Showing posts with label மத்திய சங்க செய்திகள். Show all posts
Showing posts with label மத்திய சங்க செய்திகள். Show all posts

Monday, October 26, 2015

மத்திய சங்க செய்திகள்

மத்திய சங்க செய்திகள் 

1. மாறுதல் கொள்கையில் (Transfer Policy ) கிராமப்புற பகுதியில் சேவைக்கு 3 ஆண்டுகள் Tenure என நிர்ணயம் .

2.அனுமதிக்கப்பட்ட விடுமுறைக்கு மேலாக விடுப்பு எடுத்தால் அது Tenure காலத்தில் கழிக்கப்படும் .
இந்த மாற்றத்திற்கான நமது கருத்துக்களை மத்திய சங்கம் கேட்டுள்ளது .
3. மார்க்கெட்டிங் பணியை தீவிர படுத்த மத்திய சங்கம் கேட்டு கொண்டு உள்ளது .செப்டம்பர் மாதம் 1 லட்சம் சந்தாதாரர்களை MNP மூலமாக நாம் பெற்றுள்ளோம் என்பது புதிய சாதனை .
4. JTO பயிற்சிக்கு சென்றுள்ள TTA களுக்கு TA முன்பணம் உடனடியாக வழங்க வேண்டும் என நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்கள் GM (T&BFCI), அவர்களை சந்தித்து பேசியுள்ளார் . உரிய நிதி ஒதுக்கீடு தமிழ் மாநிலத்திற்கு அனுப்ப GM (T&BFCI) அவர்கள் உறுதி அளித்துள்ளார் .

Saturday, December 6, 2014

மத்திய சங்க செய்திகள்

        05-12-2014 அன்று நடைபெற்ற போரம் கூட்டத்தில் நமது பி எஸ் என் எல் நிறுவன புத்தாக்கத்திற்கு ஆதரவாக பொது மக்களிடம் ஆதரவு கோரி 1 கோடி கையெழுத்து வாங்கும் இயக்கத்தை வரும் 11-12-2014 அன்று நடைபெற உள்ள கோரிக்கை தினம் மற்றும் ஆர்பாட்டம் அன்று தொடங்கி 25-02-2014 அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி அன்று மாண்புமிகு பிரதம மந்திரி அவர்களிடம் சமர்பிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது அதே போல் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு  17-03-2015 தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது .காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வதற்கு அனைத்து மாநிலங்களிலும் பெரும் அளவில் ஊழியர்களை திரட்டி கருத்தரங்கம் நடத்தபடவேண்டும் என போரம் முடிவு செய்துள்ளது
கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியில் நமது BSNLEU சங்கம் சார்பாக தோழர்கள் அபிமன்யு ,பொது செயலர் ,தோழர் பல்பீர் சிங், தலைவர் ,தோழர் அனிமேஷ் மித்ரா,துணை தலைவர் ஆகியோர் இடம் பெறுவர்.
கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டி கூட்டம் வரும் 09-12-2014 அன்று நடைபெறும்.
PLI கமிட்டி கூட்டம் 10-12-2014 அன்று நடைபெற உள்ளது.


Monday, July 7, 2014

மத்திய சங்க செய்திகள்,

               கேடர் பெயர் மாற்றத்திற்கான கூட்டு குழு கூட்டம் வரும் 23-07-2014 அன்று காலை நடைபெற உள்ளது . அக் கூட்டத்தில் நமது சங்கம் சார்பாக நமது பொது செயலர் தோழர் P  அபிமன்யு, நமது தலைவர் தோழர் V A N நம்பூதிரி மற்றும் நமது துணை பொது செயலர் அனிமேஷ்  சந்திர மித்ரா ஆகியோர் பங்கேற்க உள்ளனர் .அன்று மாலை scheme of Bonus/Productivity Linked Incentive based on PMS பற்றி விவாதிக்க அதற்கான கூட்டு குழு கூட்டம் நடைபெற உள்ளது . அதில் நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு மற்றும் NFTE சங்க தலைவர் தோழர் இஸ்லாம் அஹ்மத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்

Tuesday, July 1, 2014

Option to the Non-Executives for pay fixation on promotion, on the date of next increment, which fell after 01-10-2000 - Corporate Office issued letter to stop recovery.

         01-10-2000க்கு பின் ஆண்டு ஊதிய உயர்வு தேதி வருபவர்களுக்கு பதவி உயர்வு பெற்றவர்கள் விருப்பம் தெரிவிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை DOT ஒப்புதலுக்கு சென்றுள்ளது . ஒப்புதல் வரும் வரை பிடித்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது .உத்தரவை படிக்க :-Click Here

Sunday, June 29, 2014

பேச்சுவார்த்தையின் அம்சங்கள்

  27-06-2014 அன்று இயக்குனர் (மனிதவளம்) அவர்களுடன் கூட்டு நடவடிக்கை குழு நடத்திய பேச்சுவார்த்தையின் அம்சங்கள் :-

  • 1.ஊதிய தேக்கம் :- 
  • RM ஊழியர்களுக்கு 78.2 IDA இணைப்பால் ஏற்பட்ட ஊதிய தேக்கத்தை களைய ஏற்கனவே ஊழியர் தரப்பு கூறிய  ஆலோசனைகளின் படி தீர்க்க JAC நிர்வாகத்தை வலியுறுத்தியது .இயக்குனர் (மனிதவளம் ) அவர்கள் இப் பிரச்சனையை நிர்வாகம் புதிய கோணத்தில் தீர்க்க முயற்சி செய்யும் என உறுதி கூறினார்.

  • 2. ஊதிய இழப்பு :- 
  • 01-01-2007  க்கு பின் பணிக்கு வந்த ஊழியர்களின் ஊதிய குறைப்பை ஈடு செய்ய ஒரு  இன்ரிமென்ட் வழங்குவது என்ற  நிர்வாகத்தின் முடிவை JAC  ஏற்று கொள்ள மறுத்துவிட்டது .மேலும் இப் பிரச்சனையில் மற்ற பொது துறை நிறுவனங்கள் வழங்கியது போல் 01-01-2007 முதல் 07-05-2010 வரை பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு 30%  ஊதிய நிர்ணயம் செய்ய JAC வலியுறுத்தி உள்ளது . இது விசயமாக நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கையை JAC சிறிது காலம் பொறுதிருந்து மேல் நடவடிக்கை எடுக்கும்.

  • 3.PLI :- 
  • ஒரு நீண்ட நெடிய விவாததிற்கு பின் PLI கணக்கிட தனி நபர் உற்பத்தி திறனை மதிப்பீட்டில் கொள்ளாமல் தேசிய அளவில் மதிப்பீடு செய்ய இரண்டு மாத கால  அவகாசத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் .இவ் விஷயம் 23-07-2014 அன்று நடைபெற உள்ள PLI  கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

  • 4.NEPP :-
  • 01-10-2000 க்கு பிறகும் , புதிய பதவி   உயர்வு கொள்கை அமலாக்கத்திற்கு முன்பும் post based பதவி உயர்வு பெற்றதை முதல் பதவி உயர்வாக கொள்ள  கூடாது  என்ற  JAC கூறியதை  பரிசிலனை செய்ய  நிர்வாகம் ஒத்து கொண்டது .
  • 7100 சம்பளத்தில் இருந்து 6500 சம்பளத்திற்கு இறக்கம் பெற்ற SR.TOA தோழர்கள்அந்தப்பதவி உயர்வை மறுதலித்து அடுத்த பதவி உயர்வை முதற்கட்டப்பதவிஉயர்வாகப்பெறலாம். இது TTA/DRIVER மற்றும் LDC/TOA மாறுதல்செய்த தோழர்களுக்கும் பொருந்தும்.

  • 5.பரிவு அடிப்படையில் ஆன பணி நியமனம் :
  • நிர்வாகம்  இப் பிரச்னையில் தங்கள் கரங்கள் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் கட்டப்பட்டு உள்ளன என்பதால் விதிகளை தளர்த்தி பணி நியமனம் செய்ய முடியவில்லை என்று மீண்டும் இதே பதிலை கூறியுள்ளது .கூடுதல் மதிப்பெண் பெற்றவர்களை விட குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பணி நியமனம் பெற்றதை JAC நிர்வாகத்திடம் சுட்டி காட்டியுள்ளது . இக் குறைபாட்டை களைய வெயிட்டேஜ்   பாயிண்ட் கணக்கிடும் முறையில்  விரைவில் மாற்றம் செய்யப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது .

  • 6.LTC (LTC விடுப்பை காசாக்குவது)  மற்றும் மருத்துவப்படிகளை திரும்ப தருதல் :-
  • நிறுவனத்தின் நிதி நிலைமை இன்னும் சரியாகவில்லை என்பதை நிர்வாகம் சுட்டி காட்டி இக் கோரிக்கையை ஏற்று கொள்ள மறுத்து விட்டது.

  • 7. E 1 சம்பள விகிதம் அமலாக்கம் :-
  • இப்  பிரச்னை தற்போது BSNL போர்டு முன் உள்ளதாகவும் அடுத்து நடைபெற உள்ள போர்டு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் அமலாக்கப்படும் என நிர்வாகம் உறுதி கூறி உள்ளது .

  • 8.கேடர் பெயர் மாற்றம் :-
  • 23-07-2014 அன்று இதற்கென அமைக்கப்பட்ட கூட்டு கமிட்டி கூடவுள்ளது .கூடிய விரைவில் கேடர் பெயர் மாற்றம் அமலாக்கப்படும் .

  • 9. Regular Promotion of the officiating JTOs:-
  • இப் பிரச்னை தற்போது BSNL போர்டு முன் உள்ளதாகவும் அடுத்து நடைபெற உள்ள போர்டு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு JTO ஆளெடுப்பு விதிகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு இப் பிரச்னை தீர்க்கப்படும் .

  • 10. SC /ST ஊழியர்களுக்கு தகுதி மதிப்பெண் தளர்த்துவது :-
  • இது விசயமாக் DoP &T உத்தரவுகள் அமலாகுவது இல்லை என்பதை JAC சுட்டி காட்டி நிர்வாகத்திடம் கடுமையாக கூறியது .DIR (HR ) இது விசயமாக  தேவையானதை செய்வதாக உறுதி கூறியுள்ளார் .

  • 11.30% Superannuation Benefits to the Directly Appointed Employees:-
  • நிர்வாகம் இக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.
  •   
  • 12. Review of JTO and JAO results :-
  • JAO தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க நிர்வாகம் மீண்டும் மறுத்து விட்டது . JTO கேள்வி தாளில் உள்ள தவறுகளை களைய சென்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி அனைத்து பொது மேலாளர்களுக்கு கடிதம்  அனுப்பாமல் உள்ளதை JAC சுட்டி காட்டியதை நிர்வாகம் உடனடியாக கடிதம் அனுப்ப ஒத்து கொண்டது .

  • 13.புதிய ஆளெடுப்பு :-
  • இந்த  பிரச்னை விசயமாக ஒரு ஆலோசனை நிறுவனத்திடம் கருத்து கேட்கப்படும் .

  • 14. விடுபட்ட தற்காலிக ஊழியர் நிரந்தரம் :-நிர்வாகம் இக் கோரிக்கையை உச்ச நீதி மன்ற உத்தரவை கூறி  ஏற்க மறுத்து விட்டது .

  • 15. ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் EPF/ESI பிரச்னை :-
  • பல மாநிலங்களில் கார்பரேட்  அலுவலக உத்தரவுகள் இது விசயமாக அமலாவது இல்லை என்பதை JAC சுட்டி காட்டியது .DIR (HR ) இப் பிரச்னை விசயமாக மாநில நிர்வாகங்களிடம் விளக்கம்  கேட்டு கடிதம் எழுதுவதாக உறுதி அளித்தார் .

  • 16. Permitting the Non-Executives to appear Management Trainee Exam:-
  • 23-04-2014 அன்று நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவின்படி முதல் பரிட்சைக்கு பின் Management Trainee ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் செய்ய பரிசீலிக்கப்  படும் .    

  • 17. Promotion based on personal up gradation of the officials who had completed Telecom Mechanic Training.:-
  • நிர்வாகம் இக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. 

  • 18. Revision of the wages of the TSMs based on IDA payscales. 
  • நிர்வாகம் இக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது .ஆனால் CDA ஊதிய விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்வதிலும் சரியான நடை முறை இல்லாததை JAC சுட்டி காட்டியதை நிர்வாகம் கவனத்தில் எடுத்து கொள்ளும் என உறுதி கூறியுள்ளது .

  • 19. Filling up of SC/ST backlog vacancies:-
  • இது  விசயத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க நிர்வாகம் ஒத்து  கொண்டுள்ளது .

  • 20. முதல் சம்பள மாற்றத்தில் ஏற்பட்ட அனாமலி :-
  • இப் பிரச்னை DOT ஒப்புதலுக்கு சென்றுள்ளது .

  • 21.பணியில் உள்ள ஊழியர்களுக்கு 78.2% IDA இணைப்பால் கிடைக்க வேண்டிய  நிலுவை தொகை :
  • இப் பிரச்னை விசயமாக DOT க்கு நமது கார்பரேட்  அலுவலகம் DO கடிதத்தை DOT க்கு அனுப்பி உள்ளது .மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் DOT க்கு நிர்வாகத்தால் அனுப்பப்படும் .

  • 22. விடுபட்ட அனைவர்க்கும் ப்ரீ சிம் :-
  • BSNL நிர்வாக கமிட்டியில் இது ஒப்புதல் பெறப்பட்டு விட்டது .இன்னும் ஓரிரு தினங்களில் உத்தரவு வெளியிடப்பட்டு விடும் என நிர்வாகம்  கூறியுள்ளது .

  • 23. அலவன்சுகளை உயர்த்துவது :-
  • நிறுவனத்தின் நிதி நிலைமை இன்னும் சரியாகவில்லை என்பதை நிர்வாகம் சுட்டி காட்டி இக் கோரிக்கையை ஏற்று கொள்ள மறுத்து விட்டது.

  • 24.78.2% IDA இணைப்பு அடிப்படையில் பென்சனை உயர்த்துவது :-
  • இப் பிரச்சனை DOT யிடம் நிலுவையில் உள்ளது .

  • 25. JTO /JAO/TTA/TM தேர்வுகளில் பங்கெடுக்க தகுதியை தளர்த்துவது 
  • கார்பரேட்  நிர்வாகம் இது விசயமாக ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து கொண்டு உள்ளது என தெரிவித்து உள்ளது .

  • 26. Issuing of presidential orders to the employees whose training started during DoT period:-
  • இப் பிரச்னை ஏற்கனவே  DOT யின் பரிசீலனைக்கு அனுப்பபட்டுவிட்டது .மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் DOT க்கு நிர்வாகத்தால் அனுப்பப்படும் .

  • 27.கால் சென்டர் பணிகளை நமது ஊழிய்ரகளிடம் வழங்குவது :-இவ் விசயத்தை பரிசீலிக்க நிர்வாகம் ஒத்து கொண்டு உள்ளது .

  • 28.Option to the Non-Executives, for fixation of pay on promotion, on the date of next increment which fell after 01-10-2000.
  • இப் பிரச்னை ஏற்கனவே  DOT யின் பரிசீலனைக்கு அனுப்பபட்டுவிட்டது. இது விசயமாக சம்பள பிடித்தம் செய்வதை நிறுத்த உத்தரவு  வெளியிட வேண்டும் என JAC  வலியுறுத்தியது . ED(Finance) விடுமுறையில் இருப்பதால் உத்தரவு வெளிய காலதாமதம் என்று நிர்வாகம் கூறியுள்ளது .

  • 29. டெலிகாம் தொழிற்சாலை புத்தாக்கம் :-
  • இது விசயமாக தேசிய கவுன்சிலில் கொடுக்கப்பட்ட திட்டங்கள் இதுவரை  பரிசீ லிக்கப்படவில்லை என்பதை JAC சுட்டி காட்டியது .கொல்கத்தா டெலிகாம் பாக்டரியில்  கிளிப்  தொலைபேசிகள் உற்பத்தியில்  காலதாமதம் ஆவது  சுட்டி காட்டப்பட்டது . இப் பிரச்சனை  ED(NB) அவர்களுடன் மேலும் விவாதிக்கப்படும் .

  • 30. Revision of the payscales of the cadres of Sr.TOA, Telecom Mechanic, Driver, etc :-
  • இவ் விசயமாக விவாதிக்க கமிட்டிகள் உருவாக்கப்பட்டு இப் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க JAC கேட்டு கொண்டது. நிர்வாகம் இதற்கு ஒத்து கொண்டது .

Saturday, May 24, 2014

மத்திய சங்க செய்திகள்

           நமது துணை பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா 23-05-2014 அன்று பொது மேலாளர் (ESTT )திரு R .K .கோயல் அவர்களை சந்தித்து பேசினார் .அப்போது திரு கோயல் அவர்கள் TTA மற்றும் JTO ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் செய்வதற்கு BSNL நிர்வாக கமிட்டி ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் , ஜூன் முதல் வாரத்தில் கூடவுள்ள   BSNL போர்டு மீட்டிங்கில் அது ஒப்புதல் பெறப்படும் என கூறியுள்ளார் .இந்த முடிவால் officiating JTOs அனைவரும் ரெகுலர் ஆகுவதற்கும் , JTO போட்டி தேர்வில் பங்கேற்க சேவை காலம் 7 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறையும் வாய்ப்பும் உள்ளது .
          JTO போட்டி தேர்வில் இராணுவ சேவை காலத்தை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என நமது BSNLEU சங்கம் நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது .தற்போது    மாண்புமிகு அலகாபாத்  நிர்வாக நீதி மன்றம் 20-05-2014 அன்று அளித்த தீர்ப்பின் படி குரூப் "C " கேடரில் பணியாற்றிய இராணுவ சேவை காலத்தை கணக்கில் எடுத்து கொண்டு 7 வருட சேவை இருப்பவர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவு வெளியிட்டு விட்டது .இந்த தீர்ப்பின் அடிப்படையில் போட்டி தேர்வின் முடிவில்  எக்ஸ் சர்வீஸ் மேன்கள் உரிமைகள் பாதுகாக்க நமது சங்கம் உரிய    நடவடிக்கை எடுக்கும் .

Thursday, April 17, 2014

மத்திய சங்க செய்திகள்

   தோழர் P அபிமன்யூ, GS மற்றும் தோழர் . சைபல் சென்குப்தா, ஏ.ஜி. எஸ், ஆகியோர் நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை திரு ஆர்.கே. கோயல், பொது மேலாளர் (Estt.) அவர்களை சந்தித்து விவாதித்தனர் . குறிப்பாக NEPP மற்றும் E1 சம்பள விகிதம் அமல்படுத்துவதில் உள்ள தடைகளை அகற்றுதல். டெலிகாம் மெக்கானிக் LDCE, தேர்வில் 10 ம் வகுப்பு தேர்வு பெறாதவர்களுக்கு அனுமதி அளிப்பதில் ஒரு முறை தளர்வை கொடுப்பது ,NEPP கீழ் பதவி உயர்வு பெற்று ஊதிய தேக்கம் அடைந்தவர்களுக்கு 3% கூடுதல் சம்பள உயர்வு வழங்குவது, கிரேடு IV வழங்கப்பட்டவர்களுக்கு கூடுதல் சம்பள உயர்வை திரும்ப பெற்ற கார்போரட் நிறுவன அலுவலக உத்தரவை ரத்துசெய்வது, ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு உதவித்தொகை ஆகியவை விவாதிக்கப்பட்டது. 

Tuesday, April 15, 2014

மத்திய சங்க செய்திகள்

தேசிய கவுன்சில் கூட்டம் 22-04-2014 க்கு பதிலாக 23-04-2014 அன்று நடைபெற உள்ளது .
கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டி 23-04-2014 க்கு பதிலாக 24-04-2014 அன்று நடைபெற உள்ளது .

Thursday, March 20, 2014

மத்திய சங்க செய்திகள்

       சென்னையில் 21-03-2014 அன்று நடைபெற உள்ள FNTO சங்கத்தின் அனைத்திந்திய மகாநாட்டின் பொது அரங்கில் நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்கள் வாழ்த்துரையாற்ற உள்ளார். FNTO மாநாடு வெற்றி பெற நமது மத்திய சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளது.
          01-01-2007க்கு பின் பணி நியமனம் பெற்ற ஊழியர்களின் ஊதிய குறைப்பு பிரச்சனையை தீர்க்க கோரி JAC கடிதம் எழுதி உள்ளது. Click Here 
          கார்போரேட் அலுவலகம் பல்வேறு மாநிலங்களுக்கு நலநிதியம் இறுதி மானியத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவு வெளியிட்டு உள்ளது. Click Here

Tuesday, March 11, 2014

மகாராஷ்டிரா மாநில மாநாடு

             
           நமது பிஎஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் 2 நாள் மகாராஷ்டிரா மாநில மாநாடு, 09.03.2014 அன்று அகமது நகரில் தொடங்கியது. மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஊழியர் சங்கத்தின் கொடி மாநிலத் தலைவர் தோழர் நாகேஷ் நலவாடே (Nagesh Nalawade), அவர்களால் ஏற்றி வைக்கபட்டது. சங்க கொடி வரவேற்பு குழு செயலாளர் விட்டல் ஔட்டி அவர்களால் ஏற்றி வைக்கபட்டது. 527 பிரதிநிதிகள், 45 பார்வையாளர்கள் மாநாட்டில் கலந்து .கொண்டனர். மாநாட்டில் பொதுச்செயலர தோழர் P.அபிமன்யு, மகாராஷ்ட்ரா தலைமைப் பொது மேலாளர் திரு. ஆனந்த் குல்கர்னி, தோழர் அஜித் அபயங்கர் (சிஐடியு) தோழர் மாநிலத் தலைவர் நாகேஷ் நலவாடே மாநில தலைவர் மற்றும் தோழர கௌண்டே (மாநில அரசு ஊழியர் சங்கம்) உரையாற்றினர்.

              மாநிலச் செயலர் தோழர் ஜீடாம் செயல்பாட்டறிக்கையினை முன்வைத்தார். பிரதிநிதிகளின் அறிக்கை மீதான கருத்துக்களை தொடர்ந்து, பொதுச் செயலர் தோழர் P.அபிமன்யு விரிவாக பிரச்சினைகள் குறித்து உரையாற்றினார். புதிய தாராளவாத கொள்கைகளுக்கு எதிராக போராட சமூக நல்லிணக்கத்தையும் வலுப்படுத்த முயற்சி தேவை என்பதை வலியுறுத்தினார்.
புகைப்பட தொகுப்பு பார்க்க : Click Here

Monday, March 10, 2014

Meeting of post 01-01-2007 Recruited TTA’s

Meeting of post 01-01-2007 Recruited TTA’s with Com. V.A.N. Namboodiri 
at Ludhiana on 06-03-2014:-
       
              As promised by BSNLEU Punjab, a meeting of post 01-01-2007 recruited TTA’s was organised at Ludhiana on 06-03-2014 afternoon. More than 200 Direct recruited TTA’s from all district of Punjab attended the meeting. Com. R.L Moudgill started the debate and called upon the participants to express there views and place their demands in the meeting. Before start of discussion Com. V.A.N Namboodiri President BSNLEU, explained the issues of wage reduction, designation change and reduction of qualifying service to sit in JTO LICE. All the participants were very aggressive. The complained that their issues have not been taken up by any unions seriously. Com. Namboodiri again explained the efforts made by BSNLEU for settlement of their issues like wage reduction, designation change and reducion in qualifying service condition for JTO(T) LICE. He told that it was BSNLEU only which compelled the management to reduce the qualifying service from 10 to 7 years. Com.Namboodiri assured that he will take their issues seriously in the coming meetings of the united forum and unions. Com. Namboodiri further told that not only the TTA's but other cadres are facing serious problems. The issues of stagnation of RMs, reduction of scale of Sr. T.O.As perks for line staff are very serious and striking the mind of these employees. He also shown his anxiety over deteriorating position on BSNL. He called upon the participant to be ready for any trade union action in the coming days to settle the issues of non executives. Com. Balbir Singh while addressing said that issue of service condition is very important in the mean time the availability of posts is also required. He told that at present justification of posts is being calculated on the basis of land lines and the land lines are declining day by day. He requested com. Namboodiri to take up the matter of calculation of posts on land lines only. The posts should be calculated on all the BSNL services like Mobile, Broad band and wi-max etc. After a very lively debate the meeting concluded with the slogan of joint struggle by all the cadres. All the participants assued that they will take active part in the forthcoming struggles. Com. Balwinder Singh while giving vote of thanks called upon all the participant to identify the fighting forces in BSNL and join hands with them. 

Friday, January 31, 2014

ஊதிய குறைப்பு பிரச்னை

     01-01-2007 க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு(TTA, TOA மற்றும் RM) ஊதிய குறைப்பு ஏற்பட்டதை தீர்க்க திட்டவட்டமாக JTO கேடருக்கு வழங்கப்பட்டதை போல் 5 இன்கிரிமெண்ட் வழங்க வலியுறுத்தி நமது சங்கம் மீண்டும் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.3 பொது மேலாளர் அடங்கிய குழு ஒரு இன்கிரிமெண்ட் மட்டும் வழங்க வேண்டும் என்றும் அதற்கு நிலுவை தொகை கிடையாது என்றும் பரிந்துரைத்த பாரபட்சத்தால் நமது நிறுவனத்தின் செயல் திறன் பாதிக்கப்படும் என நமது சங்கம் எச்சரித்து உள்ளது .நமது சங்க கடிதம் படிக்க :-Click Here

Wednesday, January 29, 2014

மத்திய சங்க செய்திகள்

நமது உதவி பொது செயலர் தோழர் .ஸ்வபன் சக்கரவர்த்தி நிர்வாகத்திடம் பேசியவை :-

1.29 வது தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி SC /ST  ஊழியர்களுக்கு இலாகா தேர்வில் தேர்வு பெறுவதற்கு தகுதி மதிப்பெண் குறைக்கப் பட  வேண்டும் என்பது நடை முறைப்படுத்தப்படவில்லை என்பதை SR GM (Rect ) அவர்களிடம் சுட்டிக்  காட்டினார் .தேசிய கவுன்சில் முடிவின் படி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என SR GM (Rect ) அவர்கள் உறுதி அளித்துள்ளார் .
2.கேடர் பெயர் மாற்றம் விசயமாக உடனடியாக அதற்கான கமிட்டியை கூட்ட வேண்டும் என Sr.GM (Restructuring) அவர்களிடம் நமது உதவி செயலர் கேட்டு கொண்டுள்ளார் ..அங்கீகரிக்கபட்டுள்ள மற்றொரு சங்கம் கேடர்களுக்கான பெயர்களை கொடுத்தவுடன் கமிட்டி கூடும் என Sr.GM (Restructuring) அவர்கள் கூறியுள்ளார் .
3. LTC  விசயமாக நிர்வாகம் இரு வேறுபட்ட நிலைபாட்டை கையாள்வதை(BSNL பகுதியில் deputation அடிப்படையில்  வந்தவர்களுக்கு LTC சலுகையை அனுமதிப்பதும் ,நமது BSNL நிறுவனத்தில் நிரந்தரமாக பணி புரிபவர்களுக்கு LTC சலுகையை நிதி நெருக்கடியை காரணம் காட்டி  மறுப்பது ) எதிர்த்து நமது சங்கம் கடிதம் கொடுத்துள்ளது ..கடித நகல் பார்க்க :- Click Here

Monday, January 13, 2014

கேடர் பெயர் மாற்றம்

         கேடர் பெயர் மாற்றம் விசயமாக கூட உள்ள கூட்டு குழுவின் உறுப்பினர்களாக தோழர் P.அபிமன்யு , தோழர் V .A .N .நம்பூதிரி மற்றும் தோழர் அனிமேஷ் சந்திர மித்ரா ஆகியோர் இருப்பர் . நமது சங்கம் இது விசயமாக நிர்வாகத்திற்கு கொடுத்த கடிதம் பார்க்க :-Click Here 

Friday, January 3, 2014

மத்திய சங்க செய்திகள்

        டைரக்டர் (மனிதவளம் ) திரு .A .N .ராய் அவர்களுடன் நமது பொது செயலர் இன்று பேசிய போது  18-10-2013 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நிர்வாகத்துடன்  உடன்பாடு ஏற்பட்ட பிரச்சனைகளில்  தீர்வில்  எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை சுட்டி கட்டியுள்ளார் .
  01-01-2007 க்கு பிறகு பணி நியமனம்  செய்யப்பட்ட ஊழியர்களின் ஊதிய குறைப்பு பிரச்சனையிலும் தீர்வில் கடும் கால தாமதம் ஏற்படுவதை கடுமையாக நமது பொது செயலர் திரு R .K .கோயல் ,பொது மேலாளர் (Estt ) அவர்களிடம் சுட்டி காட்டி உள்ளார் .இது விசயமாக நமது மத்திய சங்கம் நிர்வாகத்துக்கு எழுதிய கடிதம் படிக்க :Click Here
   மார்ச்-2014 இறுதிக்குள் 1800 க்கும் மேற்பட்ட  Officiating JTO க்களின் பிரச்னை தீர்வாகும் என நமது மத்திய சங்கம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது .இப் பிரச்சனையை நமது மத்திய சங்கம் தொடர்ந்து நிர்வாகத்திடம் எழுப்பி வருகிறது .
              TTA கேடர்க்கான புதிய ஆளெடுப்பு விதிகளை நிர்வாகம் இறுதி செய்து விட்டது .10+2 தகுதி அல்லாத ஊழியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி அதில் தேர்வு பெறுபவர்களை போட்டி தேர்வில் அனுமதிப்பது என்ற நமது கோரிக்கை ஏற்கப்படவில்லை .இது விசயமாக நமது பொது செயலர் திரு R .K .கோயல் ,பொது மேலாளர் (Estt ) அவர்களிடம் இன்று பேசிய போது குறைந்த பட்சம் ஒரு தகுதி தேர்வை மட்டுமாறு நடத்த வேண்டும் என வலியுறுத்திய போது நிர்வாகம் இந்த பிரச்னை விசயமாக நீதி மன்ற தீர்ப்பு வந்தவுடன் நடத்துவதாக உறுதி கூறி உள்ளார்.அதே போல் JTO ஆளெடுப்பு விதிகளை இறுதி செய்யும் போது தேர்வில் பங்கேற்க சேவைக்கால வரம்பை குறைக்க வேண்டும் என்ற நமது கோரிக்கையையும் நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளார் .

Friday, November 22, 2013

மாநில சங்க சுற்றறிக்கை

மத்திய சங்க செய்திகள் மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...