தளவாய்புரம் தொலைபேசி நிலையத்தில் கேபிள் பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர் தோழர் .குத்தாலகனி அவர்கள் நேற்று மாலை காலமானார் .அன்னார் மறைவால் துயருறும் அவர் தம் குடும்பத்தார்க்கு விருதுநகர் மாவட்ட BSNLEU மற்றும் TNTCWU சங்கங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது
Showing posts with label இரங்கல். Show all posts
Showing posts with label இரங்கல். Show all posts
Monday, July 29, 2019
Tuesday, April 30, 2019
இரங்கல்
விருதுநகர் outdoor கிளை சங்க உறுப்பினர் தோழர் V.லக்ஷ்மணன் ,TT அவர்களின் தாயார் இன்று காலை காலமானார் .அன்னார் மறைவால் துயருறும் அவர் தம் குடும்பத்தார்க்கு BSNLEU மாவட்ட சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .
Wednesday, February 6, 2019
இரங்கல்
அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் A ,சோலை அவர்களின் அன்னையார் இன்று காலை காலமானார் ,அன்னார் மறைவால் துயருறும் அவர் தம் குடும்பத்தார்க்கு BSNLEU மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது
Sunday, February 11, 2018
Friday, December 8, 2017
இரங்கல்
இரங்கல்
நமது BSNLEU சங்க உறுப்பினரும் ,காரியாபட்டி டெலிகாம் டெக்னீசியனுமான தோழர் ஜெயக்கண்ணன் அவர்கள் உடல்நல குறைவால் 07/12/2017 அன்று மாலை காலமானார் .அன்னார் மறைவிற்கு தன ஆழ்ந்த இரங்கலை அவர்தம் குடும்பத்தார்க்கு மாவட்ட சங்கம் தெரிவித்து கொள்கிறது
Friday, April 14, 2017
இரங்கல்
BSNLEU விருதுநகர் மாவட்ட துணைச்
செயலர் தோழர் அஷ்ரஃப்தீன் அவர்களின் தகப்பனார் திருமிகு செய்யது முகம்மது அவர்கள் இன்று
(14-04-2017) அதிகாலை 3 மணியளவில் இயற்கை எய்தினார்.
இறுதிப் பயணம் மாலை 6 மணிக்கு
நடைபெறும்.
பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு நம் இரங்கலை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
Tuesday, March 7, 2017
இரங்கல்

கடந்த சனிக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் . சிவகாசியில் பணி புரிந்த ஒப்பந்த ஊழியர் அசோக்குமார் காலமானார் .அன்னார் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட பிஎஸ் என் எல் ஊழியர் சங்கம் அவர் தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது
Monday, September 19, 2016
இரங்கல்
அருப்புக்கோட்டை கிளை துணைச்செயலர் தோழர் தியாகராஜன் அவர்களின் தாயார் இன்று காலமானார் .அன்னார் மறைவால் துயருறும் அவர்தம் குடும்பத்தார்க்கு BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
Wednesday, September 14, 2016
இரங்கல்
சிவகாசி SDOP கிளை தலைவர் தோழர் A .அழகுராஜ் அவர்களின் தாயார் இன்று காலமானார் .அன்னார் மறைவால் துயருறும் அவர்தம் குடும்பத்தார்க்கு BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது
Friday, January 15, 2016
இரங்கல்
சிவகாசியில் ஸ்டோர் லைன்மென் ஆக பணிபுரியும் நமது தோழர் ராஜையா அவர்கள் புதல்வன் கடந்த 3 நாட்களுக்கு முன் நடைபெற்ற ஒரு விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார் . அவரது இழப்பால் துயிர் உறும் அவர் தம் குடும்பத்தார்க்கு பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .
Wednesday, February 25, 2015
தியாகத்தின் திரு உருவம் மறைந்தது....வீரவணக்கம் தோழரே..Red salute.
ஒரு நுற்றாண்டு காலம் சமூகத்தை ஆதர்ஷிக்க ஒருவரால் இயலுமா, இயலும் என்பதை இந்த உலகிற்கு தன் வாழ்கையின் மூலம் நிறுவி சென்றுள்ளார் ஒருவர். சுதந்திர போராட்ட தியாகி, இளம் கம்யூனிஸ்ட்டாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி இறுதிவரை அப்படியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய தோழர் ஐ.மாயாண்டி பாரதி மதுரையில் நேற்று (24-02-2015) காலமானார். அவருக்கு வயது 98. தனது 15வது வயதில் இருந்து விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடர்ந்து மதுரை, வேலூர், சென்னை, பாளையங்கோட்டை, தூத்துக்குடி போன்ற சிறைகளிலேயே தனது இளமைக்காலத்தை கழித்துள்ளார். ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில் என்பதாகவே அவரது வாழக்கை இருந்தது என்பதை அவர் பலமுறை சொல்லியிருக்கிறார். இவர் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதை பெருமையாக கருதுவோம். தன் மரணம் வரை மதுரையில் தொடர்ந்து கூட்டங்களில் பேசி தன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இரண்டாம் சுதந்திர போரின் அவசியம் இந்த நாட்டில் வந்து விட்டது என்பதை அவர் உரக்க அறிவித்து விட்டுத்தான் விடைபெற்றுள்ளார்.
(புகைப்படம் : முத்துக்கிருஷ்ணன்)
Sunday, January 4, 2015
இரங்கல்
விருதுநகர் SDOP கிளை தோழர் M S மோகன் அவர்களின் தாயார் நேற்று காலை (03-01-2015) காலமானார் .அவர் மறைவால் துயருறும் அவர் தம் குடும்பத்தார்க்கு விருதுநகர் மாவட்ட BSNLEU ஊழியர் சங்கம் தன் இரங்கலை தெரிவித்து கொள்கிறது .
ராஜபாளையம் கிளை தலைவர் தோழர் அனவரதம் அவர்களின் தாயார் இன்று (04-01-2015)மதியம் காலமானார் .அவர் மறைவால் துயருறும் அவர் தம் குடும்பத்தார்க்கு விருதுநகர் மாவட்ட BSNLEU ஊழியர் சங்கம் தன் இரங்கலை தெரிவித்து கொள்கிறது .
Thursday, December 4, 2014
இரங்கல்
இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி ஆர் கிருஷ்ணய்யர் தனது 100 வது வயதில் காலமானார்.மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் இந்திய அரசியல் சாசனம் குறித்து இவர் வழங்கிய பல தீர்ப்புகள் இன்றைக்கும் இந்திய நீதிமன்றங்களில் சுட்டிக் காட்டப்படுகின்றன.கேரளாவில் ஈ எம் எஸ் நம்பூத்ரிபாட் தலைமையில், 1957 ஆம் ஆண்டு இந்தியாவில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் இடம்பெற்றவர் திரு .கிருஷ்ணய்யர், இவரது பதவிக்காலம் நீதித்துறையின் பொற்காலமாக விளங்கியது. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கோர்ட் கதவுகளை தட்டலாம் என்ற நம்பிக்கை விதை, மக்கள் மனதில் இவரின் தீர்ப்புகளால் விதைக்கப்பட்டது. பொதுநல வழக்காடுதலை இந்திய நீதித்துறையில் பரவலாக அறிய செய்தவர் கிருஷ்ணய்யர். விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் அவரது மறைவிற்கு தன் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது .
Friday, November 14, 2014
இரங்கல்
NFTE சங்கத்தின் தமிழ் மாநில செயலர் தோழர் பட்டாபியின் தாயார் இன்று காலமானார் . தாயாரை இழந்து வாடும் தோழர் பட்டாபிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.
Tuesday, August 12, 2014
இரங்கல்
மலைப்பட்டி தொலைபேசி நிலையத்தில் பணிபுரிந்த நமது தோழர் பரமேஸ்வரன் இன்று சென்னையில் காலமானார் , அன்னார் மறைவால் துயருறும் அவர் தம் குடும்பத்தார்க்கு பி எஸ் என் எல் ஊழியர் மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது . விருதுநகர் மாவட்ட மகாநாடு மார்ச் மாதம் அருப்புகோட்டையில் நடைபெற்ற போது ரூபாய் 10,000/- நன்கொடை வழங்கியது மட்டும் இன்றி தன் குடும்பத்தோடு மகாநாட்டில் கலந்து கொண்ட தோழர் .பரமேஸ்வரன் நமது சங்கம் மீது மிகுந்த பற்று கொண்ட தோழர் .அவர் மறைவு நமது சங்கத்திற்கு பெரிய இழப்பாகும் .
Thursday, June 12, 2014
இரங்கல்
நமது முன்னாள் மாவட்ட செயலர் தோழர் M பெருமாள்சாமி அவர்களின் தாயார் இன்று மாலை (12-06-2014) காலமானார் .அன்னாரை இழந்து வாடும் அவர் தம் குடும்பத்தார்க்கு பி எஸ் என் எல் ஊழியர் மாவட்ட சங்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .
Wednesday, March 26, 2014
இலக்கியத் திறனாய்வாளர் தி.க.சி. காலமானார்
தி.க.சி. என அனைவராலும் அறியப்படும் இலக்கியத் திறனாய்வாளர் தி.க. சிவசங்கரன் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 89.
சிறிது நாள்கள் உடல்நலமின்றி திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.க.சி.யின் உயிர் இரவு 10.30 மணிக்கு பிரிந்தது.
மூத்த இலக்கியச் செயற்பாட்டாளரும், முற்போக்கு இலக்கியவாதிகளின் வழிகாட்டியாகவும் விளங்கிய இவர், திருநெல்வேலியில் 1925ஆம் ஆண்டு மார்ச் 30-ல் கணபதியப்பன், பர்வதம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தனது 11ஆவது வயது முதலே "தன்னை செதுக்கிய சிற்பி மகாகவி பாரதி' என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நினைவுகூர்ந்தவர்.
1941 ஜூன் மாதம் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இண்டர் மீடியட் வகுப்பில் சேர்ந்தார். 1945 முதல் 1964ஆம் ஆண்டு வரை வங்கி ஊழியராகவும், தொழிற்சங்கவாதியாகவும் தமிழகத்திலும், கேரளத்திலும் இவர் பெற்ற அனுபவங்களை ஒரு நாவலாக சித்தரிக்க வேண்டும் என்பதே இவரது பேராசை. அது நிறைவேறாமலேயே போனது.
1941ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எழுத்தாளர் வ.ரா.வின் பாணியில் நடைச் சித்திரங்கள் எழுதப் பழகி, பிறகு கதாசிரியராக மாறினார். கவிஞர், நாடகாசிரியர், சினிமா விமர்சகர், இலக்கிய விமர்சகர், பத்திரிகையாளர், திறனாய்வாளர், இலக்கியச் செயற்பாட்டாளர் என பல்வேறு தளங்களில் பரிணமித்தவர்.
இவரது "விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள்' என்ற நூலுக்காக 2000-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசின் இலக்கிய விருது, பாரதிய இலக்கிய விருது, லில்லி தேவசகாயம் இலக்கிய அறக்கட்டளை விருது, தமிழ்ச் சான்றோர் பேரவை விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இன்றளவும் திறனாய்வாளர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார். அரை நூற்றாண்டுக்கு முன்பே இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் பிரேம்சந்த், முல்கராஜ் ஆனந்த், சஜ்ஜாத் ஜாகிர் ஆகியோரால் தொடங்கப்பட்டு, நேரு, சரோஜினி நாயுடு, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டு இன்றளவும் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தமிழகத்தில் வரவேற்று வளர்த்த முதன்மையானவர்களில் ஒருவர்.
72 ஆண்டு கால இலக்கிய அனுபவத்தைக் கொண்டிருந்தார். கருத்து வேறுபாடுகளும், முரண்பாடுகளும் நிரம்பியவர்கள்கூட தி.க.சியை உணர்வுபூர்வமாக நேசித்து வந்ததே இவரது ஆளுமையின் தனித்த வெளிப்பாடுக்கு கிடைத்த சான்றாக உள்ளது. இவரது இலக்கியப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட படைப்பாளிகளே இன்றைய தலைமுறை எழுத்தாளர்களாக தமிழிலக்கிய உலகில் ஜொலித்துக் கொண்டுள்ளனர். இவருக்கு கணபதி, வண்ணதாசன், சேது என்ற மகன்களும், ஜெயலட்சுமி, பருவதகுமாரி, கௌரி என்ற மகள்களும் உள்ளனர். இவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெறுகிறது. தொடர்புக்கு 97916 17421.
இளம் தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்திற்கு உந்து சக்தியாக இருந்து பலரையும் எழுத்தாளர்களாக்கிய தோழரின் மறைவிற்கு நமது மாவட்டச் சங்கம் தன் அஞ்சலியை உரித்தாக்குகிறது.
Monday, March 17, 2014
இரங்கல்
விருதுநகர் NFTE மாவட்டச்சங்கத்தின் உதவி செயலர் சிவகாசித்தோழர். ஜாபர் சாதிக் சேட் நேற்று 16/03/2014 இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவிற்கு BSNLEU விருதுநகர் மாவட்ட சங்கம் தன செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது . அவர் தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது
Subscribe to:
Posts (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...


