழர் இளமாறன் தலைமை வகித்தார் .BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,TNTCWU மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .மாவட்ட உதவி தலைவர் தோழர் K .R .கிருஷ்ணகுமார் போராட்டத்தை வாழ்த்தி பேசினார் .போராட்டத்தில் 15 பெண் தோழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .





















No comments:
Post a Comment