நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் 8வது அனைத்திந்திய மாநாடு சென்னையில் மிகுத்த உற்சாகத்துடன் 31-12-2016 அன்று துவங்கி 03-01-2017 அன்று நிறைவுற்றது .நமது தமிழ் மாநில சங்கம் மாநாட்டு ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்து இருந்தது .கடமை உணர்வோடு தொண்டர்கள் அற்புதமான பணியை செய்தனர் . கண்ணியமிக்க உணர்வோடு பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் ஒரு ராணுவ கட்டுப்பாட்டுடன் பங்கேற்றனர் .அனைத்து மாநில பிரதிநிதிகளும் பங்கேற்ற அற்புதமான விவாத அரங்கம் நமது நிறுவன மற்றும் ஊழியர் பிரச்சனைகள் அலசி ஆராய்ந்தது.நமது பொது செயலரின் உரை வீச்சு உலக நடப்புகளில் இருந்து தற்போதய நிலவரம் குறிப்பாக புதிய டவர் நிறுவனம் உருவாக்கம் ,அதை எதிர்த்து நாம் நடத்தவேண்டிய போராட்டங்கள் ,01/01/2017 முதல் நாம் பெற வேண்டிய ஊதிய மாற்றம் , புன்னகையுடன் சேவையை செழுமையாக நடத்த வேண்டிய அவசியம் ,ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனை ஆகியவற்றை மிக தெளிவாக பிரதிநிதிகளுக்கு உணர்த்தியது .1800 க்கும் மேல் கலந்து கொண்ட ஒரு உற்சாகமான எழுச்சி மிகு மாநாடாக ,வரலாற்று பதிவில் பதிவான மாநாடாக சென்னை மாநாடு விளங்கியது . இம் மாநாடு வெற்றி அடைய பெரும் பணியாற்றிய தமிழ் மாநில சங்கத்திற்கும் ,ஒப்பந்த ஊழியர் சங்கத்திற்கும் ஒப்பற்ற பாராட்டுக்கள் .இம் மாநாட்டுக்கு பெரும் அளவில் உற்சாகமாக நிதி வழங்கிய அனைத்து ஊழியர்கள் ,அதிகாரிகள் அனைவர்க்கும் நமது மாவட்ட சங்கம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது .


































No comments:
Post a Comment