Showing posts with label ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம். Show all posts
Showing posts with label ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம். Show all posts

Saturday, January 7, 2017

3 வது மாவட்ட செயற்குழு

3 வது மாவட்ட செயற்குழு நமது தலைவர் தோழர் சமுத்திரக்கனி தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மறைந்த தோழர்களுக்கு மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் நினைவஞ்சலி உரை நிகழ்த்த அனைவரும் ஒரு நிமிட மௌனஞ்சலி செலுத்தினர் .மாவட்ட செயற்குழு ஆயபடுபொருளாக 1.) அனைத்திந்திய மாநாட்டு ரிப்போர்ட் 2.)கிளை மாநாடுகள் 3).மறைந்த தோழர் முத்துராமலிங்கம் குடும்ப நிவாரணம்  வழங்குவது 4) ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் ஆகியவை விவாதிக்கப்பட்டன .நமது மாவட்ட சங்கம் சார்பாக அனைத்திந்திய மாநாட்டு நிதியாக ரூபாய் 3,09,000/- யும் ,விளம்பரமாக ரூபாய் 20,000/- கொடுக்கப்பட்டு உள்ளது .இந்த இலக்கை அடைய பாடுபட்ட அனைத்து மாவட்ட சங்க ,கிளை சங்க ,மற்றும் நமது ஊழியர்களுக்கு மாவட்ட சங்கம் தனது பாராட்டுகளை தெரிவித்தது .அதே போல் கடைசி நிமிடத்தில் ரூபாய் 20,000 விளமபரம் வாங்கிய சிவகாசிOCBகிளை செயலர் தோழர் முத்துசாமி அவர்களுக்கும் மாவட்ட சங்கம் பாராட்டைஉரித்தாக்கியது .அனைத்து கிளைகளும் உரிய இலக்கை செலுத்தி விட்டன .நமது அடுத்த மாவட்ட மாநாட்டை 2018 ஜூன்  கடைசியில் ராஜபாளையத்தில் முத்துராமலிங்கம் தடம் பதித்த மண்ணில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது .கிளை மாநாடுகளை உரிய தேதியில் நடத்த கிளை பொதுக்குழுவை கூட்டி உரிய முடிவு எடுக்க கிளைகள் அறிவுறுத்தபட்டு உள்ளன .ஒப்பந்த ஊழியர் ஊதிய பிரச்சனையில் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க 18/01/2017 அன்று பெரும் திரள் முறையீட்டு போராட்டம் நடைபெறும் .மாநில  சங்கத்தின் ஒப்புதலோடு மார்ச் மாதம் முதல் ஒரு காலவரையற்ற போராட்டத்தை ஒப்பந்த ஊழியர் சங்கம் நடத்தும் .பல்வேறு தல மட்ட பிரச்சனைகள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் .அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் விவாதத்தில் பங்கேற்றனர் .மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் நன்றி நவில மாவட்ட செயற்குழு  நிறைவுற்றது .
Image may contain: 1 person, sitting and indoor
Image may contain: 1 person, sitting and indoor

Image may contain: 1 person, standing and beard
Image may contain: 1 person, sunglasses

Image may contain: 1 person
Image may contain: 1 person, standing and indoor
Image may contain: 1 person, sitting and indoor
Image may contain: 1 person, standing and smoking
Image may contain: 1 person
Image may contain: 1 person, standing
Image may contain: 1 person, standing
Image may contain: 1 person, standing
Image may contain: 1 person, standing and stripes
Image may contain: 1 person, standing, sunglasses, eyeglasses and indoor
Image may contain: 1 person, standing and sunglasses
Image may contain: 1 person, standing
Image may contain: 1 person, sunglasses
Image may contain: 1 person, sitting
Image may contain: 7 people, people sitting
Image may contain: 3 people, people sitting
Image may contain: 1 person, standing

Tuesday, August 9, 2016

எழுச்சியுடன் நடைபெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் 08/08/2016 அன்று தோழர் வெங்கடசாமி தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது ஆய்படு பொருளான செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் ,அகில இந்தியமாநாட்டு நிதி , ஆகஸ்ட் 10 ஆம் தேதி FORUM சார்பாக நடைபெற உள்ள பேரணி ,31ஆம் தேதி நடைபெற உள்ள விரிவடைந்த செயற்குழு மற்றும் தோழியர் பகவதி அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா மீது அனைத்து தோழர்களும் பங்கேற்ற விவாதம் நடைபெற்றது .செப்டம்பர் 2 வேலை நிறுத்ததை வெற்றி அடைய செய்ய வேண்டிய அவசியம் குறித்து மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் ஜெயக்குமார் ,அஷ்ரப் தீன் ,தங்கதுரை ஆகியோர் பேசினர் .அகில இந்திய மாநாட்டு நிதியாக முதல் தவணை ரூபாய் 12,500 இக் கூட்டடத்தில் வழங்கப்பட்டது .செப்டம்பர் 2  போராட்டத்தை 100% வெற்றி அடைய செய்வோம் என்று கூறி  கிளை பொருளர் தோழர் சுந்தரமஹாலிங்கம் நன்றியுரை கூறினார் .

Monday, August 17, 2015

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின் பொது குழு கூட்டம் 17-08-2015 அன்று தோழர் வெங்கடசாமி கிளை தலைவர் தலைமையில் நடைபெற்றது .கிளை செயலர் தோழர் சமுத்திரம் அவர்கள் சமர்ப்பித்த ஆய்வறிக்கை மீது விவாதம் நடைபெற்றது . செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் பற்றி மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி மற்றும் மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் அவர்கள் பேசினார்கள் .மாவட்ட மற்றும் விரிவடைந்த  மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி மாவட்ட செயலர் பேசினார் .ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர் ,புளுகாண்டி அவர்கள் பேசினார் .தோழர் L தங்கதுரை அவர்கள் நன்றி கூறினார் .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...