Showing posts with label இரங்கல் செய்தி. Show all posts
Showing posts with label இரங்கல் செய்தி. Show all posts

Monday, October 16, 2017

பயிற்சியின்போது அகால மரணம் - இரங்கல்


பாண்டிச்சேரி SSAவைச் சேர்ந்த, RGMTTCயில் இளநிலை தொலைத் தொடர்பு அதிகாரி பயிற்சியில் இருந்த தோழர் குட்டி குமரன் இன்று (16/10/2017) காலை 8.15 மணியளவில் சாலைவிபத்தில் அகால மரணமடைந்தார். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தார்க்கும்,நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் உடன் பயிற்சியில் இருப்பவர்களுக்கும் விருதுநகர் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

Thursday, March 20, 2014

குஷ்வந்த் சிங் காலமானார்

      குஷ்வந்த் சிங் | கோப்புப் படம்
     பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான குஷ்வந்த் சிங் காலமானார். அவருக்கு வயது 99.உலகப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்களுள் ஒருவரான குஷ்வந்த் சிங்கின் எழுத்தில் நையாண்டித்தனமும் அழுத்தமான கருத்துகளும் பொதிந்திருக்கும்.யோஜனா என்ற பத்திரிகையை நிறுவியவர். தி இல்லுஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா, தி நேஷனல் ஹெரால்டு, தி இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் ஆசிரியராக பணிபுரிந்தவர்.ட்ரெயின் டூ பாகிஸ்தான், ஐ ஷேல் நாட் ஹியர் தி நைட்டிங்கேல், டெல்லி உள்ளிட்ட இவரது படைப்புகள் காலம் கடந்து பேசுபவை.குஷ்வந்த் சிங் தனது 95-வது வயதில் 'தி சன்செட் கிளப்' என்ற நாவலை எழுதினார். இவரது சுயசரிதையை 2002-ல் பெங்குவின் புக்ஸ் வெளியிட்டது.1980-ல் இருந்து 1986 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 1974-ல் இவருக்கு இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கியது. ஆனால், அவ்விருதை 1984-ல் அவர் திரும்ப ஒப்படைத்துவிட்டார். பொற்கோயிலில் நுழைந்து இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராகவே விருதை திருப்பித் தந்தார். பின்னர், 2007-ல் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
                               < தி ஹிந்து >

Saturday, December 14, 2013

இரங்கல்

        நமது லோக்கல் கவுன்சில் உறுப்பினரும் முன்னால் மாவட்ட சங்க நிர்வாகியும் ஆன தோழர் L.தங்கதுரை அவர்களின் துணைவியார் இன்று காலமானார்.அன்னாரை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பதார்க்கு விருதுநகர் மாவட்ட சங்கம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

Monday, August 12, 2013

இரங்கல் செய்தி

           நம்முடன் பணியாற்றும் தோழர் சம்பத் JTO, IMPCS, அருப்புக்கோட்டை அவர்களின் தாயார் நேற்று (11.08.2013) சிவகாசி மீனம்பட்டியில் இயற்கை எய்தினார். அவரின் பிரிவால் வாடும் தோழரின் குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

Monday, July 29, 2013

இரங்கல் செய்தி

          நமது சங்கத்தில் தொடக்க காலம் முதல் உறுப்பினராக இருந்த, நமது சங்கத்திற்கான தட்டிகளிலும், பதாகைகளிலும் (பேனர்) தன் கைவண்ணம் காட்டி மிளரச் செய்த, அருப்புக்கோட்டை டெலிகாம் மெக்கானிக் தோழர் முனியப்பன் இன்று (29/07/2013) காலை இயற்கை எய்தினார். அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

Thursday, July 18, 2013

இரங்கல்


          எம்.ஜி.ஆர்., காலம் முதல் இன்றைய இளம் நடிகர் வரை பல ஆயிரம் பாடல்களை எழுதிக்குவித்த பிரபல கவிஞர் வாலி இன்று காலமானார். இவருக்கு வயது 82. வாழ்த்துப்பா பாடுவதில் மிகவும் நுண்ணிய வார்த்தைகளை பிரயோகிப்பது இவருக்கு கை வந்த கலை. தமிழக அரசின் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். நேரத்திற்கு ஏற்றால் போல் நினைத்த உடன் கவிதைகளை கொட்டி போடும் திறம் படைத்தவர் வாலி. தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் வாலிபன். பக்தி இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன். பாட்டெழுத வந்துவிட்டால் மாயக்கண்ணன்
          திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்கு வந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார் – பொன்னம்மாளின் மகன் வாலி. படித்தது எஸ்.எஸ்.எல்.சி. பிறகு, சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு. வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளை. பட்டாக இருந்தால் சந்தன நிறம். இவை தவிர வேறு விருப்பம் இல்லை. ஒரு நல்ல கவிஞனை    இழந்தது தமிழகம்.

Wednesday, June 19, 2013

அஞ்சலி



சைக்கிள் பெடரேஷன் ஆப் இந்தியாவின் சார்பில் ஜூனியர் தேசிய குழுவின் சைக்கிள் போட்டி பயிற்சியாளராக பணியாற்றி வந்த ருமா சட்டோபாத்யாய் (50 ) நொய்டாவில் நேற்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.நேற்று காலை 6 மணி அளவில் நொய்டா அதிவிரைவு சாலையில் மாணவ-மாணவியர்கள் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை ருமா மற்றும் இரண்டு பயிற்சியாளர்கள் மூன்று மோட்டார் சைக்கிள்களில் சென்று, கண்காணித்தனர்.அப்போது எதிரே வந்த கார் ஒன்று ருமா மீது பலமாக மோதியது. இதனால் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதையறிந்ததும் காரை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். பலத்த காயமடைந்த ருமாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.ருமா சர்வதேச சைக்கிள் போட்டிகளில் மூன்று முறை இந்தியாவின் சார்பில் பங்கு பெற்றுள்ளார். ஏசியன் கேம்ஸ், ஏசியன் சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளில் ஏழு முறை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் சைக்கிள் பந்தய குழுவினரின் பயிற்சியாளராக அவர் பங்குகொண்டார்.ருமா கொல்கத்தா தொலைபேசி மாவட்டத்தில்   ஒரு மூத்த கணக்காளர் ஆக பணியாற்றுகிறார் .ரூமா அவர்கள் கொல்கத்தா தொலைபேசி மாவட்ட கிளையில்   பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் துணை தலைவர் ஆக உள்ளார் .ருமாவின் மறைவு அவர் சார்ந்த சைக்கிள் பந்தய குழுவினருக்கு மட்டுமில்லாமல், விளையாட்டு உலகத்திற்கும் ,நமது    பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்திற்கும் பெரிய இழப்பாகும். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தன செங்கொடி தாழ்த்தி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது .

Tuesday, April 9, 2013

இரங்கல்

இரங்கல் 
          நமது மாவட்டசங்க அமைப்பு செயலரும், வொர்க் கமிட்டி உறுப்பினருமான தோழர் A (மதி)கண்ணன் TTA, அருப்புக்கோட்டை அவர்களின் தந்தையார் இன்று (09-04-2013) இரவு 0800 மணி அளவில் காலமானார். அன்னார்க்கு நமது BSNLEU மாவட்ட சங்கம் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்து கொள்கிறது. தந்தையை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பததாற்கு   நமது இரங்கலை உரிதாக்குகிறோம் .

                  இப்படிக்கு :- மாவட்ட சங்கம் ,விருதுநகர் 

Saturday, March 16, 2013

JTO தேர்விற்கான வயது வரம்பு

          JTO போட்டி தேர்வுக்கு வயது வரம்பு (50 இல் இருந்து 53 ஆக) தளர்த்த நமது சங்கம் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது .

கடித நகலுக்கு :- <click here>

Wednesday, March 6, 2013

இதய அஞ்சலி


புரட்சிகர தலைவன் ஹியூகோ சாவேஸ்க்கு BSNLEU சங்கத்தின் இதய அஞ்சலி 

          மேற்கத்திய நாடுகளின் புதிய தாராளவாத பொருளாதார கொள்கைகளை நிராகரித்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய சாவேஸின் அரசியல் வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவையாக விளங்கியது.

          வெனிசுவேலா அதிபர் ஹியூகோ சாவேஸ் தனது 58வது வயதில் செவ்வாய்க் கிழமை உள்ளூர் நேரம் மாலை 4.25 மணிக்கு தலைநகர் கேரகாஸில் உயிரிழந்தார்.  சாவேஸ் 1998ம் ஆண்டு முதல் தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள சுமார் 3 கோடி மக்கள் வசிக்கும் வெனிசுவேலாவின் அதிபராக 14 ஆண்டுகளாக பணியாற்றினார். முன்னாள் இராணுவ அதிகாரியான சாவேஸ் 1998ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நாட்டு அதிபரானார்.  அன்று முதல் எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் 4வது இடத்தில் இருக்கும் வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை மக்கள் நலத்துக்கு பயன்படுத்தும் திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தினார். 1998ல் புதிய அரசியல் சட்டத்தை ஏற்படுத்த வழி வகுத்தார்.

          பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து அதிக ராயல்டி வசூலித்து அதன் மூலம் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மூன்று வேளை சத்துணவு வழங்கும் திட்டம், நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ வசதிகள், குடும்பத்துக்கு உழைக்கும் பெண்களுக்கு ஓய்வூதியம் போன்றவற்றை செயல்படுத்தினார். குழந்தை பேறின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கையும் குழந்தைகளிடையே ஊட்டச் சத்துக் குறைவும் பெருமளவு குறைந்தன.19ம் நூற்றாண்டின் வெனிசுவேலா சுதந்திர போராட்ட வீரர் சைமன் பொலிவாரின் நினைவாக பொலிவாரிய புரட்சி என்று அழைக்கப்படும் சாவேஸின் சீர்திருத்தங்களை பன்னாட்டு பெருநிறுவனங்களும், அவர்கள் சார்பான ஊடகங்களும், கலகக் காரர்களும் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். 2002ல் இராணுவ கலகம், 2007ல் நிலச் சீர்திருத்தங்களுக்கான கருத்துக் கணிப்பில் தோல்வி, தொடர்ச்சியான எதிர் பிரச்சாரம் என்று பல வகையான தாக்குதல்களை மக்கள் துணையுடன் முறியடித்தார் ஹியூகோ சாவேஸ்.

          அமெரிக்க ஏகாதிபத்திய விரிவாக்கத்தை முறியடிப்பதற்கு தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதில் சாவேஸ் முன்னணி வகித்தார்.  உலகின் பிற பகுதிகளில் அமெரிக்காவால் சுரண்டப்படும் மூன்றாம் உலக நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதை தனது வெளியுறவுக் கொள்கையின் சிறப்பு அம்சமாக வைத்திருந்தார்.ஜூன் 2011ல் சாவேஸூக்கு புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  2012 அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் 54 சதவீதம் வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

          மேற்கத்திய நாடுகளின் புதிய தாராளவாத பொருளாதார கொள்கைகளை நிராகரித்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய சாவேஸின் அரசியல் வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவையாக விளங்கின.

Tuesday, January 15, 2013

ஊதிய குறைப்பு பிரச்சினை


          நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யூ, மற்றும் தோழர் ஸ்வபன் சக்கரவர்த்தி, AGS அவர்கள் நமது BSNL  நிறுவன  இயக்குனர் (HR ) அவர்களை  14.01.2013 அன்று சந்தித்து கீழ் கண்ட விசயங்களை பேசியுள்ளனர் .

          1. உடனடியாக JTO LDCE தேர்வு நடத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும்கூட பிஎஸ்என்எல் நிறுவனம்  LDCE  தேர்வுக்கான  அட்டவணை அறிவிக்க காலதாமதம் செய்வதை நமது தலைவர்கள் சுட்டிக்காட்டினர். .

          2. 01.01.2007 பின் நியமனம்  செய்யப்பட்ட ஊழியர்களின்   ஊதிய குறைப்பு பிரச்சினை இல் JTOs மற்றும் JAOs  கேடரில்  செய்யப்பட்டுள்ளது போல் ADVANCE INCREMENTS வழங்கவேண்டும். 01.01.2007 நியமிக்கப்பட்ட NON-EXECUTIVES    ஊதிய குறைப்பு சிக்கலை அந்த அடிபடையில் உடனடியாக தீர்க்க இயக்குனர் (HR ) இடம்  வலியுறுத்தபட்டது .

          இயக்குனர் (HR )  இரு பிரச்சினைகளையும்  கனிவுடன் .பரிசிலனை செய்வதாக உறுதி  அளித்தார்.

          JTO LDCE தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது .தேர்வு 02-06-2013 அன்று நடைபெற் உள்ளது .

Monday, January 7, 2013

தோழர் O.P.குப்தா மறைவிற்கு இரங்கல்...

          தபால் தந்தி தொழிற்சங்க முன்னணி தலைவர்களில் ஒருவரும், NFTE (BSNL) சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான தோழர் O.P.குப்தா இன்று (06.01.2013) இரவு 8மணி அளவில் மருத்துவ மனையில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு விருதுநகர் மாவட்ட BSNL ஊழியர் சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், சக தோழர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்குகிறோம்.

Sunday, November 11, 2012

இரங்கலை உரித்தாக்குகிறோம்.

          நமது மாவட்ட தலைவர் அருமைத் தோழர் சமுத்திரகனி அவர்களின் புதல்வியார் இயற்கை எய்திவிட்டார்கள். பிரிவால் வாடும் தோழருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.


மற்றும் நம்மாவட்டத்தில் பணியாற்றும் தோழர் தங்கராஜ், தோழர் முருகன் ஆகியோரும் இயற்கை எய்திவிட்டனர். தோழர்களின் பிரிவால் வாடும் அவர்கள் குடும்பத்திற்கு மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...