3 வது மாவட்ட செயற்குழு நமது தலைவர் தோழர் சமுத்திரக்கனி தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .மறைந்த தோழர்களுக்கு மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் நினைவஞ்சலி உரை நிகழ்த்த அனைவரும் ஒரு நிமிட மௌனஞ்சலி செலுத்தினர் .மாவட்ட செயற்குழு ஆயபடுபொருளாக 1.) அனைத்திந்திய மாநாட்டு ரிப்போர்ட் 2.)கிளை மாநாடுகள் 3).மறைந்த தோழர் முத்துராமலிங்கம் குடும்ப நிவாரணம் வழங்குவது 4) ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் ஆகியவை விவாதிக்கப்பட்டன .நமது மாவட்ட சங்கம் சார்பாக அனைத்திந்திய மாநாட்டு நிதியாக ரூபாய் 3,09,000/- யும் ,விளம்பரமாக ரூபாய் 20,000/- கொடுக்கப்பட்டு உள்ளது .இந்த இலக்கை அடைய பாடுபட்ட அனைத்து மாவட்ட சங்க ,கிளை சங்க ,மற்றும் நமது ஊழியர்களுக்கு மாவட்ட சங்கம் தனது பாராட்டுகளை தெரிவித்தது .அதே போல் கடைசி நிமிடத்தில் ரூபாய் 20,000 விளமபரம் வாங்கிய சிவகாசிOCBகிளை செயலர் தோழர் முத்துசாமி அவர்களுக்கும் மாவட்ட சங்கம் பாராட்டைஉரித்தாக்கியது .அனைத்து கிளைகளும் உரிய இலக்கை செலுத்தி விட்டன .நமது அடுத்த மாவட்ட மாநாட்டை 2018 ஜூன் கடைசியில் ராஜபாளையத்தில் முத்துராமலிங்கம் தடம் பதித்த மண்ணில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது .கிளை மாநாடுகளை உரிய தேதியில் நடத்த கிளை பொதுக்குழுவை கூட்டி உரிய முடிவு எடுக்க கிளைகள் அறிவுறுத்தபட்டு உள்ளன .ஒப்பந்த ஊழியர் ஊதிய பிரச்சனையில் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க 18/01/2017 அன்று பெரும் திரள் முறையீட்டு போராட்டம் நடைபெறும் .மாநில சங்கத்தின் ஒப்புதலோடு மார்ச் மாதம் முதல் ஒரு காலவரையற்ற போராட்டத்தை ஒப்பந்த ஊழியர் சங்கம் நடத்தும் .பல்வேறு தல மட்ட பிரச்சனைகள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் .அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் விவாதத்தில் பங்கேற்றனர் .மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் நன்றி நவில மாவட்ட செயற்குழு நிறைவுற்றது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment