ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் 08/08/2016 அன்று தோழர் வெங்கடசாமி தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது ஆய்படு பொருளான செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் ,அகில இந்தியமாநாட்டு நிதி , ஆகஸ்ட் 10 ஆம் தேதி FORUM சார்பாக நடைபெற உள்ள பேரணி ,31ஆம் தேதி நடைபெற உள்ள விரிவடைந்த செயற்குழு மற்றும் தோழியர் பகவதி அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா மீது அனைத்து தோழர்களும் பங்கேற்ற விவாதம் நடைபெற்றது .செப்டம்பர் 2 வேலை நிறுத்ததை வெற்றி அடைய செய்ய வேண்டிய அவசியம் குறித்து மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் ஜெயக்குமார் ,அஷ்ரப் தீன் ,தங்கதுரை ஆகியோர் பேசினர் .அகில இந்திய மாநாட்டு நிதியாக முதல் தவணை ரூபாய் 12,500 இக் கூட்டடத்தில் வழங்கப்பட்டது .செப்டம்பர் 2 போராட்டத்தை 100% வெற்றி அடைய செய்வோம் என்று கூறி கிளை பொருளர் தோழர் சுந்தரமஹாலிங்கம் நன்றியுரை கூறினார் .










No comments:
Post a Comment